Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
பிரீமியம் ஸ்டோரி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Published:Updated:
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
பிரீமியம் ஸ்டோரி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘அது இது எது’ மொமென்ட்:

ல்லா படங்களிலும் ‘பொண்ணுங்க ஏமாத்திட்டாங்க’னு டாஸ்மாக் சரக்கைப் போட வேண்டியது, அப்புறம் டான்ஸைப் போட வேண்டியதுனு இதுவே சிவகார்த்திகேயன் படங்களின் கதையா இருக்கு. நல்லா யோசிச்சுப் பாருங்க பாஸ், ‘மனம் கொத்திப் பறவை'யில் ஹீரோயின் காதலிக்காதப்பவே காதலிச்சதா பொய் சொல்லி ஏமாத்தினது ஹீரோ, ‘எதிர்நீச்சல்’ படத்தில் ‘குஞ்சிதபாதம்’கிற பேரை மறைச்சு ஹீரோயினை ஏமாத்தினது ஹீரோ, ‘மான்கராத்தே’யில் தெரியாத பாக்ஸிங்கைத் தெரியும்னு சொல்லி ஏமாத்தினதும் ஹீரோ, ‘காக்கிச் சட்டை’னு டைட்டில் வெச்சுக்கிட்டே ‘போலீஸ் வேலை பார்க்கலை’னு ஹீரோயினை ஏமாத்தினதும் ஹீரோ, இப்போ ‘ரெமோ’விலும் அதே கதை. செய்றதெல்லாம் செஞ்சுபுட்டு, ‘பொண்ணுங்க ஏமாத்திட்டாங்க’னு புலம்புறது என்ன நியாயம் ப்ரோ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தட் ‘இங்கே என்ன சொல்லுது’ மொமென்ட்:

மேடையிலேயே அழுவாச்சி காவியம் படைச்ச சிவகார்த்திகேயனுக்கு ஆதரவா சிம்புவும் குரல் கொடுத்திருக்காரு. அவருக்காவது ஒரு படம் ரிலீஸ் ஆகிறதில் பிரச்னை. சிம்புவுக்கோ எல்லா படமும் ரிலீஸ் ஆகிறதில் பிரச்னை. என்ன பிரச்னைனு கேட்கிறீங்களா? சிம்புதான் பிரச்னை. நியாயமாப் பார்த்தா `என்னை வேலை பார்க்க விடுங்க’னு சொல்ல வேண்டியவர்.... கௌதம் மேனன்தான்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘இன்னுமா வரலை எங்களுக்கு’ மொமென்ட்:

யாரோ அமெரிக்கப் பாடலாசிரியராம், பாப் டிலானுக்கு நோபல் பரிசுனு நியூஸ் வருது. ஏன் நம்ம ஊரில் வைரமுத்துவில் இருந்து பொயட்டு தனுஷ் வரைக்கும் நோபல் பரிசு கிடைக்கலைனு தெரியலை. அதிலும் சினேகனுக்கு ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா’ பாட்டுக்கே நோபல் தந்திருக்கணும். ‘என்னம்மா ஆச்சு உங்களுக்கு?’ வீடியோவுக்காவது நோபல் கிடைக்குமா, கிடைக்காதா? என்னம்மா ஆச்சு உங்களுக்கு, நோபல் வரலையே எங்களுக்கு!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘உண்மையைச் சொல்லிட்டாரே’ மொமென்ட்:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

``காவிரிப் பிரச்னையை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேடாது’’னு சொல்லியிருக்கார் பொன்.ராதாகிருஷ்ணன். கிடைச்சாதானே, தேடறதுக்கு? இங்கே என்ன பண்ணினாலும் ஒன்றரை எம்.எல்.ஏ சீட்டுக்கு மேல ஒண்ணும் தேறாதுங்கிறதாலதான் காவிரிப் பிரச்னையில் இருந்து கச்சத்தீவுப் பிரச்னை வரைக்கும் தமிழகத்தை அம்போன்னு விட்டுட்டு, கர்நாடகாவில ஆதாயம் தேடறீங்க. கரெக்டாத்தானே பேசுறேன்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘அப்பாவா... ஆப்பா’ மொமென்ட்:

உத்தரப்பிரதேசத்தில் அப்பா முலாயம்சிங் யாதவுக்கும் மகன் அகிலேஷ் யாதவுக்கும் அப்படியொரு சண்டை. அந்தா, இந்தான்னு இழுத்துக்கிட்டிருந்தது இப்போ வெளிப்படையாவே தெரிஞ்சுடுச்சு. `அகிலேஷ் யாதவ் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இல்லை’னு அறிவிச்சிட்டார் முலாயம். மகன்கள் பதவிக்கு வர்றதில் அப்பா முட்டுக்கட்டையா இருக்கிறது உ.பி.யிலும் இருக்குங்கிறது நமக்குத் தெளிவாகத் தெரியுது. இந்த அப்பாக்களே இப்படித்தான்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘எண்ட ஸ்டேட் கேரளா’ மொமென்ட்:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

கேரளாவில் தொழில்துறை அமைச்சரா இருந்தவர் ஜெயராஜன். ஆமா, இருந்தவர்தான். அவர் சொந்தக்காரங்களுக்கு அரசுப் பதவி போட்டுத் தர்றார்னு பிரச்னை வர, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா பண்ணிட்டுப் போகச் சொல்லியிருக்காங்க. அவரும் போயிட்டார். ஆனா நம் ஊரில்... வேணாம்... வேணாம்... வலிக்குது!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism