Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
பிரீமியம் ஸ்டோரி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Published:Updated:
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
பிரீமியம் ஸ்டோரி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்கடோய்’ மொமண்ட்:

காங்கிரஸ்னாலே சும்மா கலகல, பொலபொலன்னு சண்டை போடுறது வாடிக்கைதானே. தீபாவளிப் பட்டாசு மாதிரி திகுதிகுன்னு கொளுத்துற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவிக்கு ஆப்பு விழுந்ததுமே ஆஃப் ஆகிட்டார். திருநாவுக்கரசர் வந்ததுமே தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் யாரையெல்லாம் கட்சியை விட்டு நீக்கினாரோ, அத்தனை பேரையும் கட்சிக்குள்ள சேர்த்திருக்கார். அட, காங்கிரஸில் இதெல்லாம் சாதாரணமப்பா!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தட் ‘இதுதானா சார் உங்க டக்கு’ மொமண்ட்:

‘விவசாயிகளிடம் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாகப் பேசினார்’ங்கிற செய்தியைப் படிச்சதும் ‘ஒருவேளை காவிரிப் பிரச்னை பத்திக் கர்நாடக விவசாயிகளிடமும் தமிழக விவசாயிகளிடமும்தான் பேசினார்’னு நினைச்சேன். கடைசியில்தான் தெரிஞ்சுது, அவர் வெட்டிவேர் சாகுபடி பத்தி விலாவாரியாப் பேசியிருக்கார். ஆமா மோடி ஜி, காவிரி எங்கே இருக்கு அது கஜகஸ்தான் பக்கம், ஆப்கானிஸ்தான் பக்கம் இருக்கு!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘நல்லா சொன்னார்யா டீட்டெய்லு' மொமண்ட்:

`‘அரசியல் கட்சிகள் தனித்தனியா நின்னாத்தான் அந்தந்தக் கட்சிகளோட பலம் தெரியும்’’னு சொல்லியிருக்கார் இல.கணேசன். உண்மைதான். யாருமே கூட்டணி அமைக்காததால சட்டமன்றத் தேர்தலில் தனிச்சு நின்னாங்க தாமரைக் கட்சிக்காரங்க. இப்போ பாருங்க, இல.கணேசனால தமிழ்நாட்டில் ராஜ்யசபா எம்.பி. ஆகமுடியாம, மத்தியப்பிரதேசத்தில் ராஜ்யசபா எம்.பி. ஆகியிருக்கார்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ மொமண்ட் :

வலது பக்கம் போனா வாஸ்து சரியில்லை, இடதுபக்கம் போனா இடம் சரியில்லைங்கிற மாதிரி ஆகிடுச்சு ஜி.கே.வாசனுக்கு. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வோட கூட்டணி பேசினார்னு சொன்னாங்க. அ.தி.மு.க.வோ அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே காட்டிக்கலை. அப்புறம் பா.ஜ.க. பக்கம் வண்டியைத் திருப்பி மக்கள் நலக்கூட்டணிக்கு வந்து சேர்ந்தாரு. அதுக்குள்ள கட்சியில் இருந்து பலபேர் கழண்டுட்டாங்க. அப்புறம் மக்கள்நலக்கூட்டணியும் புட்டுக்கிச்சு. இப்போ தி.மு.க.வோடு கூட்டணி உறுதின்னு சொன்னாங்க. அவங்க ஆட்டோவைத் திருப்பிட்டு, திருநாவுக்கரசரை ஏத்திக்கிட்டாங்க. இப்போ ‘தனித்துப் போட்டி’னு அறிவிச்சிட்டார் ஜி.கே.வாசன். ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’கிற கதை ஞாபகத்துக்கு வருதா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism