Published:Updated:

ரத்தம் நிறம் கறுப்பு!

ரத்தம் நிறம் கறுப்பு!
பிரீமியம் ஸ்டோரி
ரத்தம் நிறம் கறுப்பு!

ரத்தம் நிறம் கறுப்பு!

ரத்தம் நிறம் கறுப்பு!

ரத்தம் நிறம் கறுப்பு!

Published:Updated:
ரத்தம் நிறம் கறுப்பு!
பிரீமியம் ஸ்டோரி
ரத்தம் நிறம் கறுப்பு!

ப்போ வர்ற படங்கள் கலர்ப்படமாக இல்லாமல் பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவாகவே வந்துச்சுன்னா, எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். கிர்ர்ருங்குது..!

•  கேப்டன் விஜயகாந்த், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் படங்களின் கிளைமாக்ஸ் காட்சியில் கண்டிப்பா சிவப்பு வயரையோ, பச்சை வயரையோ கட் பண்ணி பாம் வெடிக்காம வெச்சுப் பலபேரைக் காப்பாத்துற சீன் கண்டிப்பா இருக்கும். `ப்ளாக் அண்ட் வொயிட்' சினிமாவா வந்திருந்தா, அந்தக் காட்சியில வயரோட கலர் சிவப்பா, பச்சையா, மஞ்சளா, ஊதாவானு ஹீரோவுக்கும் தெரியாம, நமக்கும் புரியாம, நகத்தைக் கடிச்சுக்கிட்டே உட்கார்ந்திருக்கலாம். இல்லை, `ஏதோ ஒரு வயரைக் கடிச்சுத்துப்பட்டும். என்ன நடக்குதுனு பார்ப்போம்'னு படபடபடப்பைக் குறைச்சுக்கிட்டுப் படம் பார்த்திருப்போம்.

ரத்தம் நிறம் கறுப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• `நானும் ரெளடிதான்' படத்துல கண்ணைக் கட்டிக்கிட்டு `ரெட் டீஷர்ட், ரெட் டீஷர்ட்'னு கத்துற நயன்தாராவை ரொம்பப் பாவமா பார்த்திருப்போம். இதுவும் கலர்ல வராம இருந்திருந்தா, `கூட்டத்தில் எவனுமே ரெட் டீஷர்ட் போடலையே இந்தப்புள்ள யாரைப் பார்த்து இந்தக் கத்து கத்திக்கிட்டு இருக்கு?'னு பரிதாபப்பட்டிருப்போம்.

• `பிசாசு' படத்துல கலர்தான் குறியீடு. கலர்தான் முக்கியமான கேரக்டர். விபத்து பண்ணியது பச்சைக் கலர் காரா? சிவப்புக் கலர் காரா?னு ஆட்டோக்காரர்கிட்ட கிளைமாக்ஸில் ஆப்பிளைக் கொடுத்துக் கேட்கும்போதுதான் உண்மையே தெரியவரும். படத்தைப் பார்க்குற ஆடியன்ஸுக்கும் அந்த சீன்லதான் குற்றவாளி யாருனு கலர் மூலமா தெரியும். இந்தப் படமும் கலர்ல வராம இருந்திருந்தா, இந்தக் கட்டுரை எழுதவேண்டிய அவசியமே இருந்திருக்காது. மிஷ்கினுக்கும் அந்தப் படத்தை எடுக்குற ஐடியாவும் வந்திருக்காது!

• ஹீரோயின்கள் கண்ணுல, காதுல, நாக்குல, மூக்குல கலர்கலரா மேக்கப் போட்டு அட்டென்டன்ஸைக் கிரியேட் பண்ணச் சுத்துறதெல்லாம் ரொம்பவே குறைஞ்சிருக்கும். சுருக்கமா சொன்னா ஹீரோயின்களுக்குப் போகியே இல்லாதப்போ, பொங்கல் எப்படி வரும்?

• பேய்ப் படத்தைப் பார்த்து பயப்புடுறாங்கனா முக்கியமான காரணம் லிமிட்டே இல்லாம  லிட்டர் கணக்கில் காட்டுகிற சிவப்பு ரத்தம்தான். அதையெல்லாம் பிளாக் அண்ட் வொயிட்ல காட்டுனா படம் பார்க்குறவங்களுக்குப் பயமா வரும்? `இது யாருடா கோமாளி'னு பேயைப் பார்த்து சிரிச்சிட்டு அசால்டா அடுத்த வேலையைப் பார்க்க போயிடுவாங்க. பேய்மேல இருக்கிற பயமும் போயிடும்!

• எல்லாத்துக்கும்மேல `அலைபாயுதே' படத்துல `பச்சை நிறமே பச்சை நிறமே...' பாட்டைப் பார்த்துட்டு, `எல்லாமே ஒரே கலரா இருக்கு. எதுக்கு இவரு பச்சை நிறமேனு பாடுறாரு?'னு தலையைச் சொறிஞ்சுகிட்டுத் திரிஞ்சிருப்போம். இலவச இணைப்பா, `இதெல்லாம் எங்க உருப்படப்போகுது?'னு மேடியையும் கலாய்ச்சுத் தள்ளியிருப்போம்!

நல்ல வேளை, கலர்ப்படங்களைக் கண்டுபிடிச்சோம்!

- திருவாடானை ஜெ.வி.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism