Published:Updated:

கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்

கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்

கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்

கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்

கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்

Published:Updated:
கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்

பெயர் : மு.க.ஸ்டாலின்

பிறப்பு : 1 மார்ச், 1953

வயது : 63

இருப்பிடம் :
சென்னை

மு.க.ஸ்டாலின் என்பவர் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வரும் ஆவார்.

கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்

திரையுலகப் பங்களிப்பு :

மு.க.ஸ்டாலின் இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் `ஒரே ரத்தம்' திரைப்படத்தில் நந்தகுமார் எனும் கதாபாத்திரத்தில் மூஞ்சியில் பாம்பு வரைஞ்ச `ஆளவந்தான்' நந்தகுமாரையே நடிப்பில் ஓவர் டேக் செய்திருப்பார். ராதாரவி மாட்டுவண்டியைத் தூக்க, அதன் உள்ளே இருந்த ஸ்டாலின் கீழே விழுந்து ரோலிங்கில் போவார். கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு பார்த்தாலும், அந்தக் காட்சி நம் கண்ணைக் கலங்கவைக்கும். இதுதவிர `மக்கள் ஆணையிட்டால்' எனும் திரைப்படத்திலும், `குறிஞ்சி மலர்' எனும் சீரியலிலும் நடித்துள்ளார். அவரோட நிலைமை இப்படியே போய்க்கிட்டு இருந்துச்சுனா, விரைவில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களில் அவருக்கு அப்பாவாக நடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பிற சாதனைகள் :


மு.க.ஸ்டாலின் அவர்கள் பேப்பரில் எதை எழுதிக் கொடுத்தாலும் அச்சுப் பிசகாமல் அப்படியே வாசிப்பார். கால்புள்ளி, அரைப்புள்ளிகளைக்கூடக் கூர்ந்து கவனித்து, சரியான மாத்திரைகள் இடைவெளி விட்டு உரையாற்றுவார். அஞ்சாநெஞ்சரின் அரசியல் வாழ்க்கையை `அஞ்சான்' பட ரிசல்ட்போல ஆக்கியது இவரது சாதனைகளில் மிக முக்கியமானது. இவர் ரொம்ப அருமையாகப் பாடல் பாடுவார். இந்தியாவின் நம்பர் ஒன் மற்றும் ஒரே ஒரு வாய்ஸ் எக்ஸ்பர்ட்டான அனந்த் வைத்தியநாதனே இவர் பாடுவதைக் கேட்டு அசந்துபோயிருக்கிறார். பத்து பிளாஸ்டிக் சேர்களை வைத்துக்கொண்டு போட்டி சட்டமன்றத்தை நடத்தியும் சாதனை செய்துள்ளார். ஃபுட்பால், கிரிக்கெட், சிலம்பம் என அனைத்து விளையாட்டுகளும் இவருக்கு அத்துப்படி. எல்லாவற்றையும் விட, உலகிலேயே வாழைத்தோப்புக்குள் நடப்பதற்காக கான்கிரீட் சாலை அமைத்தது இவர்தான் இவர்தான் இவர் மட்டும்தான்!

வேதனைகள் :

இவர் பல ஆண்டுகளாக வேதனையில்தான் இருக்கிறார். ஏன் எதுக்குனு கொக்கிபீடியா சொல்லித்தான் தெரியணும்னு இல்லை. மெட்ரோ ரெயிலில் ஒருவரையும், செல்ஃபி எடுக்கும்போது ஒருவரையும் போட்டுப் பொளந்துள்ளார். உதயநிதி நடிக்கும் அத்தனை படங்களையும் இவர் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதேபோல், `என்னைத் தொடர்புகொள்ளும் உதவி எண்ணுக்கு போன் செய்கிறேன். இப்போப் பாருங்க...' என நடுமேடையில் நம்பர் தட்ட  `ப்ளீஸ் செக் தி நம்பர். யு ஹேவ் டயல்'னு அசிங்கப்படுத்திருச்சு செல்போன் பயபுள்ள. இது எல்லாவற்றையும் விட மிகப்பெரிய வேதனையான மொமென்ட் `நமக்கு நாமே' சுற்றுப்பயணத்தைக் கலாய்ச்சு நெட்டிசன்கள் போட்ட மீம்ஸ்தான். உதாரணமாக, ஷேர் ஆட்டோவில் நின்றுகொண்டு வந்ததை, `நகரம்' வடிவேலு `வாடா... நீ ஏரியாவுக்கு வாடா...' காட்சியோடு சேர்த்துவைத்துக் கலாய்த்ததைப் பார்த்துக் கண்ணீர் விட்டிருப்பார்.

மேலும் பார்க்க :

ஒரே ரத்தம்
மக்கள் ஆணையிட்டால்
`ஆர அமர கொஞ்சம் யோசிச்சுப் பாரு...' பாடல் வீடியோ.
இது கதிர்வேலன் காதல்.

மேலும் படிக்க :


தம்பிகள் தங்கங்கள்
தளபதி எங்கள் தளபதி

கோபப்பட வேண்டியவை
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி

- ப.சூரியராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism