இப்போலாம் காலேஜ்ல அட்மிஷன் போட கேம்பஸ்ல நுழையும்போது, விசாரிக்கிற வாட்ச்மேனே `எம்.என்.சி' பற்றிதான் பேசுறார்.

`எம்.என்.சி கம்பெனியெல்லாம் இங்க இண்டர்வியூக்கு வருவாங்க. உங்களுக்கு வேலை நிச்சயம்' என்பது பல காலேஜ்களின் டெம்ளேட் ஸ்டேட்மென்ட். அதை வெச்சே ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு வாத்தியாரும் அடிக்கிற அதாரு உதாரு வார்த்தைகள் இவை...

காலேஜுக்கு நம்ம பசங்க சீக்கிரம் வர்றது அத்தி பூத்தாற்போலத்தான். ஆனா லேட்டா வந்தா ஒரு புரொஃபசர் என்ன சொல்லுவார் தெரியுமா? ``கார்ப்ரேட்டு கம்பெனியில இப்படி லேட்டா வந்தா ஃபயரிங் பண்ணிடுவாங்க!'' (ஆத்தீ பயந்து வருது!)

காலேஜ் ஐ.டி கார்டுகள் கழுத்தில் சுமக்குறதுக்கு இல்லைனு கெட்டியா நம்புகிறவங்க நம்ம பசங்க. கழுத்துல கார்டு இல்லாததை நோக்குற பேராசிரிய பெருமக்கள், ஐ.டி கார்டு தோன்றிய வரலாற்றில் ஆரம்பித்து, எதுக்காக அதுல ப்ளட் குரூப் மென்சன் பண்றாங்க, இதை ஏன் அணியணுங்கிற வரை கருத்துரை நிகழ்த்துவார்கள்.(ஆனா காலேஜ்ல ஐ.டி கார்டு போட மறுத்தவன், நல்ல கம்பெனிக்குப் போனதும் வாக்கிங் போனாலும் கழுத்தில இருந்து கழற்ற மாட்டான்கிறது வேற விஷயம்)

தெரியாமத்தான் கேட்குறேன். பேச்சுச் சத்தம் இல்லாத காலேஜ்லாம் ஒரு காலேஜா? இதுக்கு ஒரு கார்ப்ரேட் உதாரணத்தைச் சொல்லுவாங்க பாருங்க எங்க டிபார்ட்மென்ட்ல. அடடா அப்பப்பபப்பா ரகம். ‘`இப்படித்தான் பத்துவருஷத்துக்கு முன்னாடி உங்க டிபார்ட்மென்ட்ல இருந்து 3 பேர் அமெரிக்க எம்.என்.சிக்கு வேலைக்குப் போனாங்க. வேலை நேரத்துல சிரிச்சுப்பேசிட்டு இருந்ததை தப்பாப் புரிஞ்சிக்கிட்ட பெரிய அதிகாரிங்க, உடனடியா மூணு பேரையும் வேலையில் இருந்து தூக்கிட்டாங்க. அந்தப் பசங்க இங்க வந்து ரொம்ப வருத்தப்பட்டாங்க’' என்பார். ஆனால் இவங்க சொல்ற அந்த ‘உங்க டிபார்ட்மென்ட்’, எங்க காலேஜ்ல தொடங்கியே 5 வருஷம் தான் ஆச்சுங்கிறதை நாங்க மனசுக்குள்ளயே வெச்சுப் புதைச்சிக்குவோம்.

ஒரு மணித்துளிகூட மிச்சம் வைக்காத பேராசிரிய பெருமக்கள் வாய்ப்பதெல்லாம் மாணவன் செய்த துஷ்ட செயலின் கஷ்ட பின்விளைவு. அத்தகைய பெருமக்களிடம், நியாயமான பாடவேளை நேரத்தைக் கடந்தும், பெல் அடிக்கவில்லை என்பதை எடுத்துச்சொன்னா, ‘`இப்படியெல்லாம் நீங்க கார்ப்பரேட் கம்பெனியில குறுக்கால பேசமுடியாது’' என்று விசித்திர பதில் அளிப்பார்கள். ஆனால் கொஞ்ச நேரத்திற்கு முந்திதான் கஸ்டமர் ரைட்ஸ், லேபர் ரைட்ஸ்னு மூச்சுவாங்க பாடம் நடத்தியிருப்பார் அந்தப் பெருந்தகை. நாம `ரைரை போகலாம்'னு பிகில் ஊதவேண்டியதுதான்!

`கேரியர் கைடன்ஸ் புரோக்ராம்'னு மாதத்திற்கு ஒரு முறை இறுதியாண்டு மாணவர்களை `வெச்சு' செய்வாங்க. புரோக்ராம் சீப் கெஸ்ட்டாக வந்திருக்கிறவர், ஷிவ்கேராவின் சித்தப்பா பையனாய் இருப்பார் போலிருக்கும். நம்ம பசங்களைப் பார்த்ததும், ‘`நான் பல கல்லூரிகளுக்கு போய் வந்திருக்கேன். ஆனா எங்கேயும் உங்களை மாதிரி ஆக்டிவான பசங்களைப் பார்க்கவில்லை’’ என நேர்மறைச் சிந்தனையில் தொடங்குவார். பையன் ஆக்டிவா வர்றது, மொத்த ஃபைனல் இயர் பொண்ணுகளையும் ஒரே இடத்துல பார்க்கலாமேங்கிற ஒரே சிந்தனையின்றி வேறில்லை. ஆனா அந்த ஷிவ்கேரா, எந்த காலேஜ் போனாலும் இதையேதான் சொல்வார்ங்கிறதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை உங்களுக்கு.

இப்படி டூர்ல, லேப்ல, லைப்ரரில, கேன்டீன்ல, செமினார்ல, ஆன்வெல் டேல, ஃப்ரெஷர்ஸ் டேல, ஃபேர்வெல் டே லனு கார்ப்ரேட் பேய் பசங்களை மட்டுமே பிடிச்சி ஆட்டல மக்களே... ஜென் z பெண்களையும்தான்!

- வெ.வித்யா காயத்ரி