Published:Updated:

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

Published:Updated:
கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கதை விடுறாங்க!
கதை விடுறாங்க!

ன்று காலையிலிருந்து முருகனின் மொபைலில், அரைமணி நேரத்திற்குப் பின்னால் நடப்பது வீடியோவாகத் தெரிய ஆரம்பித்தது...’

- இந்த ஒரு வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய சில ஜாலி கதைகள் இதோ...

புகழேந்தி பக்கிரிசாமி:
அப்புறம் என்ன? எல்லா சீரியல்களையும் அரைமணி நேரத்துக்கு முன்பே பார்த்து, வீட்டில் கதை சொல்லி ஹீரோ ஆகிவிட்டான்.

சண்முக சுந்தரம்: இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டான் முருகன். அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து செல்லை சார்ஜரில் சொருகி ஸ்விட்ச் போட்டதும், அவன் திட்டத்தோடு சேர்த்து மொபைலும் ‘டமால்’ என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இம்ரான் இம்மு: முருகன் வீடியோவை விறுவிறுப்பாக பார்த்துக்கொண்டிருந்தான். அதில் தன் காதலியிடம் முதன்முதலாக காதலை வெளிப்படுத்துவது போன்ற காட்சி ஒளிபரப்பானது. ஆவலுடன் பார்க்கும்போதே அவன் அம்மா அவன் தலையில் ‘டமார்’ என அடித்து, ‘நாயே எப்போ பார்த்தாலும் போனையே நோண்டிட்டு இருக்கே. போனை அடுப்புக்குள்ள போட்டு ஒரு நாள் எரிக்கிறேன்’ என வழக்கம்போலத் திட்டிவிட்டுப் போனார்.

பிரேம் விஜய்: வீடியோவில் மேலாளர் அவனைக் கண்டபடி திட்டி டிஸ்மிஸ் செய்வதாகத் தெரிந்தது. ஆடியோ தெளிவாக இல்லாததால், மேலாளர் எதற்காக தன்னை டிஸ்மிஸ் செய்கிறார் என்று முருகனுக்குக் குழப்பமாக இருந்தது. திரும்பத் திரும்ப அந்த வீடியோவை ப்ளே செய்து பார்த்துக் கொண்டிருக்கும்போது முருகனின் மேலாளர் முறைத்தபடி கோபமாக நின்றுகொண்டிருந்தார். ‘யூ ஸ்டுபிட். அரைமணி நேரத்துல அந்த சேல்ஸ் ரிப்போர்ட் என் கேபினுக்கு வரணும்னு சொல்லி ரெண்டுமணி நேரமாச்சு. நீ இங்கே மொபைல்ல வீடியோ பார்த்துட்டுருக்கே’ எனக் கத்த ஆரம்பித்தார். தான் டிஸ்மிஸ் ஆகப்போகும் காரணம் முருகனுக்கு அப்போது தெளிவாகப் புரிந்தது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism