Published:Updated:

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

Published:Updated:
பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பதில் சொல்லுங்க பாஸ்!
பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

 தற்போதைய நினைவுகளோடு உங்களுக்குத் திடீரென பத்துவயது குறைந்தால் என்ன செய்வீர்கள்?

பூபதி குணா:
இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்திருக்கவே மாட்டேன். இன்ஜினீயரிங் படிச்சா நல்ல எதிர்காலம் இருக்குனு யார் சொன்னாலும் பெரிய கும்பிடு போட்டு அனுப்பியிருப்பேன். பத்து வருடம் கழிச்சு உலகம் இப்படியெல்லாம் இருக்கும், இதெல்லாம் நடக்கும்னு ஜோசியம் சொல்லிப் பொழச்சிக்குவேன்! 

ஸ்ரீநாத்: பாஸ்! நாங்க ஆல்ரெடி 10 வயசைக் குறைச்சிட்டு ஃபேக் ஐ.டி-யில்தான் நடமாடுறோம். கிளம்புங்க!

பதில் சொல்லுங்க பாஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரவணன்: எந்த எந்தக் கேள்வி எக்ஸாம்ல வரும்னு சொல்லி பொண்ணுங்ககிட்ட சீன் போட்ருப்பேன்.

குமரகுரு: கண்டிப்பா பத்து வயசு குறைஞ்சிடுவேன் பாஸ்!

 தே.மு.தி.க-வில் இருந்து தொடர்ந்து விக்கெட்டுகள் சரிவதைத் தடுக்க கேப்டனுக்கு ஜாலியான டிப்ஸ் கொடுங்களேன்?

திலீபன்: விக்கெட் சரிவைத் தடுக்க இருக்கும் ஒரே வழி விக்கெட்டுகளை ஒழுங்காக அடுக்கி வைப்பதுதான். - இப்படிக்கு கேப்டனின் `அடி'விழுதுகள்!

பதில் சொல்லுங்க பாஸ்!

தங்க சரவணன்: கட்சியில் இறுதிவரை இருக்கும் தொண்டர்களுக்கு `வாழ்நாள் சாதனையாளர்' பட்டம் வழங்கி கெளரவிக்கலாம்!

பிரபு தேவ்: மீம் கிரியேட்டர்களைத் தேடிக் கண்டுபிடித்து கட்சியில் சேர்த்தா, கட்சி வலிமை அடைய வாய்ப்பு இருக்கு.

 ஜே.பி.ஜே டான்: கேப்டன் அடித்து விளையாடாமல் இருந்தாலே போதும். விக்கெட் விழாமல் இருக்கும்.

அபுல் ஹசன் அலி: எல்லாக் கோட்டையும் அழிங்க, புதுசா கட்சி ஆரம்பிக்கலாம்.

வருங்காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய என்ன மாதிரியான அதிரடி அறிவிப்புகள் வரும்?

சண்முக சுந்தரம்: அதிகமா ஷாப்பிங் பண்றவங்களுக்கு நெட் பேக் இலவசம்னு அறிவிப்பு வரலாம்.

 ப்ரேம் விஜய்: தீபாவளி ஆஃபர், ஆடி ஆஃபர்னு இப்பவே ஆன்லைன்ல ஆரம்பிச்சிட்டாங்க. கூடிய சீக்கிரம் கிருத்திகை ஆஃபர், பெளர்ணமி அமாவாசை ஆஃபர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விக்கிரமாதித்யன்: அதிகமா ஷாப்பிங் பண்றவங்களுக்கு பேஸ்புக்கில் 100 லைக்ஸ் இலவசம்னு அறிவிக்கலாம்.

மணி: அறிவிப்புகளை விடுங்க. இன்னும் ஆயிரத்தெட்டு மொபைல் அப்ளிகேஷன்கள் கண்டிப்பா வரும்.

 உள்ளாட்சித் தேர்தல் குறித்து மூன்று வரிகளில் ஒரு கவிதை எழுதுங்களேன்?

அசோக் குமார்: வரப்போகுது ஓட்டுக்கு துட்டு; ஆரத்தி கரைச்சு வாசல்ல கொட்டு; வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா கொஞ்சம் துட்டு.

பதில் சொல்லுங்க பாஸ்!

தேன்மொழி: ஹேய் இது உள்ளாட்சி... உனக்கு கிடைக்கப்போறதில்லை நல்லாட்சி... நான் சொல்றதுக்கு இந்த நாடே அத்தாட்சி... டன்டனக்கா உனக்கு டனக்குனக்கா...

குமரவேல் ரகு: ஓட்டுக் கேட்டு வருவோம் வீட்டுக்கு... ஜெயிச்சா வேலை செய்வோம் காந்தி நோட்டுக்கு!

ராஜசேகர்: கவிதையெல்லாம் வரலை பாஸ். தேர்தல் வந்தாலே கடுப்புதான் வருது!

பதில் சொல்லுங்க பாஸ்!

 சமீபத்தில் நீங்கள் அசடு வழிந்த சம்பவம் எது?

பிரபு: நண்பனின் வை-ஃபை பாஸ்வேர்டு எனக்குத் தெரியும் என்பது அவனுக்குத் தெரிந்தபோது.

மயிலை தயாளன்: மூணுவாரம் ஆச்சு, இன்னும் எங்க வீட்டில் அசைவம் வாசனை வராததை அம்மாவிடம் நாசூக்காகக் கேட்டபோது.

ஹசன் கலீபா:
'தொடரி' படம் நல்லாருக்குதுனு படம் பார்க்காமலேயே நண்பர்களிடம் சொன்னபோது.

அருண்:
மேனேஜர் மாதிரி மிமிக்ரி பண்ணும்போது அவரே திடீரென என்ட்ரி கொடுத்தப்போ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism