Published:Updated:

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

Published:Updated:
கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கதை விடுறாங்க!

``பல வருட உழைப்பில் தானே உருவாக்கிய `டிரைவர்' இல்லாமல் இயங்கும் காரில் ஏறிய அரவிந்த்...''

இந்த ஒரு வரியை டெவலப் செய்து, டைம்பாஸ் வாசகர்கள் சொன்ன குட்டிக் கதைகள் இதோ...

கதை விடுறாங்க!

முருகவேல்: செல்ஃபி எடுத்து முகநூலில் போஸ்ட் செய்தான். கொஞ்சநேரத்தில் அவன் சொந்த ஐ.டி-யில் ஐந்து லைக்ஸும், ஃபேக் ஐ.டி-யில் 500க்கும் மேற்பட்ட லைக்ஸும் வந்திருந்தன.

நித்தீஷ்: `பிரேக்' ஆப்ஷனே இல்லாத அந்தக் காரை எடுத்துக்கொண்டு சென்றான். அடுத்தநாள், `குடிபோதையில் காரை ஓட்டிய வாலிபர் பலி' எனத் தலைப்புச் செய்தி வந்திருந்தது.

பிரவீன் ராம்: பெட்ரோல் விலை உயர்வு என்ற செய்தியைப் பார்த்ததும், இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

அருண்ராஜ்: கார் சக்கரத்துக்குக் கீழே எலுமிச்சைப் பழத்தை வைக்க மறந்துவிட்டதால், இறங்கிக் கடைக்கு ஓடினான்.

ஜான்சன் குமார்: அரவிந்துக்கு முன்னாடியே அந்த டிரைவர் இல்லாத காரை சல்மான்கான் வெச்சிருந்தாரு. இப்போ அந்தக் காரை யாரு வெச்சிருக்காங்கனு தெரியாம இருந்துச்சு. இதோ, மாட்டிக்கிட்டான்!

சண்முக சுந்தரம்: அரவிந்திடம் அவன் தந்தை, ``இந்தக் காலத்துல விவசாயம் பார்க்க ஆளுங்க கிடைக்கமாட்டேங்குறாங்கய்யா... இப்போதைக்கு டிரைவர் இல்லாம ஓடுற காரு தேவையில்லை. விவசாயிகள் இல்லாம சோறு கிடைக்கிற மாதிரி ஏதாவது கண்டுபிடிப்பா'' எனச் சொன்னதும், கண்கலங்கினான் அரவிந்த்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism