Published:Updated:

டயட்டைத் தெறிக்கவிடலாமா?

டயட்டைத் தெறிக்கவிடலாமா?
பிரீமியம் ஸ்டோரி
டயட்டைத் தெறிக்கவிடலாமா?

டயட்டைத் தெறிக்கவிடலாமா?

டயட்டைத் தெறிக்கவிடலாமா?

டயட்டைத் தெறிக்கவிடலாமா?

Published:Updated:
டயட்டைத் தெறிக்கவிடலாமா?
பிரீமியம் ஸ்டோரி
டயட்டைத் தெறிக்கவிடலாமா?

• கண்ல பட்டதையெல்லாம் வகை தொகையில்லாம கண்டபடி சாப்பிட்டு செல்லமா வளர்த்த உடம்ப குறைச்சே தீருவேன்னு அடம்பிடிச்சு, டயட்ன்ற பேர்ல அட்ராசிட்டி பண்ற ஆளுங்க ஒவ்வொரு நட்பு வட்டத்துலயும் நட்டநடு மையத்துல இருப்பாங்க.

டயட்டைத் தெறிக்கவிடலாமா?

•   மூணு வேளையும் வயிற கும்முன்னு வெச்சுக்கிட்டிருந்த நாம திடுதிப்புன்னு டயட் இருந்தா... மயக்கமாகி தொண்டை கவ்வத்தான் செய்யும். பலகாலமா டயட் இருக்குற குருசாமிங்ககிட்ட கேட்டா தம்பி ராமையாவா மாறி, `ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். அப்புறம் அதுவே பழகிடும்'னு அட்வைஸ் கொடுப்பாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஒரு கிலோ கறி எவ்வளவு விலைன்னுகூட தெரியாத பசங்கள்லாம், திடீர்ன்னு கலோரியப்பத்திப் பேசி அதிர்ச்சி கொடுப்பாங்க. வடைல வெங்காயம் இருக்கா இல்லையான்னே தெரியாது. ஆனா வடைல எவ்வளவு கலோரி இருக்குன்னு மட்டும் எப்படிக் கண்டுபிடிக்கிறாய்ங்களோ! டயட்ல இருக்காங்களாம்!

• பக்கத்துல இருக்குறவன் மிக்சர்ல கூட நிலக்கடலையக்கூட தேடித்தேடி சாப்பிட்டப் பயபுள்ளைக, புரட்டாசி மாசம் புளியோதரைல நிலக்கடலை வந்தாக்கூட பொறுக்கி எடுத்துவச்சுட்டு சாப்பிடுற நிலைமைலாம் எதிரிக்கும்கூட வரக்கூடாது.

• ஒரு பய வாட்டர் பாட்டில்ல கோடுபோட்டு அளந்து அளந்து தண்ணி குடிச்சிக்கிட்டு இருந்தான். என்னன்னு கேட்டா வாட்டர் டயட்டாம். பச்சத்தண்ணி குடிக்கறதெல்லாமா டயட்ல சேரும்? அது சரி போன மாசம் ஜி.எம். டயட்ன்னு ஏதோ சொன்னியேடா? `அது போன மாசம். இது இந்த மாசம்.' அது சரி! தண்ணியக்குடி... தண்ணியக்குடி!

• `உடம்பைக் குறைக்கணும்ன்னா முதல்வேளையா கார்போஹைட்ரேட்ட குறைக்கணும் மச்சி. அதனாலதான் பாரு... சுகர் ஃப்ரீ போட்டு காபி குடிக்கிறேன். டயட் கோக் நம்ம ஏரியால கெடைக்கவே மாட்டிங்குது தெரியுமா'ன்னு விடுவாங்க பாருங்க ஒரு லெக்சர்! எங்கடா இருந்தீங்க இத்தனை நாளா?

• அந்தக்காலத்துல பெரியவங்க மாசத்துக்கு ஒரு நாள் விரதம் இருக்குறமாதிரி, டயட்ல இருக்குறவங்க சொல்லிவெச்சமாதிரி வாரத்துக்கு ஒரு நாள் டயட்டுக்கு லீவ் கொடுக்குறாங்க. ஆறு நாளைக்கும் சேர்த்து வெட்டுனா ஏழேழு ஜென்மத்துக்கும் உடம்பு குறையாதே மக்கா!

• ஆபிஸ்ல ஒருத்தர் சாயங்காலம் படில மேலயும் கீழயும் ஏறி இறங்கிட்டிருந்தாரு. ஏதாவது வேண்டுதலான்னு விசாரிச்சதுக்கு, ஒரு முட்டை போண்டாவை முழுசா முழுங்கிட்டேன். அதனால கூடுதலா உடம்புல சேர்ந்த கலோரிய எரிச்சுக்கிட்ருக்கேன் தம்பி. எப்படி நம்ம சாமர்த்தியம்!

• இப்படித்தான் லன்ச் டைம்ல ஒருத்தர் ரைத்தாவ மட்டும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தார். `பிரியாணியை மறந்து வெச்சுட்டு வந்துட்டீங்களா'ன்னு கேட்டா... `இதான்பா லன்ச். வெஜிடபிள் சாலட் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா'ன்னு அப்பாவியா கேக்குறார்.

• ஜிம்முக்குப் போக ஆரம்பிச்ச அடுத்த நாளே தினமும் கண்ணாடியைப்பார்த்து ஆம்ஸை முறுக்கிப் பார்க்குறமாதிரி, டயட்ல இருக்குறவங்க வெயிட் குறைஞ்சதான்னு பார்க்க டெய்லி எடைமெஷின்ல ஏறி இறங்குவாங்க பாருங்க! இது ஓவரோ ஓவர் கான்ஃபிடன்ஸ்.

•    கடைசில என்ன டயட் இருந்தும் இன்ச் அளவுகூட குறையாத உடம்பு... டைபாய்ட் அட்டாக் ஆனதுல ஹெவியா குறைஞ்சிருக்கும். ஆனா இந்த உண்மை தெரியாத ஒரு கூட்டத்துக்கே இவர்தான் ஃபிட்னஸ் அட்வைஸரா மாறி மெனுவைத் தெறிக்க விடுவார்.

- கருப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism