Published:Updated:

வார்த்தை தவறிவிட்டாய்!

வார்த்தை தவறிவிட்டாய்!
பிரீமியம் ஸ்டோரி
வார்த்தை தவறிவிட்டாய்!

வார்த்தை தவறிவிட்டாய்!

வார்த்தை தவறிவிட்டாய்!

வார்த்தை தவறிவிட்டாய்!

Published:Updated:
வார்த்தை தவறிவிட்டாய்!
பிரீமியம் ஸ்டோரி
வார்த்தை தவறிவிட்டாய்!

னுசனாப் பொறந்த எல்லோரும் தப்பு பண்றது சகஜம்தான். அதுலேயும் இந்த மொபைல் கீபோர்ட்ல இருக்கிற ஆட்டோ கரெக்‌ ஷன் ஆப்ஷன் இருக்கே, யப்பா... நாம ஒண்ணு டைப் பண்ணா, வேற ஒண்ணு டைப் ஆகி சில நேரங்கள்ல நம்மை பப்பி ஷேம் பண்ணிடும். இந்த எழுத்துப் பிழைக்கு நம்ம உலக நாயகனும் தப்பவில்லை. ``நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது. நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக்கமண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும்'' என சமீபத்தில் அவர் ட்வீட் செய்ய... மொத்த ட்விட்டர் உலகமும் யாரை இவர் திட்டுறார்னு பதறிப்போனது. பின்பு அது சரித்திரக் கண்ணாடி என அவரே திருத்தம் செய்தார்.  இப்படி உலகநாயகன் தொடங்கி உள்ளூர் நண்பர்கள் வரை செய்யும் சின்னச்சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளைப் பார்க்கலாமே ஃப்ரெண்ட்ஸ்!

வார்த்தை தவறிவிட்டாய்!

ரு சிறுகதையை வாசிக்கும்போது `அவளை முதல்முறையாகப் பார்த்தபோதே காலில் விழுந்தேன்' என்றிருந்தது. ஃபர்ஸ்ட் மீட்லேயே காலில் விழுந்து சரண்டர் ஆகிருக்கார்னு பார்த்தால் `காதலில்'தான் `த' தவறி `காலில்' விழுந்திருக்கு!

ண்பர் ஒருவர் பஸ்ஸில் பயணம் செய்தபோது, ஃபேஸ்புக்கில் சக நண்பருக்கு `பிறந்தநாள் வாழ்த்துகள்' என டைப் செய்வதற்குப் பதில் பஸ் ஆட்டத்தில் `பிரழ்ந்தநாள் வாழ்த்துகள்' என டைப் செய்ய... பாவம் அந்த நண்பர் பிறந்தநாள் அதுவுமாய் மண்டையைப் பிய்த்தபடி அலைந்திருப்பார்.  
என் நண்பன் பேசும்போது எப்போதும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடுதான் பேசுவான். `ஜெல்வி செயலலிதா' என்பான். `ஆமாம் தானே' என்று கேட்பதற்கு, `ஆம் வா' என்று கேட்பான். `மஜாஸ் சென்டர்' என்பான். 

போனவாரம் ஜெய்ஆகாஷ் நடிக்கிற `அமாவாசை'னு ஒரு படத்தோட போஸ்டரைப் பார்த்தேன். `மியூசிக்கல் ஹரர்'னு போட்டிருந்தாங்க. ஹாரர் தெரியும். அதென்ன `ஹரர்'. `சரவணர்' மாதிரி மரியாதையா சொல்றாய்ங்களோ?

ன்னொரு ஃப்ரெண்ட் `பொன்', `பெண்' இரண்டையும் அடிக்கடி குழப்பிக்குவான். எழுதும்போது உல்ட்டாவா தப்பாவே எழுதுவான். கடைசிவரை ஃபிகரே செட் ஆகாத அவனைப் பார்த்து ஒட்டுமொத்த ஃப்ரெண்ஸும், பொண்ணைத்தான் கரெக்ட் பண்ண முடியலை. பொண்ணுன்னு எழுதுறப்போவாவது கரெக்ட்டா எழுதுடான்னு பன்ச் விட்டே பஞ்சராக்கினாங்க. #பாவத்த!

ப்படி பல தவறுகளைப் பார்த்துப் பழகிட்டதுனால, எவன் எங்கே தப்பா டைப் பண்ணாலும் நமக்கு நரம்பு புடைச்சிடுது. இப்படித்தான், ஒருமுறை என் ஃப்ரெண்டுக்கு `தெருமுருகன்'கிற பேர்ல ஒரு போன் வந்தது. `ஏன்டா திருமுருகன்னு எழுதத் தெரியலை. நீயெல்லாம் என்னத்தை டிகிரி முடிச்ச'ன்னு மானாவாரியா மண்ணைத் தூவுனேன். இடையில தடுத்தவன், 'டேய்... எங்க தெருவுல இருக்கிற `முருகன்'ங்கிற என் நண்பனைத்தான்டா, `தெரு முருகன்'னு ஷேவ் பண்ணியிருக்கேன்'னு சொல்லி, பளீர் பல்பு கொடுத்துட்டுப்போனான். #உங்க கற்பனையில கலப்பட ஈயத்தைக் காய்ச்சித்தான்டா ஊத்தணும்!

- ராஜபாளையம் கருப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism