Published:Updated:

தண்ணிமேல ஒரு நாடு!

தண்ணிமேல ஒரு நாடு!
பிரீமியம் ஸ்டோரி
தண்ணிமேல ஒரு நாடு!

தண்ணிமேல ஒரு நாடு!

தண்ணிமேல ஒரு நாடு!

தண்ணிமேல ஒரு நாடு!

Published:Updated:
தண்ணிமேல ஒரு நாடு!
பிரீமியம் ஸ்டோரி
தண்ணிமேல ஒரு நாடு!
தண்ணிமேல ஒரு நாடு!

ம் ஊரில் வாய்க்கால் தகராறுக்காகப் பல வருஷமா நடக்கிற பஞ்சாயத்தெல்லாம் பார்த்திருப்போம். அதுமாதிரி ஒரு குட்டி நாட்டுக்காக பல வருஷமா நடந்துட்டு வர்ற சுவாரஸ்யமான பஞ்சாயத்தைப் பார்ப்போமா?

இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் ஜெர்மனியோட நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், போர்க் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பறதுக்காகவும் கடலில் பல இடங்களில் இங்கிலாந்து, முறைகேடாக தளவாடங்களை அமைச்சது. அதுல ஒண்ணுதான், ரஃப் டவர். போர் எல்லாம் முடிஞ்சதும் வேலையே இல்லாம ரொம்பப் போர் அடிச்சதாலோ என்னவோ... அங்கிருந்து ராணுவமும் 1956-ம் ஆண்டு கிளம்பிருச்சு. பொறம்போக்கு இடத்துக்கு நாம் பட்டா போட்டுவைப்போமேனு பல வருடங்கள் கழிச்சு, முன்னாள் இங்கிலாந்து ராணுவ மேஜரான பேடி ராய் பேட்ஸ் இந்த இடத்தில் போய் குடியும் குடித்தனமுமா செட்டில் ஆகிட்டார். இங்கிலாந்து அதிகாரிகள் என்னென்னவோ பண்ணிப்பார்த்தும் பேட்ஸ் அசர்ற மாதிரி தெரியல. `ஓனர்னா ஓரமா போக வேண்டியதுதானே'ன்னு அங்கேயே பட்டா போட்டு உட்கார்ந்துட்டார்.

1967-ல் இந்த இடத்தை `ப்ராப்பர்ட்டி ஆஃப் சீலேண்ட்'னு பேர் வெச்சுத் தனிநாடா அறிவிச்சுத் தனக்குத்தானே முடிசூட்டிக்கிட்டார் பேட்ஸ். பதறிப்போன இங்கிலாந்து அதிகாரிகள் இவருக்கு எதிராக வழக்குப் பதிவு பண்ண, அது நம்ம எல்லையிலேயே இல்லையே எப்படி விசாரிக்கிறதுனு நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க. சர்வதேசக் கடல் எல்லையில் இந்த `ரஃப் டவர்' இருந்ததுதான் அதற்குக் காரணம். அதுக்கப்புறமா தன்னோட நாட்டுக்குனு ஒரு கொடி, நாணயம், ஸ்டாம்ப்லாம் வெளியிட்டு அலப்பரை பண்ணியிருக்கார் மனுசன். இத்துடன் நிற்காமல் பல பேருக்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் கொடுத்திருக்கார்னா பார்த்துக்கோங்க! `தேவாவுக்கு ஒண்ணும் ஆகாது. யார் சொன்னா? தேவாவே சொன்னான்' மாதிரி... எந்த நாடும் சீலேண்டை ஒரு நாடாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், `உலகத்துலயே குட்டிநாடு நாங்கதான்'னு அந்த நாடே அறிவிச்சிருக்கு.

தண்ணிமேல ஒரு நாடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1978-ல் பேட்ஸ் தன் மனைவியுடன் இங்கிலாந்து போன கேப்ல அலெக்ஸாண்டர் அச்சென்பக், பேட்ஸின் மகனான மைக்கேலைச் சிறைப்பிடிச்சு அந்த இடத்தைக் கைப்பற்றிவிட்டார். அதுக்கப்புறமா சண்டைபோட்டு ஜெயிச்ச பேட்ஸ், அங்கிருந்தவர்களை போர்க் கைதிகள் ஆக்கிவிட்டார். அலெக்ஸாண்டருக்கு சீலேண்ட் பாஸ்போர்ட்டும் தந்து... ராஜதுரோகம் பண்ணதுக்காக அவரைக் கைதும் பண்ணி மத்தவங்களை விடுவிச்சிருக்கார். ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகள் இங்கிலாந்துகிட்ட போய் `என்னப்பா இது'னு நிற்க... `எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை'னு கை விரிச்சிருச்சு. அப்புறம் நேரடியா சீலேண்ட் போய் பேட்ஸ்கிட்ட பேச்சு வார்த்தை நடத்திப் பணத்தைக் கொடுத்து, அலெக்ஸாண்டரை மீட்டு வந்திருக்காங்க. கடுப்பாகிப்போன அலெக்ஸாண்டர், நான்தான் நியாயப்படி சீலேண்டை ஆளணும்னு கொடியெல்லாம் பிடிச்சிருக்கார். சீலேண்ட் இன் ஜெர்மனின்ற பேர்ல இன்னும் முடிசூட்டிட்டு வர்ற பழக்கம் இருக்குனா பார்த்துக்கோங்க!

இப்படியெல்லாம் பண்ணதாலயோ என்னவோ... அல்ஸைமரால் பாதிக்கப் பட்டிருந்த பேட்ஸ் 2012-ல் உயிரிழந்திட்டார். அவருக்குப் பின்னாடி மைக்கேல்தான் இந்த நாட்டோட மன்னர். 27 பேருக்கு இந்த நாட்டில் குடியுரிமை இருக்கிறதாகவும், ஓர் ஆண்டில் ஆறு லட்சம் அமெரிக்க டாலர்கள் மொத்த வருமானம் இருக்கிறதாகவும் கணக்குக் காமிச்சிருக்கு இந்த நாடு. இந்த நாட்டின் நாணயம், ஸ்டாம்ப் எல்லாத்தையும் ஆன்லைன்ல விற்றும், இந்த இடத்துக்குத் தங்க வர்ற சுற்றுலாப்பயணிகளாலும்தான் இந்த வருமானமாம்.

தனிநாடா இருந்துக்கிட்டு விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டாம இருக்குமா? கால்பந்து மைதானத்தில் பாதி சைஸ்கூட இல்லாத இந்த நாட்டுக்குனு கால்பந்து அணியே இருக்கு. அதாவது இந்த நாடு சார்பா வீரர்கள் விளையாடுவாங்க. அது மட்டுமில்லாம 2015-ல் ட்ரெட்மில்லில் ஓடியே ஒரு பாதி மாரத்தானே இங்கே நடந்திருக்காம். இங்கே எல்லாமே அப்படித்தான்!

- கருப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism