Published:Updated:

எனக்கு மட்டும் ஏன் இப்பிடி?

எனக்கு மட்டும் ஏன் இப்பிடி?
பிரீமியம் ஸ்டோரி
எனக்கு மட்டும் ஏன் இப்பிடி?

எனக்கு மட்டும் ஏன் இப்பிடி?

எனக்கு மட்டும் ஏன் இப்பிடி?

எனக்கு மட்டும் ஏன் இப்பிடி?

Published:Updated:
எனக்கு மட்டும் ஏன் இப்பிடி?
பிரீமியம் ஸ்டோரி
எனக்கு மட்டும் ஏன் இப்பிடி?
எனக்கு மட்டும் ஏன் இப்பிடி?

ம்ம தினசரி வாழ்க்கையில சில கடுப்பேத்துற மொமன்ட்ஸ் எனக்கு மட்டும்தானா? இல்லை உங்களுக்குமா?

• ஹீரோ, வில்லனைத் தேடுறதைவிட சுவாரஸ்யமானது சீட்டுக்கு அடியில காணாமப்போன நம்ம செருப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• எவ்ளோதான் காலை மடக்கி சீட்டுக்குள்ள வெச்சாலும், அந்த இருட்டுலகூட தேடிக் கண்டுபிடிச்சு மிதிச்சிட்டுப் போறவங்களுக்கும் எனக்கும் என்ன பகை?

• ஆசைஆசையாய் ஆன்லைன் ஆஃபர்ல பொருள் வாங்கிட்டுக் காத்துட்டு இருந்தா... பொருள் டெலிவரி அன்னைக்குனு பார்த்து நம்ம மொமைல் நாட் ரீச்சபிள் மோட்ல போய் நாதாரித்தனம் பண்ணுதே ஏன்?

• அடிக்குற வெயில்ல அடிச்சுப்பிடிச்சு பஸ்ல ஏறி ஜன்னலோர சீட்டைத் தேடிக் கண்டுபிடிச்சு உட்கார்ந்தா... கூலா பக்கத்துல ஒருத்தன் நம்ம தோள்மேல சாய்ஞ்சிக்கிட்டே தூங்கிட்டு வருவான்! யாருப்பா நீ?

• `மச்சான் அடுத்த வாரம் கல்யாணம்டா... ஹேர்கட் செமயா இருக்கணும்’னு சொன்னதும் சிங்கப்பூர் ரேஞ்சுக்கு ஒரு கடைக்குக் கூட்டிட்டுப் போவானுங்க... ஃப்ரண்ட்ஸ் பட ஃபர்ஸ்ட் ஆஃப் விஜய் மாதிரி போனவனை க்ளைமாக்ஸ் விஜய் மாதிரி மாத்தி அனுப்புவாங்களே! போங்கய்யா...

• ஆஃபர்ல 2 சட்டை 1000 ரூபாய்க்கு வாங்கிட்டுப்போய் பெருமையா ஃப்ரெண்ட்ஸ்கிட்ட காட்டினா, அந்தக் கடையில இதே சட்டையை மூணு 999 ரூபாய்க்கு வாங்கி நம்மளை மரண ஓட்டு ஓட்டுவானுங்க. என்னையப் பார்த்தா எப்படித் தெரியுது?

• நாம பார்க்கும்போது மட்டும் கலர்கலரா சாப்பாடு கொடுப்பாங்க. நம்ம கிரகம் வரிசைல நின்னு கிட்டத்தில் போகும் போதுதான் `எல்லா வெரைட்டியும் காலியாயிடுச்சு’னு வெண்பொங்கல் கொடுப்பாங்க. மிடியல!

• என்னதான் ஹெல்மெட் போட்டு ஓட்டுனாலும், நம்மளதான் மடக்குறாங்கனு பம்மிக்கிட்டே போனா நமக்குப் பின்னாடி வர்ற குட்டியானைக்கு பிட்டைப்போட்டு ஒரு நிமிஷம் பீதியைக் கிளப்புவாங்க நம்ம போலீஸ். என்ன ஒரு வில்லத்தனம்!

• நடுராத்திரி நல்லத்தூக்கத்துல இருக்கும்போது கரண்ட் கட் ஆகும். சலிப்போட எழுந்து வெளிய வந்தா பக்கத்துத் தெருல மட்டும் ஜெகஜோதியா கரன்ட்டைக் கொடுத்து வயித்தெறிச்சலைக் கொட்டிக்குவாங்க. ஆத்திரங்கள் வருது!

• கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடிச்சு ஒரு பைரஸி சாஃப்ட்வேரை சிஸ்டம்-ல இன்ஸ்டால் பண்ணி... எல்லாம் ஒகே ஒகே-னு வருதேனு நம்பி ஓபன் பண்ணினா சீரியல் நம்பர் எக்ஸ்பையர்-னு வந்து நம்மல எக்ஸ்பையர் ஆக்கிரும். நேக்கு மட்டும் ஏன் இப்பிடி?

எதிர்காலத்தை நோக்கி நிகழ்காலத்தை சாக்கடையில் மிதித்தவாறே நடந்து போகின்றேன்.

- ஃபீனிக்ஸ் ராஜு
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism