சாதாரண நாட்கள்ல ஊருக்குப் போறது சிரமமோ இல்லையோ தீபாவளி லீவுக்கு ஊருக்குப் போறதுக்காக அனுபவிக்கிற வேதனைகள் இருக்கே... அது ஆளாளுக்கு மாறுபடும். அப்படி மாறி, நாறிய கதைகள்தான் எத்தனை!

முப்பது நாளைக்கு முன்னாடி இருந்தே தீபாவளித் தேதியை காலண்டர்ல முறைச்சுப் பார்த்துட்டு இருந்திருப்போம். நம்மளைச் சுற்றி இருக்கிற பக்கிகளுக்கெல்லாம் லீவ் விட்ருப்பாய்ங்க. நாம போன ஜென்மத்தில் செஞ்ச புண்ணியத்துக்கு தீபாவளிக்கு நாலுமணி நேரத்துக்கு முன்னாடிதான் லீவே கிடைக்கும். # நீங்க போன ஜென்மத்துல என்னவா இருந்தீங்க ஆப்பீஸர்ஸ்?

இந்த ரணகளத்துலயும் `டிராவலிங் டு மதர்டவுன்’னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ற மனசுதான் கடவுள்!

கையில் கிடைக்கிறதை அள்ளிப்போட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தா எல்லா ஊருக்கும் பஸ் இருக்கும். நம்ம ஊருக்கு மட்டும் இருக்காது. அப்படியே பஸ் வந்தாலும் சீட் போடுறதுக்காக எல்லாரும் உசேன் போல்ட்டா மாறியிருப்பாய்ங்க. நமக்கு மட்டும் உடம்புல சார்ஜ் இருக்காது. # டயர்டானாதானே லீவு!

ஒருவேளை ட்ரெயின்ல ஏறிட்டோம்னா அது அதுக்கும் மேல.... வாசல்ல நுழையறது மட்டும்தான் நம்ம வேலை. அதுக்கப்புறம் அவிய்ங்களே நம்மளை உள்ள கூட்டிட்டுப் போயிருவாய்ங்க. அப்புறம் குஸ்காவுல கிடக்கிற பீஸூ மாதிரி ஒரு மூலையில கெடப்போம்... நிற்கிறதுக்கு இடமில்லாம ஒரு கால்ல பேலன்ஸ் பண்ணி நாம பறவைக் காவடி எடுக்குறப்போதான், அப்பர்பெர்த்ல கால் நீட்டி கடலை போட்டுட்டு இருக்கிறவன்லாம் கண்ணுல சிக்குவான். `கடவுள் இருக்கானா குமாரு'னு தோணும். # இது பாவம்!

கடைசியில கம்பி எது? நாம எதுனு தெரியாத அளவுக்கு ஸ்டாண்டிங்ல வரணும். ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்பட்டவனெல்லாம் நிம்மதியா எழுந்திரிச்சதா வரலாறே இல்லை. நம்மளைவிட ரெண்டு மடங்கு அகலமானவனோ, பழரசத்தைக் குடிச்சிட்டு குட்காவை அதக்கினவனோதான் நமக்கு பஸ் பார்ட்னரா வருவான். இதுக்கு கும்பிபாகமே பரவாயில்லையோனு தோணும். # தீபாவளி இல்லை. அவ்வளவும் வலி பாஸ்!

ஒருவழியா ஊருக்கு வந்து பேக்கைக் கழற்றதுக்குள்ள `தம்பி முறுக்குமாவு அரைச்சிட்டு வர்றியாடா'னு அம்மா கோரிக்கை வைப்பாங்களே! #அம்மா... என்னம்மா ஆச்சு உங்களுக்கு?

ஹேப்பி தீபாவளி மக்கா...

- வால்டர் ராபின்சன்