Published:Updated:

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

Published:Updated:
பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

பதில் சொல்லுங்க பாஸ்!

ஒரு படத்தை நன்றாக ஓடவைக்க சினிமாக்காரர்களுக்கு ஜாலியான ஆலோசனைகள் சொல்லுங்களேன்?

ப்ரேம் விஜய்: எங்கள் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வருபவர்களுக்கு படம் முடியும்வரை அன்லிமிட்டட் வை-ஃபை வழங்கப்படும்னு, டிரெய்லேர்லயே மொட்டை ராஜேந்திரனை விட்டுச் சொல்லச் சொல்லுங்க. சும்மா கூட்டம் அள்ளும்.

பூபதி குணா: ஒரு டிக்கெட் வாங்கினா இன்னொன்னு இலவசம், காதல் ஜோடிகளுக்கு கார்னர் சீட். முதலில் வரும் காதல் ஜோடிக்கு முன்னுரிமை. படம் பார்க்கும்போதே திடீரென்று பட கதாநாயகி உங்கள் முன் வந்து உங்களுடன் செல்ஃபி எடுப்பார், படத்தின் கதையைப் புரிந்து சரியாகச் சொல்பவருக்கு பிரியாணி இலவசம்னு அடுக்கடுக்கா அறிவிப்புகள் வெளியிடலாம்.

ஜெயபிரசாத்: ஏற்கெனவே, இப்போ வர்ற ஹீரோக்களோட படங்கள் எல்லாம் நல்லா ஓடிக்கிட்டுதானே இருக்கு தியேட்டரை விட்டு...

ராஜ்மோகன்: `படத்தை இலவசமா பார்க்கலாம்'னு சொல்லிடுங்க அதுக்கு அப்புறம் தியேட்டருக்கு வெளியே போகணும்னா காசு கொடுத்துப் போகச் சொல்லுங்க! எப்பூடி?

ஈஸ்வர்: கோர்ட்டுல இடைக்காலத்தடை வாங்கணும். அப்புறம் தானாகவே ஓடிடும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதில் சொல்லுங்க பாஸ்!

சினிமாவுக்கு நம்மளை விட்டுவிட்டுத் தனியா படம் பார்க்கப்போன நண்பனை எப்படிப் பழி வாங்கலாம்?

ரவிக்குமார் : அவன் பார்க்கப்போனது `சுறா', `ஆழ்வார்' திரைப்படங்களாக இருந்தால், இன்னொரு முறை பழிவாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஸ்ரீநாத் : அவன் மனைவிக்கு போன் பண்ணி, என்னம்மா இன்னிக்கு கல்யாண நாளா? ரெண்டு சினிமா டிக்கெட் வாங்கிட்டுப் போனான்னு சொல்லுங்க போதும். மீதி க்ளைமாக்ஸை அவங்களே பார்த்துப்பாங்க.

முத்து பாலசந்திரன் : அட விடுப்பா விடுப்பா... அந்தப் படம் பார்க்கிறதே பலி வாங்கினதுக்கு சமம். மறுபடியும் வேறயா?

செண்பகவள்ளி : இப்போ வர்ற படத்தையெல்லாம் தனியா போய்ப் பார்த்ததே, சொந்தக் காசுல சூனியம் வெச்சுக்கிட்ட மாதிரிதான்!

பதில் சொல்லுங்க பாஸ்!

  சினிமாவுக்கும் சீரியலுக்கும் என்ன வித்தியாசம்? சிம்பிளா சொல்லுங்க பார்க்கலாம்...

விஜயகுமார்: அட இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிடுச்சேனு வருத்தப்பட்டா சினிமா. அட இன்னுமா முடியலைனு வருத்தப்பட்டா சீரியல்.

ராகவா ரவி: ஒரே ஒரு பிரச்னையை மையமா வெச்சு கதை நகர்ந்தால் அது சினிமா. ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே பிரச்சனையாவே கதை நகர்ந்தால் அது சீரியல்.

நவீன் பிரியன்: குழாயடிப் பிரச்னை மாதிரி உடனே முடிஞ்சதுனா அது சினிமா. காவிரிப் பிரச்னை மாதிரி முடியாமப் போய்க்கிட்டே இருந்தா அதுதான் சீரியல்.

பூபதி குணா: நீட்டி முழக்கினா அது சீரியல், நீட்டி முழங்கினா அது சினிமா, ஏய்ய்...ய்...ய்... (கோட்டா ஸ்ரீநிவாசராவ் வாய்ஸில் ஏய் படிக்கவும்.)

ஜெயசீலன்: சினிமாவில் அடிச்சுக் கொல்வாங்க... சீரியல்ல அழுது கொல்வாங்க.

மாலிக் அப்துல் வஹாப்: சினிமா- சவுக்கடி. சீரியல்- சாவடி.

கணேசன்: தலைப்புச்செய்தி - நேரலை. ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

மகாதேவன்:
அழுதுகிட்டே பாத்தா - சீரியல். பார்த்துட்டு வந்து காசு போச்சேனு அழுதா - சினிமா.

பதில் சொல்லுங்க பாஸ்!

`இருமுகன்' படத்தில் வரும் ஸ்பீடு மருந்தைப் போல நீங்கள் கண்டுபிடிக்க விரும்பும் மருந்து எது? ஏன்? ஜாலியான பதில்களைக் கொட்டுங்க பாஸ்...

சண்முக சுந்தரம்:
பசிக்காம இருக்கிறதுக்குத்தான் மருந்து கண்டுபிடிக்கணும். ஏன்னா அதானாலதான் வீட்டிலேயும் நாட்டிலேயும் நிறைய பிரச்னை வருது!

ப்ரீத்தி விவேக்: Listen-னு ஒரு மருந்து கண்டுபிடிக்கணும். அதைக் கணவன்மார்களுக்குக் கொடுக்கணும். நாம் ஏதாவது பேசப் போனால் கையில் போன், இல்லை டி.வி ரிமோட் இருக்கும். நாம அம்மா கதையில் ஆரம்பிச்சு.. அமெரிக்கா அத்தை வரைக்கும் விஷயம் போயிருக்கும்.. அப்போ திடீர்னு 20 நிமிஷம் கழிச்சு... ஆமா உங்க அம்மாவுக்கு என்னன்னு கேட்பாங்க பாருங்க ஒரு கேள்வி...

ஆர்.ஜே தமிழன்:
கேர்ள்ஃப்ரெண்டோ-டிப்பிலியா அப்டிங்கிற மருந்தைக் கண்டுபிடிப்பேன். பொண்ணுங்க ஷாப்பிங், ரீசார்ஜ்னு பசங்களை எதுனா கேட்டா, இந்த மருந்தைக் கொடுத்தால் போதும். அவங்க அப்பா பர்ஸ்ல இருந்து காசு எடுத்துட்டு வந்துடணும்.

நல்லவன் பாலா:
மாசத்தில் 20 ஞாயித்துக்கிழமையும், 5 ஒண்ணாந்தேதியும் வர்ற மாதிரி மருந்து கண்டுபிடிக்கணும் பாஸ்!

ராவண்: `ஸ்லோ மருந்து' லீவு நாள்ல அதைப் போட்டுக்கிட்டா நாள் மெதுவாப் போகும்ல.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism