Published:Updated:

டெஸ்ட்னா சோதனை தானே?

டெஸ்ட்னா சோதனை தானே?
பிரீமியம் ஸ்டோரி
டெஸ்ட்னா சோதனை தானே?

டெஸ்ட்னா சோதனை தானே?

டெஸ்ட்னா சோதனை தானே?

டெஸ்ட்னா சோதனை தானே?

Published:Updated:
டெஸ்ட்னா சோதனை தானே?
பிரீமியம் ஸ்டோரி
டெஸ்ட்னா சோதனை தானே?

500-வது டெஸ்ட்டில் வெற்றிக்கனியைப் பறித்து 501-வது டெஸ்ட்டும் விளையாடி முடித்துவிட்டது இந்திய அணி. நம்பர்கள் மாறினாலும் அன்றிலிருந்து இன்று வரை சில கலகல சீன்கள் மட்டும் களத்தில் மாறவே இல்லை. அவற்றைப் பற்றிய ஃப்ளாஷ்பேக் பதிவு இது.

• டெஸ்ட் என்றாலே நினைவுக்கு வரும் `பிரத்தியேகமான' பல பிளேயர்கள் இருப்பார்கள். அதில் முக்கியமானவர்கள், ஆகாஷ் சோப்ராவும் வாசிம் ஜாபரும். பேட்டிங்கை மெகாசீரியல் ரேஞ்சுக்கு ஜவ்வா....ய் இழுப்பவர்கள். எந்தளவுக்கு எனில்... நீங்கள் காலை டிபன் முடித்துக் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு, மதியம் லஞ்ச்சுக்கு எழுந்தால்கூட இந்தியாவின் ஸ்கோர் அப்படியே ஃப்ரீஸ் ஆகியிருக்கும். டி.வி-யில் கோளாறோ எனத் தட்டிப் பார்க்க வைக்கும் அளவிற்கு அநியாய பொறுமைசாலி பேட்ஸ்மேன்கள் இவர்கள்! #மறக்கமுடியுமா?

டெஸ்ட்னா சோதனை தானே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• இந்திய மைதானங்கள் பரவாயில்லை. சிட்னி, அடிலெய்ட், லார்ட்ஸ் போன்ற மைதானங்களில் எல்லாம் பேட்ஸ்மேன் எவ்ளோ இழுத்து அடித்தாலும், பந்து பவுண்டரிக்குப் போக அரைமணி நேரமாகும். வாயில் நுரை தள்ளத் தள்ள இரண்டு ரன்கள் ஓடி, மூன்றாவது ரன் ஓடுவதற்குள் 'பேசாம ரிட்டையர்டு ஆகிடுவோமா' என யோசிப்பார்கள் பேட்ஸ்மேன்கள். எவ்ளோ நேரம்?

• அதே கிரவுண்டில் இந்திய அணி வீரர்கள் ஃபீல்டிங் செய்வதைப் பார்க்க கோடி கண்கள் வேணும்! பின்னே? பேட்டிங்கில் பின்னி எடுக்கும் சேவாக் ஃபீல்டிங்கில் பந்தைத் துரத்தி ஜாகிங் போய்க்கொண்டிருப்பார். அனில் கும்ப்ளே `அதுக்கும் மேல' ரகம். பந்து அவரைக் கடந்துவிட்டாலே `அது போகட்டும் கழுத' என உட்கார்ந்து ரெஸ்ட் எடுப்பார். ஆனால், பந்து பவுண்டரி லைன் பக்கத்தில் போய் பிரேக் அடித்து நின்றிருக்கும். இவர் மாங்கு மாங்கெனப் போய் பந்தை எடுப்பதற்குள் இங்கே ஆறு ரன்கள் ஓடிவிடுவார்கள்.

• இந்திய அணியின் `சுவர்' டிராவிட். டெஸ்ட்டுக்கென `டெய்லர் மேட்' பேட்ஸ்மேன். எதிரே கொளுத்தும் வெயிலில் அக்தரோ, பிரெட் லீயோ மின்னல் வேகத்தில் ஓடிவந்து பந்து போடுவார்கள். டிராவிட் அசால்ட்டாகக் கை தூக்க... அது கீப்பருக்குப் போய்விடும். ஒருவேளை ஸ்டம்புக்கு நேராக வந்தால் `டொக்'. அவ்வளவுதான் டிராவிட் ரியாக்‌ஷன். `நாம ஏன் பெளலரானோம்?' என லீயும் அக்தரும் நடு பிட்ச்சில் யோசிக்கும் தருணம் அது.

• இன்று வரை ஆளானப்பட்ட ஆல் இன் ஆல் அழகுராஜாக்களுக்கே இருக்கும் குழப்பம் இது. டெஸ்ட் மேட்ச்ல ஏதுய்யா வைடு பால்? 'சென்னைக்கு மிக அருகில்' ரேஞ்சுக்கு பேட்ஸ்மேனை விட்டுப் பந்து விலகிப் போனாலும் அம்பயர் குளிருக்கு இதமாய் அக்குளில் கைவைத்து நின்றிருப்பார். பேட்ஸ்மேன் பந்தை அடிப்பதே இல்லை எனப் பாவப்பட்டு பெளலரே வைடு பால் போட்டாலும் இதுதான் ரிசல்ட்!

டெஸ்ட்னா சோதனை தானே?

• டெஸ்ட் போட்டிகளில் மட்டும்தான் மேலும் சில அரிய காட்சிகளைக் காணமுடியும். இஷாந்த் சர்மா திடீரென மூன்றாவது இடத்தில் பேட்ஸ்மேனாகக் களமிறங்குவார். சச்சினுடன் பார்ட்னர்ஷிப் வைத்து அரைசதம் அடித்து, என்னது இவருக்கு பேட்டிங்கும் தெரியுமா? என அதிர்ச்சியடைய வைப்பார் பவுலர் ஜாகீர்கான். அவ்ளோ ஏன்? கடைசி நேரத்தில் ஆஷிஷ் நெஹ்ராவே சிங்கிள் சிங்கமாய் நின்று ஸ்கோரை உயர்த்திய தருணம் நம்ம டெஸ்ட் வரலாற்றில் இருக்கு பாஸ்!

• இது ஒரு கருப்பு காமெடி. `பாகுபலி' பலத்தோடு இருக்கும் அணியோடு அவர்களின் சொந்த ஊரிலேயே போய் மல்லுக்கட்டி வெற்றிக்குப் பக்கமாய் நிற்கும் இந்திய அணி. அந்த நேரம்தான் `உள்ளேன் ஐயா' சொல்லிக்கொண்டு வருவார் வருண பகவான். `கிரிக்கெட் எல்லாம் முடியாது. வேணும்னா ஸ்விம்மிங் பழகிக்குங்க' என கிரவுண்டில் ஊற்று ஊற்றென ஊற்றுவார். பெவிலியன் பால்கனியில் கண் வியர்க்கப் பாவமாய் அதைப் பார்த்தபடி நிற்பார்கள் இந்திய வீரர்கள். ரிசல்ட்? வேறென்ன, டிரா தான்!

• டெஸ்ட்டில் மட்டுமே காணக்கிடைக்கும் இன்னொரு காட்சி இது. எதிர்த்து விளையாடுவது சூப்பர் பேட்ஸ்மேனோ சுமார் பேட்ஸ்மேனோ, இந்திய அணி முழுவதும் ஏதோ பந்திக்கு உட்காருவது போல மைதானத்திற்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் அமர்வார்கள். ஒவ்வொரு முறை பேட்ஸ்மேன் பேட்டை வீசும்போதும் `நம்ம மேல விழுமோ' என அவர்கள் பயப்படுவதில் அடிவயிற்று உருண்டை மேலே எழுந்து எழுந்து அமுங்கும்!

- தேனி நித்திஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism