Published:Updated:

இது சினிமா RTI மக்களே...

இது சினிமா RTI மக்களே...
பிரீமியம் ஸ்டோரி
இது சினிமா RTI மக்களே...

இது சினிமா RTI மக்களே...

இது சினிமா RTI மக்களே...

இது சினிமா RTI மக்களே...

Published:Updated:
இது சினிமா RTI மக்களே...
பிரீமியம் ஸ்டோரி
இது சினிமா RTI மக்களே...

கவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்டால், அதிகாரிகள்தான் அலறுவார்கள். ஆனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு புண்ணியவான் தன் கேள்விகளின் மூலம் மொத்தக் கூட்டத்தையும் அலறவைத்திருக்கிறார். `இந்தியாவை ஏலியன்களோ ஸோம்பிக்களோ தாக்கினால் அதைச் சமாளிக்க அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது? வில்ஸ்மித் இல்லாமல் இந்தத் தாக்குதலை நம்மால் சமாளிக்க முடியுமா?' என படு சீரியஸாகவே ஆர்.டி.ஐ மனுவில் கேட்டிருக்கிறார் அந்தப் புண்ணியாத்மா. சும்மா இருக்க நாங்கள் மட்டும் என்ன தக்காளித் தொக்கா? எங்கள் பங்கிற்கு ஆர்.டி.ஐ-யில் என்னென்ன கேட்கலாம் என யோசித்து வைத்திருக்கிறோம். முடிஞ்சா உங்க செலவுல மனுப்போட்டுக் கேளுங்க மக்களே!

• அமெரிக்கப் பாதுகாப்பையே ஜஸ்ட் லைக் தட் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த சிந்தடிக் பயோ வைரஸ் மீண்டும் தாக்கினால் அதைச் சமாளிக்க என்ன திட்டம் இருக்கிறது? கோதை ராதாவோடு குஷியாய் செட்டில் ஆகியிருக்கும் விஞ்ஞானி கோவிந்தின் உதவி மீண்டும் கோரப்படுமா?

இது சினிமா RTI மக்களே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• மேட்ச் ஃபிக்சிங் வழியே முறைகேடாக ஈட்டப்பட்ட 500 கோடி ரூபாய் பணத்தை மீட்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிற்குச் சென்ற போலீஸ் அதிகாரி சுப்பு பஞ்சு மர்ம நபர்களால் கொல்லப்பட்ட வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?

• மனிதகுலத்திற்கு ஆபத்து விளைவித்த சிட்டியை டிஸ்மாண்டில் செய்தாயிற்று. ஆனால் சாது சிட்டியை சேட்டைக்கார வில்லனாய் மாற்றிய ரெட் சிப் தயாரிப்பு தடை செய்யப்பட்டுவிட்டதா? வில்லன் விஞ்ஞானி போராவின் லேப் முறையாகப் பாதுகாக்கப்படுகிறதா?

இது சினிமா RTI மக்களே...

• சூப்பர் ஹீரோ முகமூடியின் முயற்சியால் வீழ்த்தப்பட்டு தண்ணீரில் விழுந்த கொடூர வில்லன் டிராகனின் நிலைமை என்னவானது? முகமூடிக்கு அரசு சார்பில் ஏதாவது விருது வழங்கப்பட்டதா?

• கேப்டன் ஜக்தீஷால் தொடங்கப்பட்ட ஸ்லீப்பர் செல்களை அழிக்கும் ஆபரேஷன் இப்போது யார் தலைமையில் செயல்படுகிறது? இதற்காக ஓர் ஆண்டிற்கு எத்தனை கோடி செலவு செய்யப்படுகிறது?

இது சினிமா RTI மக்களே...

• சித்தார்த் அபிமன்யு ஒளித்து வைத்து மித்ரன் ஐ.பி.எஸ்-ஸிடம் கொடுத்த மெமரி கார்டில் என்னென்ன விவரங்கள் பதிவாகியுள்ளன. அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

வேலை வெட்டி இல்லாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்த பாஸ் (எ) பாஸ்கரன் தொடங்கிய டுட்டோரியல் காலேஜிற்கு முறையான அனுமதி இருக்கிறதா? தகுதி வாய்ந்த ஆசிரியர்களால்தான் அங்கு பாடம் எடுக்கப்படுகிறதா?

இது சினிமா RTI மக்களே...

• நாக்ரோலெப்ஸியால் பாதிக்கப்பட்ட இந்திரனுக்கு சிகிச்சை வசதிகள் அளிக்கப்பட்டதா? கோமாவில் வீழ்ந்த மீராவின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது?

• இயக்குநர் கார்த்திக் தன் காதலியின் நினைவாக எடுத்த `ஜெஸ்ஸி' படத்திற்கு சென்ஸார் போர்டு என்ன சான்றிதழ் வழங்கியது? அதற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதா? `ஒரு கோடிப்பே..!' ரீதியில் சொல்லாமல் உண்மையான வசூல் கணக்கு சொல்லவும்.

இது சினிமா RTI மக்களே...

• ராஜாசிங்கின் சதியால் வாய்ப்பை இழந்த வள்ளிக்கு அரசுத்தரப்பில் இழப்பீடு வழங்கப்பட்டதா? குஞ்சிதபாதம் தொடங்கிய விளையாட்டு மையத்திற்கு முறையான அனுமதி இருக்கிறதா?

- தேனி நித்திஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism