Published:Updated:

கொக்கிபீடியா - மு.கருணாநிதி

கொக்கிபீடியா - மு.கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
கொக்கிபீடியா - மு.கருணாநிதி

கொக்கிபீடியா - மு.கருணாநிதி

கொக்கிபீடியா - மு.கருணாநிதி

கொக்கிபீடியா - மு.கருணாநிதி

Published:Updated:
கொக்கிபீடியா - மு.கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
கொக்கிபீடியா - மு.கருணாநிதி
கொக்கிபீடியா - மு.கருணாநிதி

பெயர்: மு.கருணாநிதி

பிறப்பு: 3 ஜூன் 1924

வயது: 92

இருப்பிடம்: கோபாலபுரம்

மு.கருணாநிதி என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.

திரையுலகப் பங்களிப்பு:

கருணாநிதி அவர்கள் நிறைய படங்களுக்குப் பல மை பாட்டில்கள் செலவு செய்து கதை, வசனம் எழுதியிருக்கிறார். ‘பராசக்தி’, ‘பூம்புகார்’, ‘மனோகரா’ என நிறைய படங்கள் வந்திருந்தாலும் இவர் கைவண்ணத்தில் உருவான ‘பெண்சிங்கம்’, ‘உளியின் ஓசை’, ‘இளைஞன்’, ‘பொன்னர் சங்கர்’ போன்ற படங்கள் மிகவும் முக்கியமானவை என அந்தப் படங்களைப் பார்த்த, பெயர் சொல்ல விரும்பாத சிலரைத் தேடிக் கண்டுபிடித்துக் கேட்டறியப்பட்டுள்ளது. ‘பூம்புகார்’ படத்தின் ஆரம்பத்தில் கண்ணாடியைக் கழற்றிவைத்து, சால்வையை ஸ்டைலா, கெத்தா போர்த்திக்கொண்டு பக்கம் பக்கமாய் வசனம் பேசும் அந்தக் காட்சி பக்கா மாஸ். இன்னைக்கு ஊருக்குள்ள ரெட் ஜெயன்ட், கிளவுட் நைன், சன் பிக்சர்ஸ், மோகனா மூவிஸ்னு பலரும் இவர் குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்குக் கிளம்பி வந்திருக்காங்கன்னா... அதுக்கு விதை இவர் போட்டது!

சட்டமன்றப் பொறுப்புகள்:

ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

தற்போது திருவாரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

சாதனைகள்:

பஸ் முழுக்க ‘விவேகம் எனும் வெள்ளி முளைத்து...’, ‘நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது’ என எழுதவைத்து நம் ஊர் மக்களுக்கு ரைமிங், டைமிங் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தியதே இவர்தான். ‘கடைக்குப் போய் வாங்குன பாட்டிலை குடிச்சுப்போட்டானாம், குடிச்சுப் போட்ட பாட்டிலை எடுத்து எடைக்குப் போட்டானாம்’ போன்ற ரைமிங் வசனங்களில் பின்னிப் பெடல் எடுப்பார். ‘பழம் நழுவிப் பாலில் விழும்’ எனப் பால் குண்டாவைப் பிடித்துக்கொண்டு பல மணிநேரம் காத்திருந்த மனிதர் என்ற சாதனையைக்கூட சமீபத்தில்தான் சாத்தியமாக்கினார். இவர் எழுதிய ‘செம்மொழியான தமிழ் மொழியாம்...’ பாடலில்தான் சமந்தா முறுக்கு சுடும் காட்சி வரும். தேர்தல் சமயங்களில் டி.வி-யில் டேபிள் டென்னிஸ் போட்டாலும் பார்ப்பார். அரசனூர் சிறுவர்கள் நடத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ‘கபால் குபால்’ கிரிக்கெட் குழுவினருக்கும் வாழ்த்துகள் சொல்வார். தேர்தல் சமயங்களில் விளையாட்டைப் பற்றிய செய்தி என்றால் ‘பொதிகை டி.வி’ சுமந்த் சி.ராமனுக்கே `டஃப் பைட்’ கொடுப்பார் நம் தலைவர். ‘மோடிக்கு எப்படிப் பத்து மணிக்கே ரிசல்ட் தெரிந்தது?’, ‘கன்டெய்னர் பணம் எங்கிருந்து வந்தது?’, ‘குண்டு பல்பைக் கண்டுபிடிச்சது யார்?’ எனக் கணக்கு வாத்தியார் போல் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு கிறுக்குப் பிடிக்க வைப்பார். ஆனால், `அந்த 1,76,000 கோடி ரூபாய் என்னாச்சு?’ எனக் கேட்டால் வழக்கம் போல ‘சாதிமல்லி, குண்டுமல்லி, வாடாமல்லி... போரூர் தாண்டுனா பூந்தமல்லி’ என சமாளித்து எஸ்கேப் ஆகிவிடுவார். எல்லாவற்றிற்கும் மேல் இவர் ஆட்சியில் இருந்தபோது மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஏன்னா, யாருக்கும் வாக்கிங் போகணும்னுகூட தோணலை.  மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் இவர் ஆட்சியில் இல்லவே இல்லை என நெஞ்சு நெஞ்சாய் அடித்துக்கொண்டு பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்.

குழப்பங்கள்:

‘குழப்பங்கிறது சாயங்காலம் தூங்கி எழுந்து வானத்தைப் பார்க்கிறது மட்டுமில்லை... அதுக்கும் மேல’ எனப் புரியவைத்ததே இவர்தான். ரம்ஜான், கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்துவார். ஆனால், என்ன மாதிரியான டிசைனோ தீபாவளிக்கு வாழ்த்த மாட்டார். இந்தச் ‘சுத்தலில் விடும்’ பிரச்னையில் இருந்து அவர் விடுபட வாழ்த்தலாமே ஃபிரெண்ட்ஸ். முத்தமிழ் அறிஞரான இவரின் பேரன் உதயநிதிக்கு தமிழில் ஏன் ஒரு நல்ல டைட்டில் கிடைக்க மாட்டேங்குது என்பது மற்றொரு குழப்பம். அதிலும், ‘மனிதன்’ தமிழ்ச் சொல்லா, இல்லையா என்பது குழப்பத்திற்கெல்லாம் குழப்பம். இதைவிட நீங்கள் குழம்ப வேண்டுமா... கலைஞர் தொலைக்காட்சியில் தலைவர் கொடுக்கும் பேட்டிகளைப் பாருங்கள். குழப்பம் அதிகமாகி மண்டையில் கொப்பளமே வந்துடும்.

மேலும் பார்க்க: (பக்க விளைவுகளுக்கு கொக்கிபீடியா பொறுப்பல்ல...)

இளைஞன், உளியின் ஓசை, பெண் சிங்கம்

மேலும் படிக்க:

கட்டுமரக் காவியம், பாசத்தலைவனுக்குப் பாராட்டுக் கவிதை, கேள்விகள் பல, கூடா நட்பு டாடா உப்பு, அடங்காமை அம்மையார்

- ப.சூரியராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism