Published:Updated:

30 வயதினிலே...

30 வயதினிலே...
பிரீமியம் ஸ்டோரி
30 வயதினிலே...

30 வயதினிலே...

30 வயதினிலே...

30 வயதினிலே...

Published:Updated:
30 வயதினிலே...
பிரீமியம் ஸ்டோரி
30 வயதினிலே...

யிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் இருபதுகளைக் கடந்து, 30 வயதின் தொடக்கத்தில் இருக்கும்போது, `அப்புறம் தம்பி... எப்போ கல்யாணம்?'ங்கிற கேள்வி வந்து எரிச்சலூட்டும். இதையெல்லாம் தாண்டி முப்பதின் தொடக்கத்திலும் உங்கள் மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ள சிலபல ஆறுதல் டிப்ஸ்!

30 வயதினிலே...

•  கல்லூரி பியூட்டி, `அண்ணா' என்று அழைத்து நாம் அவமானப்பட்டதை     வெட்கமே இல்லாமல் நண்பர்கள் கும்பலாக இருக்கும்போது உளறிக்கொட்டுவோம். 30 வயதாகும்போது இந்தப் பிரச்னையே இருக்காது. ஏன்னா, கெஞ்சிக் கூப்பிட்டாக்கூட நான் ரெம்ப பிஸின்னு சீனைப்போட்டு ஒரு பயலும் வரமாட்டானே! தனியா உட்கார்ந்து புலம்பினா யார் என்ன கேட்க முடியும்ங்கிறேன்? இதைச் சொன்னா நம்மளை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• தப்பு நம்ம மேலயே இருந்தாலும், `செத்துப்போன என் பாட்டி சத்தியமா நான் இல்லைப்பு'னு அடுத்தவன் பக்கமா கையைக்காட்டி எஸ்கேப் ஆகிறதுதான் இளம் பருவத்தின் வழக்கம். வயதாகும்போது `சொதப்புனா ஒத்துக்கணும்' என்ற ஜென் நிலையை அடைந்திருப்போம். அதையும் மீறிக் கலாய்த்தாலும், `ஆமாடா நான்தான்...இப்போ என்ன அதுக்கு?' என சந்திரமுகி மோடுக்கு மாறி டரியலாக்குவோம். ஒரு பய கிட்ட வர முடியாதுல்ல!

• இளம் வயசில் கையைக் கிழிக்கிற அளவுக்கு ஸ்பைக் வைக்கிறது, காரக்குழம்பைக் கரைச்சு ஊத்துன மாதிரி ஹேர் கலரிங் பண்றதுன்னு அப்பாவோட பர்ஸை ஹெவியா காலி பண்ணியிருப்போம். இப்போ என்னதான் சொந்தமா சம்பாதிக்க ஆரம்பிச்சிருந்தாலும், முன் வழுக்கையைக் கவர் பண்ற மாதிரி தலையை வாரி சீவறதைத் தவிர வேற ஆப்ஷனே இல்லை நமக்கு. விடுங்க பாஸ், பர்ஸுக்கு நல்லது!

• துன்பம் வரும்போது சிரின்னு வள்ளுவர் சொன்னதோட அர்த்தமெல்லாம் வயசாக வயசாகத்தான் புரியும். வாழ்க்கை நம்மை மல்லாக்கப்போட்டு கும்மாங்குத்து குத்தினாலும் வடிவேலு மாதிரியே சிரிச்சமேனிக்கு அணுகுற அந்தப் பக்குவம்லாம் 30 வயசானா மட்டும்தான் பாஸ் வரும். ஆனா ஒண்ணு... டீன் ஏஜ் பொண்ணும், அவங்க அம்மாவும் நடந்துவந்தா, யாரை சைட் அடிக்கிறதுன்னு வர்ற குழப்பத்தை மட்டும் மாத்தவே முடியாது. ஏன்னா, நம்ம வயசு அப்படி பாஸ்!

மிக முக்கியக் குறிப்பு: எனக்கு இன்னும் 30 வயது ஆகவில்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் மக்கழே... தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

- ராஜபாளையம் கருப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism