Published:Updated:

எல்லாமே ஸ்டேட்டஸ்தான்!

எல்லாமே ஸ்டேட்டஸ்தான்!
பிரீமியம் ஸ்டோரி
எல்லாமே ஸ்டேட்டஸ்தான்!

எல்லாமே ஸ்டேட்டஸ்தான்!

எல்லாமே ஸ்டேட்டஸ்தான்!

எல்லாமே ஸ்டேட்டஸ்தான்!

Published:Updated:
எல்லாமே ஸ்டேட்டஸ்தான்!
பிரீமியம் ஸ்டோரி
எல்லாமே ஸ்டேட்டஸ்தான்!
எல்லாமே ஸ்டேட்டஸ்தான்!

விடிந்தது முதல் உறங்கும்வரை வாட்ஸ்-அப் பக்கத்திலேயே அமர்ந்து பல்லாங்குழி விளையாடும் நம் பாசக்காரப் பக்கிகள் அதில் வைக்கும் ஸ்டேட்டஸ்களும், ப்ரொபைல் பிக்சர்களும் அதகளக் குறியீடு ரகம்! இவர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்களே இவர்களின் குணாதிசயங்களைப் பற்றிச் சொல்லும். `உன் நண்பனைப் பற்றிச் சொல்; உன்னைப்பற்றிச் சொல்கிறேன்' என்பதெல்லாம் பழசு. `உன் ஸ்டேட்டஸைக் காட்டு. உன்னைப்பற்றிச் சொல்கிறேன்.' இதுதான் இப்போ ட்ரெண்டு!

பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா?: சிவில் இன்ஜினீயராக வேலை செய்யும் நண்பனின் ஸ்டேட்டஸ் `Status on construction.' எலெக்ட்ரானிக்ஸ் படித்த ஒருவனின் ஸ்டேட்டஸ் `Be like a transistor. Sometimes as a switch, or as a amplifier.' ஹலோ பாஸ்... நீங்க என்ன குப்பையைக் கொட்டிக்கிட்டு இருக்கீங்கனு உங்க லிஸ்ட்ல இருக்கிற எல்லோருக்கும் தெரியும். அதுக்குனு இப்படியா?

ஆஹான்: இன்னொருத்தர் இன்னும் டீப்பா போறாராமா... போனா போகுதுன்னு நேரம் ஒதுக்கி எல்லோருடைய ஸ்டேட்டஸையும் பார்த்துப் பொழுதை ஓட்டலாம்னு வந்தால் `என்னோட ஸ்டேட்டஸ் பார்க்கிறதுதான் உனக்கு வேலையா? போய் பொழைப்பைப் பாருங்கடா...' ன்னு ஸ்டேட்டஸ் வெச்சுருப்பாரு. ஆமா... யாரைச் சொல்லியிருப்பாரு? நம்மளையா.. அய்யோ... இருக்காது இருக்காது.

நம்பர் ஒன்: உலகத்திலேயே அதிகப் பேர் வெச்சுருக்கிற பொதுவான ஸ்டேட்டஸ் `Hey there! I am using WhatsApp' தான் என்கிறது ஓர் டுபாக்கூர் ஆய்வு. கொஞ்சம் மூளையின் மேற்பகுதியைச் சுரண்டிப் பார்த்தால் இந்த வகை ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்கள்தான் வாட்ஸ்-அப்பை குறைவாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற நகைமுரண் புலப்படும்.

நாசமாப் போ: `இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்'ங்கிற டோன்லேயே மண்ணை வாரிக் குத்துமதிப்பா போற வர்றவங்க மேல அள்ளிப்போடுற கோபத்தோடு ஸ்டேட்டஸ் வைத்திருப்பார்கள். கொடுமை என்னன்னா, இதுபோன்ற ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்களில் பாதிப்பேருக்கு காதல் தோல்வி இருக்கலாம் என்கிறது ஒரு புள்ளிவிபரம். (ஆதாரம் எல்லாம் கேட்கப்படாது!) ஏன்யா... அந்தப்புள்ள உன்னை விட்டுட்டுப்போனதுக்கு உலகத்தையே சபிச்சு ஸ்டேட்டஸ் வைக்கிறதெல்லாம் நல்லாவா இருக்கு?

முதலில் யார் சொல்வது... யார் சொல்வது அன்பை: காதலைச் சொல்லாமல், காதலிக்குக் குறிப்பால் உணர்த்த முயலும் `சொல்லாமலே...' கேரக்டர்கள் இவர்கள். எப்படியாவது காதலியின் நம்பருக்கு ஒருமுறை மெசேஜ் தட்டி நம்பரைப் பதிவுசெய்ய வைத்துவிடுவார்கள். அதற்குப் பின்னால்தான் இந்த ஸ்டேட்டஸ் டார்ச்சர்கள். இவரது ஃபீலிங்ஸையெல்லாம் கொட்டிக்கொட்டி `என் மௌனம் சொல்லாததையா வார்த்தைகள் சொல்லிவிடப் போகின்றன' என ஸ்டேட்டஸ் வைத்து வேளாவேளைக்கு ஃபீலிங் ட்ரான்ஸ்பர் செய்துகொண்டிருப்பார்கள். பாவம். அந்தப் புள்ள

எல்லாமே ஸ்டேட்டஸ்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதையெல்லாம் பார்க்குமானே தெரியாது. சோதனை!

நாங்கெல்லாம் `ஸ்மைலி'யிலேயே வாழ்க்கையோட அர்த்தத்தைச் சொல்றவங்க. போங்கப்பு!

- கொட்டாம்பட்டி விக்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism