Published:Updated:

ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!

ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!

ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!

ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!

ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!

Published:Updated:
ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!
ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!

ருத்தன் லவ் பண்ற பொண்ணுகிட்ட நேரடியா ப்ரொபோஸ் பண்றதுக்கு பயந்துக்கிட்டு ஃப்ரெண்டுகிட்ட ஹெல்ப் கேட்பான். கடைசியா அது ட்விஸ்ட் ஆகி அவனோட ஃப்ரெண்டுக்கே பிக்கப் ஆகிரும். அந்த மாதிரிக் கதைகள் இன்னிக்கி நேத்திக்கி இல்லை. பல காலமா தமிழ் சினிமாவில் புலிவாலைப் பிடிச்ச கதையா பின்தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. லைட்டா ரீலை சுத்தவிட்டோம்னா...

•  தல நடிச்ச `ராஜா' படத்தோட கதையே, அஜீத்கிட்ட காதலைச் சொல்ல பயப்படுற ஜோதிகா, தயிர்சாதமான ப்ரியங்கா த்ரிவேதியை துப்பறிவாளரா நியமிச்சு அவரைப்பற்றி விசாரிச்சு அறிக்கை தாக்கல் பண்ணச் சொல்வாங்க. கொஞ்சம் டீப்பா இறங்கி விசாரிச்சது வில்லங்கமாகி அப்புறம் அவங்களுக்குள்ளேயே காதல் பத்திக்கும். #போச்சா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•   `மயக்கம் என்ன' படத்தில் தனுஷுடைய ஃப்ரெண்டா நடிச்ச சுந்தர், ரிச்சாவைக் காதலிப்பார். `கூடவே சுத்திக்கிட்டுத் திரிஞ்ச செவ்வாளை' தனுஷ், ரிச்சாவை உஷார் பண்ணி அடுத்த லெவலுக்குப்போக, வேறு வழியில்லாம அவரோட ஃப்ரெண்டே கூடஇருந்து கல்யாணமும் செய்துவைக்கும் கொடுமையும் நடக்கும். #என் கஷ்டம் யாருக்கும் வரக் கூடாது!

ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!

• `ராட்டினம்' படத்தில மட்டும் என்ன கதையாம்? இதேதான். ரெண்டு வருசமா ஒரு பொண்ணு பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்த நண்பனுக்கு உதவி செய்றேன்னு கூட்டிட்டுப் போய் ஹீரோவே அந்தப் பொண்ணை உஷார் பண்ணிடுவாரு. #ஒன்பது கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவன்..!

• `அமர காவியம்' என்ற அழியாத காதல் காவியத்தில்கூட, தன்னோட நண்பனுக்காகக் காதலைச் சொல்லப்போன ஹீரோ சத்யாகிட்ட தன்னுடைய காதலைச் சொல்லி டரியலாக்கிடுவாங்க நாயகி மியா. அப்பாவியாகத் தலையைச் சொறிஞ்சிக்கிட்டே சுத்திக்கிட்டுருந்த நாயகன் சத்யா அப்புறமா வெறித்தனமா காதலிச்சுக் கடைசியில் மியாவையே கத்தியால செருகிடுவாரு. #இது உனக்குத் தேவையா மொமென்ட்!

• `சுந்தரபாண்டியன்' படத்தில் பிரபாகரன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நல்ல எண்ணத்தோடு போன சசிகுமாரையே `லவ் பண்றேன்'னு சொல்லி சிலிரிக்க வெச்சுடும் அந்தப்புள்ள லட்சுமி மேனன். விளையாட்டா ஆரம்பிச்ச அந்தக் காதல்தான் கிளைமாக்ஸ்ல சசிகுமார் உசுருக்கே உலை வைக்கப் பார்க்கும்ங்கிறது வேற கதை. # யாரைத்தான் நம்புவதோ?

ஃப்ரெண்ட்ஸ்கிட்ட உதவி கேட்க நினைக்கிறப்போ இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்துபோகுமா இல்லையா?

- கொட்டாம்பட்டி விக்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism