Published:Updated:

இதுவும் பயணக்கட்டுரை தான்!

இதுவும் பயணக்கட்டுரை தான்!
பிரீமியம் ஸ்டோரி
இதுவும் பயணக்கட்டுரை தான்!

இதுவும் பயணக்கட்டுரை தான்!

இதுவும் பயணக்கட்டுரை தான்!

இதுவும் பயணக்கட்டுரை தான்!

Published:Updated:
இதுவும் பயணக்கட்டுரை தான்!
பிரீமியம் ஸ்டோரி
இதுவும் பயணக்கட்டுரை தான்!
இதுவும் பயணக்கட்டுரை தான்!

வீடு வரை உறவு, வீதி வரை அனுபவம்தான் பாஸ்! பயணத்தின்போது சீரியஸான அனுபவங்கள் மட்டுமில்லை; காமெடியான அனுபவங்களும் களைகட்டும். கிளுகிளு அனுபவங்கள் தொடங்கி, கிலி அனுபவங்கள் வரை டிராவலில் பஞ்சமே இல்லை. அப்படி என்னனென்ன அனுபவங்களைச் சந்திச்சோம்னு என் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவை நாலு தட்டு தட்டியபோது...

புதுசா பைக் ஓட்டுற பொண்ணுங்களை ரோட்டுல பார்த்தா எல்லா கவலையும் மறந்து போகும் மக்களே! ஸ்கூட்டர் ஓட்டும்போது பொண்ணுங்க மூஞ்சில 9 சிவாஜி கணேசன், 12 உலக நாயகன்களைப் பார்க்கலாம். எங்க ஊர்ல ஒரு பொண்ணு, ‘அதெல்லாம் தைரியமா காலேஜ் போயிடுவேன் டாடி’னு ஸ்கூட்டியை எடுத்துட்டுக் கிளம்ப, முக்கில் முக்குழி சுட்டுக்கொண்டிருந்த ஒரு பாட்டியோட கடையில ஸ்கூட்டியைச் சொருகிடுச்சு. அந்த ஏரியாவும் ஹரி பட ஷூட்டிங் ஸ்பாட் மாதிரி ரணகளம் ஆகிப் போச்சு. ‘அபியும் நானும்’ பட பிரகாஷ்ராஜ் மாதிரி அவங்க அப்பா பின்னாடியே ஃபாலோ பண்ணி வந்ததால, பனியாரத்துக்கும் பாட்டிக்கும் பேமென்ட் செட்டில் பண்ணி, தன்னோட மகளைக் கைத்தாங்கலா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனது... செம டிராஜெடி பாஸ். ‘பாட்டி மேல ஸ்கூட்டி ஏத்துன பியூட்டி’னு யாராவது கமென்ட் போட்டீங்கன்னா பிச்சு பிச்சு!

சீஸன் டைம்ல பஸ்ல டிக்கெட் கிடைக் கிறதே பெருசு. இதுல விண்டோ ஸீட்டுக்கெல்லாம் ஆசைப்படலாமா மக்கா! ‘‘இதான் உங்க ஸீட், உட்காருங்க’’னு நம்ம விண்டோ ஸீட்காரர் பாசமா கூப்பிட்டு உட்கார வெச்சார். ‘ச்சே... நல்ல மனுஷன்யா’னு நினைச்சுக்கிட்டே உட்கார்ந்தா, சீட்டுக்கு நடுவுல இருக்கிற ஆர்ம் ரெஸ்ட்ல மனுஷன் நம்மளைக் கைவைக்க விடவே மாட்டேங்கிறார். மனுஷன் ஒண்ணுக்குப் போகக்கூட கீழே இறங்காம அந்த ஆர்ம்ரெஸ்ட்டில் கை வெச்சுப் பார்த்துக்கிட்டார்னா பார்த்துக்கோங்களேன்!

இதுவும் பயணக்கட்டுரை தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பீஸ்க்கு நேரம் ஆச்சு. செம டிராஃபிக். நடுரோட்ல ஒரு அழகான பொண்ணுகிட்ட ஒருத்தன் சண்டை போட்டுக்கிட்டிருந்தான். ‘ஹலோ, பார்த்தா படிச்ச பொண்ணு மாதிரி இருக்கீங்க. இடிச்சுட்டு இப்படிப் பேசறீங்களே’னு நியாயம் பேசிக்கிட்டிருந்ததை எல்லோரும் வீடியோ எடுக்காத குறைதான். ‘ஏன்யா இடிக்கிறதுக்கும் படிக்கிறதுக்கும் என்னய்யா சம்பந்தம்’னு அந்தப் பொண்ணுக்காக அந்த ஆளைத் திட்டிட்டு (நியாயமா பாஸ் நமக்கு முக்கியம்?), அந்தப் பொண்ணுக்கும் நியாயம் வாங்கிக் கொடுத்துட்டு, ‘இதுக்கு எதுக்குங்க தேங்க்ஸ்? நான் என் கடமையைத்தானே செஞ்சேன்’னு புரட்சித் தலைவர் ஸ்டைல்ல கை குலுக்கிட்டு வந்த கேப்ல, பைக்ல இருந்த லஞ்ச் பேக்கையும் ஹெல்மெட்டையும் ஏதோ ஒரு பக்கி ஆட்டையைப் போட்டுருச்சு! நான் புத்திசாலிங்க, பைக் சாவியைக் கையிலேயே வெச்சிருந்தேன். நல்லா ஏமாந்தியா?

‘பொறுமை கடலினும் பெரிது’னு சும்மா படிச்சா மட்டும் போதும்ங்க! ஃபாலோ பண்றதுலாம் ரொம்பக் கஷ்டம். பெட்ரோல் பங்க்ல இந்தப் பொறுமை ரொம்பச் சோதிக்கும். ‘பெட்ரோல் விலை உயர்வு’ நியூஸைப் படிச்சுட்டு மொத்தமா இன்னிக்கே ஃபில் பண்ணிடலாம்னு எல்லா பத்மநாபன்களும் பெட்ரோல் பங்க்ல பட்டறையைப் போட்டுருப்பாங்க. 7 கவுன்ட்டர்ல எதுல கூட்டம் கம்மியா இருக்கோ, அதைப் பார்த்து செலெக்ட் பண்றதுக்குள்ள எட்டுப் பேரு டேங்க் ஃபில் பண்ணிட்டுக் கிளம்பிருப்பாங்க. ஒரு வழியா ‘இதுலயே போட்டுக்கலாம்’னு வந்தா, அப்போதான் சைக்கிள் கேப்ல ஒருத்தர் வண்டியை நுழைப்பார். லேசா நம்ம முன் பக்க வீலை அவன் பைக்ல இடிச்சு நம்ம கோபத்தைப் பதிவு செய்வோம். `பில் போடப் போறேன்'னு நம்மளுக்குப் பெட்ரோல் ஊத்துற புண்ணியவான் பக்கத்து கவுன்ட்டருக்குப் போய், ஓனர் கணக்கா கணக்குப் போட்டு வேற ஆளை செட்டில் பண்ணிட்டு வர்றதுக்குள்ள, நம்ம கேர்ள் ஃப்ரெண்டுகிட்ட இருந்து அர்ஜென்ட்டா 20 மிஸ்டு கால் வந்திருக்கும். ஏன் பாஸ், உங்களுக்கு எப்படி?

தீபாவளி, பொங்கலுக்கு ஊருக்குப் போலாம்னு ஆசைப்பட்டா மட்டும் போதுமா? அதுக்குக் கொடுப்பினை வேணாமா? பஸ், ரயில்னு எந்த வெப்சைட்டை ஓப்பன் பண்ணினாலும், பக்கிப் பயலுக.. மூணு மாசத்துக்கு முன்னாடி இருந்தே இதே வேலையா இருப்பானுங்கபோல. சரி பார்த்துக்கலாம்னு கோயம்பேடு போனா, ஏதோ வேண்டாத மருமகன் வீட்டுக்கு வந்த மாதிரி எரிஞ்சு விழுவாங்க அரசாங்க பஸ் டிரைவர்ஸ். சீஸன் டைம் இல்லாத நார்மல் நேரத்துல, சொந்தக்காரங்களை செண்ட் ஆஃப் பண்ணப் போனாக்கூட, பாசமா மதுரை வரைக்கும் வரச் சொல்லி உள்ளே பிடிச்சு இழுத்துப் போடுவாங்க. முடியல பாஸ்!

இதுவும் பயணக்கட்டுரை தான்!

டிராவல்னா டிரெயின் இல்லாட்டி எப்பிடி?  ‘அந்நியன்’ படத்துல வர்ற மாதிரி நம்ம பர்த்ல கடையை விரிச்சு ராஜ்கிரண் மாதிரி பெருந்தீனி தின்னுக்கிட்டிருப்பாங்க. அதுல ஒருத்தர், ரெண்டு இட்லி முழுங்கி, பி.பி மாத்திரையை வாயில போட்டு ஏப்பம் விடுறதுக்குள்ள, டிரெயின் விழுப்புரத்தைத் தாண்டியிருக்கும். ‘அப்பாடா, இப்பவாச்சும் விட்டாங்களே’னு பட்டறையை விரிக்கலாம்னு பார்த்தா, ஒரு பாட்டி, ‘தம்பி, எனக்கு மிடில் பர்த் போட்டிருக்காங்க... உங்க லோயர் பர்த்தை எனக்குத் தந்தீங்கன்னா நான் இப்படியே காலாறப் படுத்துக்குவேன்'னு வேண்டுகோள் வைக்கும். ‘இதை முதல்லயே சொல்லியிருந்தா, நான் பாட்டுக்கு சிவனேன்னு மேலே ஏறியிருப்பேனே’ன்னு பாசமா சொல்லிட்டு மேலே ஏறினா... நல்லவங்களை ஆண்டவன் சோதிக்க மாட்டான் பாஸ். எதிரே ‘வி.டி.வி’ த்ரிஷா கணக்கா ஒரு அம்சமான ஃபிகர். தேங்க்ஸ் பாட்டி!

ர்போர்ட்ல மட்டும் சும்மாவா? ஹீரோ ஆகணும்னா சினிமாவுல நடிக்கணும்னு அவசியமில்லை. புதுசா ஃப்ளைட் ஏற வர்றவங்களைக் கண்டுபிடிச்சு உதவி பண்ணாப் போதும். ‘அங்க போய் நின்னீங்கன்னா போர்டிங் பாஸ் தருவாங்க. அதை மடக்காம வெச்சுக்கணும். அப்படியே செல்போன், பர்ஸ், பேக் எல்லாத்தையும் இந்த ட்ரேல வெச்சுட்டு, அதோ அந்த போலீஸ்கிட்ட போய் கையை விரிச்சு நின்னீங்கன்னா குண்டு வெச்சிருக்கீங்களான்னு செக் பண்ணி அனுப்புவாங்க’னு நம்ம சுகிசிவம் மாதிரி அட்வைஸ் பண்றதை அவங்க அப்படி ஒரு ஆர்வத்தோட கேப்பாங்க. ‘இந்த டிக்கெட்தான் முக்கியம். இது இல்லேன்னா நீங்க ஏர்போர்ட்டை விட்டு வெளியே போக முடியாது. கவனமா வெச்சுக்குங்க’னு ஒரு பையன்கிட்ட சொல்ல, அவன் மறுநாள் வீட்டுக்குப் போனப்புறமும், ‘அண்ணே, அந்த டிக்கெட் இனிமே தேவைப்படாதுல்லண்ணே; தூக்கிப் போட்டுறலாமா’னு போன் பண்ணிக் கேட்டான் பாருங்க. உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா தம்பி!

- அருப்புக்கோட்டை தமிழ்