`ஹப்பாடா’னு எக்ஸாம்ஸ் முடிச்சுட்டு, லீவை என்ஜாய் பண்ண ப்ளானைப் போட்டுக்கிட்டு இருக்கும்போது, ‘அடுத்து என்னப்பா பண்ணப் போற? லீவ்ல எல்லாம் சும்மா இருக்கக் கூடாது. ஏதாவது யூஸ்ஃபுல்லா பண்ணணும்’னு அட்வைஸ் பண்றதுக்காகவே ஒரு கூட்டம் வரிசையில் காத்திருக்கும். நாங்க விக்கித் திக்கிப் போய் நிற்கிற கஷ்டகால மொமன்ட்ஸ்...

அறுந்த ரீலு:

என்னதான் ஏழு கழுத வயசானாலும் லீவுனு வந்தா நாங்களும் கொயந்ததாங்க. வருஷம் ஃபுல்லா படிச்சு டயர்ட் ஆகி இருக்கிற மைண்டை ஃப்ரீயா வெச்சுக்கலாம்னு நாங்க ஒரு பயங்கர ப்ளான்ல இருந்தா, சம்மர் ஸ்பெஷல் கோர்ஸ்னு ஆல்ரெடி தீஞ்சுபோன தோசையை இன்னும் தீச்சு எங்க வாய்ல ஊட்டுறீங்களே? இதைத்தானேய்யா பல வருஷமா ஸ்கூல்லயும் காலேஜ்லயும் சொல்லித் தந்தாங்க!

நல்லா வருவீங்க… ஆங்!

லீவ் விட்டா கொஞ்ச நேரம் சும்மா இருக்கக் கூடாதே? எங்க இருந்துதான் நாங்க செய்றதுக்குனே வேலை பிடிப்பீங்களோ? நல்லா இருக்கிற துணியைக் கசக்கி அயர்ன் பண்ண வைக்கிறது, குப்பையைக் கொட்டி வீட்டை சுத்தம் செய்ய வைக்கிறது, நடந்து போறப்போகூட `கம்பெனிக்கு வா'னு டிரைவரா யூஸ் பண்றதுனு கலர் கலரா வேலை வெச்சு எங்களைக் கசக்கிப் பிழியறீங்களே... உங்களால மட்டும் எப்படி இது முடியுது! எங்களால முடியலை. இதெல்லாம் பாவ லிஸ்ட்ல சேரும்னு அறிவீங்களா?

அட்வைஸ் அய்யாசாமீஸ்:

மேலே சொன்ன உங்க சட்ட திட்டங்களுக்கெல்லாம் உட்படலைனா, அட்வைஸ் பண்ணித் திருத்துறேங்கிற பேர்ல ஊர் பேர் தெரியாதவங்க வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டுப் போய் ‘சொல்ற பேச்சையே கேட்க மாட்டேங்கறான்’னு பக்கம் பக்கமா கம்ப்ளைன்ட் வாசிச்சு, அட்வைஸ் கேட்க வெச்சு எங்களைக் கொட்டாவி விட வைக்கிறீங்களே, நியாயமா நியாயமாரே?!

நெட்டிசன்ஸ் நாங்க பயங்கர பாவம்!

இந்த லீவ்ல நெட்பேக் போட உங்ககிட்ட காசு வசூல் பண்றதுக்கு எப்படி எல்லாம் டகால்ட்டி வேலை பார்க்க வேண்டியிருக்கு?! ஸ்கூல், காலேஜ் போகும்போதாவது, `புராஜெக்ட் வொர்க் இருக்கு...' அது இதுனு கதை சொல்லிக் காப்பாத்திப்போம். ஆனா லீவ் விட்டா, கரன்ட் கம்பத்தில் மாட்டின காக்காதான் நாங்க. அவ்வ்வ்...

என்னம்மா இப்படி பண்றீங்களேமா?

அடுத்து எங்களை அட்டாக் பண்ற ஆயுதம் ‘வாட் நெக்ஸ்ட்’ தான். `இட்லிக்கு தேங்காய் சட்னி வெச்சுக்கலாமா, தக்காளிச் சட்னி வெச்சுக்கலாமா'னு கன்ஃபியூஸ்ல திரியற ஏஜ் இது. எங்ககிட்ட போய் இப்படியெல்லாம் கேட்டுக் கொலையா கொல்றீங்களே? அப்படியே சொன்னா மட்டும், கேட்ட கோர்ஸ்ல சேர்த்து விடவா போறீங்க? `எல்லா கோட்டையும் முதல்ல இருந்து அழி, நான் சொல்றதைக் கேளு’ங்கிற மாதிரி உங்களுக்குப் பிடிச்ச கோர்ஸ்தானே சேர்த்து விடப்போறீங்க? சொல்லுங்கப்பு!

- ச.ஆனந்தப்பிரியா