Published:Updated:

அடாவடி நட்பே..!

அடாவடி நட்பே..!
பிரீமியம் ஸ்டோரி
அடாவடி நட்பே..!

அடாவடி நட்பே..!

அடாவடி நட்பே..!

அடாவடி நட்பே..!

Published:Updated:
அடாவடி நட்பே..!
பிரீமியம் ஸ்டோரி
அடாவடி நட்பே..!

வ்வளவு நெருங்கிய நண்பனா இருந்தாலும், நம்ம பசங்க சில விஷயங்களை அடிச்சுக் கேட்டாக்கூட தர மாட்டாங்க. அப்படி விடாப்பிடியா எந்த விஷயத்துக்கெல்லாம் அடாவடி பண்றாங்க என்பதற்கு சில உதாரணங்கள்...

அடாவடி நட்பே..!
அடாவடி நட்பே..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுசா ஒருத்தன் பைக் வாங்கினா அவன்கூட அன்னம் தண்ணி பொழங்குறதைக் குறைச்சுக்கிறது நம்ம ஹெல்த்துக்கு நல்லது. அவசரத்துக்கு பைக் வேணும்னு வெட்கத்தை விட்டுக் கேட்டா, ‘மச்சி, பைக்கை நான் பொண்டாட்டி மாதிரி மெயின்டெய்ன் பண்றேன்டா’னு நெஞ்சாங்கூட்டில் உருட்டுக்கட்டையால் தாக்குவாங்க. #டேய் டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா!

அடாவடி நட்பே..!

`வெளில காயப்போட்டுருக்கிற சட்டை நல்லாருக்கே'னு நீங்க யோசிக்க ஆரம்பிச்சதுமே... ‘எடுத்துடாதே... என் ஆளு கொடுத்தது’னு கேட்டைப் போடுவாங்க. நம்ம மைண்ட் வாய்ஸ் அவ்வளவு சத்தமாவா கேட்குது?! #நல்லாயிருடா!

அடாவடி நட்பே..!

`மொபைல் லாக் எடுத்துக்கொடு மச்சி'னு உங்க ஃப்ரெண்ட்கிட்ட சும்மா கேட்டுதான் பாருங்களேன்! `என் மொபைல் உனக்கெதுக்கு?'னு ஆரம்பிச்சு சி.பி.ஐ. ஆபீஸர்ஸை விட பயங்கரமா கேள்விகள் கேட்டு உங்களை விசாரணைக் கைதியாக்கிடுவாங்க. `ஒரேயொரு கால் பண்ணத்தான்டா கேட்டேன்!'னு சூடம் ஏற்றி சத்தியம் பண்ணாலும் நம்பவே மாட்டாய்ங்க. #நம்பிக்கை அதானே எல்லாம்!

அடாவடி நட்பே..!

சில பசங்களுக்கு அவங்ககிட்ட கடன் கேட்கிறதும் பிடிக்காது, கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டாலும் பிடிக்காது. `நானே பிச்சைதான் எடுக்குறேன்'னு சிம்பிளா சொல்ற பசங்களுக்கு எப்படித்தான் அரேபியன் ஹோட்டல் போய் செல்ஃபி போட மனசு வருதோ! #காசைக் கொடுடா!

அடாவடி நட்பே..!

ரொம்ப முக்கியமான விஷயம் இது. ஃப்ரெண்ட்கிட்ட கொடுத்த பென்-ட்ரைவ் திரும்ப வந்ததா இதுவரை எஸ்.டி.டீயே கிடையாது. நண்பன் கேட்டா உயிரையே தருவேன்னு சொல்ற சூர்யாக்கள் சினிமாவில்தான் பாஸ் அதிகம்! #என் பென்-ட்ரைவ் என் உரிமை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism