Published:Updated:

இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!

இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!
பிரீமியம் ஸ்டோரி
இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!

இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!

இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!

இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!

Published:Updated:
இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!
பிரீமியம் ஸ்டோரி
இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!

ருடபுராணத்தின்படி, பார்க்ல சிவனேனு தூங்கிட்டு இருந்த சார்லி மீது பாம்பைவிட்டுக் கடிக்க வைப்பார் அந்நியன். ஆனால், தமிழ் சினிமாவிலோ ‘நல்லவங்க’ என்ற பெட்ஷீட்டில் பல கதாபாத்திரங்கள் பல பாவச்செயல்களைப் பண்ணியிருக்காங்க. அவர்களில் சிலரைப் பிடிச்சு தண்டனை கொடுப்போமா?

இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!

பெயர்: ஸ்ருதி - ‘காதலன்’ ஹீரோயின்

தண்டனையின் பெயர்: கும்பிபாகம்(சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பல விதங்களில் கொடுமைப்படுத்துதலுக்கு இந்தத் தண்டனை)

தண்டனை: எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளை ‘65’ போடுவார்கள்.

பாவச்செயல்கள்: சிதம்பரத்திற்குப் போகும் வழியில் வயிறு பசிக்குதுனு காடை முட்டையை அவிச்சு அமுக்கினது. ‘தேமே’னு நின்னுகிட்டு இருந்த புழுவோட கதையை முடிச்சது. இது மட்டுமில்லாமல், அசந்து தூங்கிட்டு இருந்த ஹீரோ பிரபுவைப் பார்த்து, ‘மூஞ்சியைப் பாரு குரங்கு. நாலு கிலோ எலும்பு, இரண்டு மீட்டர் தோலைச் சுத்தி வெச்சுக்கிட்டு...’னு வசனம் பேசினதுனு சொல்லிட்டே போகலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!

பெயர்: துரை சிங்கம் - ‘சிங்கம்’ ஹீரோ

தண்டனையின் பெயர்: பன்றி முகம் (குற்றமற்றவரைத் தண்டித்ததற்காகக் கொடுக்கப்படும் தண்டனை)

தண்டனை: பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் உள்ள ஒரு மிருகத்தின் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் தண்டிக்கப்படுவார்கள்.

பாவச்செயல்கள்: மயில் வாகனத்தை எதிர்த்து நின்று ‘சிங்கத்தை போட்டோவில் பார்தக்திருப்பே, வண்டலூர்ல பார்த்திருப்பே...’னு உறுமிக்கிட்டே வசனம் பேசினது ஓகே. ஆனால், சம்பந்தமே இல்லாமல் சைடுல ஊதாக்கலர் சட்டை போட்டு நின்னுகிட்டு இருந்த மனுஷனை எதுக்கு எகிறி அடிச்சாப்லனு தெரியலை. அவரு என்னையா பாவம் பண்ணாரு?

இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!

பெயர்: சம்முவம் - ‘நாட்டாமை’ படத்தில்...

தண்டனையின் பெயர்: அவீசி (பொய்சாட்சி சொல்லியதற்காகக் கொடுக்கப்படும் தண்டனை)

தண்டனை: நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கி வீசி அழுத்தப்படும்.

பாவச்செயல்: இவர் பொய்ச் சாட்சி இல்லை, பொய்த் தீர்ப்பே வழங்கியவர். டீச்சர் சாவுக்குக் காரணம் தன்னுடைய தம்பி பசுபதிதான்னு நினைச்சு, 10 வருசம் ஊரைவிட்டுத் தள்ளி வெச்சார். கூடவே, பசுபதிகூட யாரும் அன்னம் தண்ணி பொழங்கக்கூடாது. மீறிப் பொழங்குவங்களுக்கும் அதே தண்டனைதான்னு சொல்லிட்டாப்ல!
ஸோ... தீர்ப்பை மாத்திச் சொல்ல வழியே இல்லை.

இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!

பெயர்: புல்லட் பாண்டி - ‘கோவில்’ படத்தில்...

தண்டனையின் பெயர்: பிராணி ரோதம் (பிராணிகளைக் கொடுமைப்படுத்தியதற்காகக் கொடுக்கப்படும் தண்டனை)

தண்டனை: கூர்மையான பாணங்களைப் பாவிகளின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

பாவச்செயல்கள்:
‘புல்லட் பாண்டினு ஒருத்தன் வரேன்ல... இப்படி குறுக்க நிக்குற’னு நாயோட குறுக்குலேயே மிதிச்சது. ‘ஓரமா நில்லுனு’ சொல்லி மாட்டின் மேல் துண்டை அடிச்சுத் துவைச்சது. முக்கியமா, ‘நீ என்ன பிச்சை எடுத்து பிஸ்கெட்டா வாங்கித் திங்கப்போற’னு கேட்டு யானையை அடிச்சதுனு இவர் மேல் பல கேஸ் இருக்கு.

- ப.சூரியராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism