இது கேலி, கூத்து, கலாய் நிறைந்த, ஜாலியான தீபாவளி நிகழ்ச்சிகள்...

காலை 6.00 மணிக்கு ‘மங்குனி இசை’

மன்னார்குடி ஏழைமகனின் மெட்டுப் பாடல்கள் மன்னைசாதிக் மற்றும் கல்பனா அக்கா இணைந்து பாடும் இசை விருந்து...

காலை 7.00 மணிக்கு ‘டும் தகிட தத்தம் ஹேன்ன்ன்...’

பல்துறை வித்தகர் டி.ஆர் அவர்கள் நமக்காக டேபிளையும், தொடையையும் தட்டித் தாளம் போட்டு, வெறும் வாயில் செனாய் வாசிக்கும் அற்புதமான நிகழ்ச்சி...

காலை 8.30 மணிக்கு ‘தீபாவளி தெனாவட்டு பலன்’

உங்கள் ராசிக்கு இந்த தீபாவளியில் எத்தனை பேரிடம் தண்ணியைப் போட்டு தகராறு செய்யலாம் என பிரபல ஜோதிடர் கோவிலூர் ஆனந்தராஜன் கணித்துச் சொல்லும் நிகழ்ச்சி.

காலை 9.30 மணிக்கு ‘கருத்தக்கண்ணன் ரேக்ளா ரேஸ்’ திரைப்படம் உருவான விதம்

2011 ம் ஆண்டு வெளியான ‘கருத்தக்கண்ணன் ரேக்ளா ரேஸ்’ திரைப்படம் உருவான விதம் பற்றி நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் மனம் திறக்கின்றனர்.

காலை 11.00 மணிக்கு ‘சிறப்புப் பட்டிமன்றம்’

நடுவர் ஈரோடு மகேஷ் தலைமையில் ‘தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது ஜெயம் ரவியா? பாவனாவா?’ என விவாதிக்கும் சுவாரஸ்யமான பட்டிமன்றம்.

மதியம் 1.00 மணிக்கு ‘சௌகார்பேட்டை’ - திரைப்படம்.

தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, புத்தம்புதிய கிளுகிளு திகில் திரைப்படம்.

மாலை 3.30 மணிக்கு ‘ புரட்சித் திலகத்தின் மறுபக்கம்’

சுப்ரீம் ஸ்டார் புரட்சித் திலகம் அவர்கள் தனது பெயர்மாற்றம், நடிகர் சங்கம், கறிவேப்பில்லை, கொத்தமல்லி அனைத்தையும் பற்றி மனம் திறக்கும் நேர்காணல்.

மாலை 4.00 மணிக்கு ‘மகேஷ்பாபுவின் வில்லன் நான்’

மகேஷ்பாபு படத்தில் வில்லனாக வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும் என காமெடி நடிகர் யோகிபாபு கலந்துரையாடும் கலகலப்பான நிகழ்ச்சி.

இரவு 8.30 மணிக்கு ‘ஜெனிஃபர் கருப்பையா' படக்குழுவினர் நேர்காணல்’

திரையரங்கைவிட எடிட்டர் டேபிளில் அதிகமுறை ஓடிய, திரைக்கு வந்ததே பலருக்கும் தெரியாத, புத்தம் புதிய கிராமத்துக் காதல் காவியம் ‘ஜெனிஃபர் கருப்பையா’ திரைப்பட நடிகர்கள் கலந்துரையாடும் கலகலப்பான நிகழ்ச்சி.

மாலை 5.00 மணிக்கு ‘செவனேனு தானடா இருந்தேன்’ - திரைப்படம்.

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக, திரைக்கும் இதுவரை வராத, விஜயகாந்த், வைகோ, கருணாநிதி மற்றும் பலர் நடித்த புத்தம் புதிய அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘செவனேனுதானடா இருந்தேன்’ காணத்தவறாதீர்கள்.

இரவு 9.00 மணிக்கு ‘பட்டாப்பட்டியா? பெர்முடா டவுசரா?’

இசையமைப்பாளர் காவேரி குமரன் தலைமையில் இளம் பாடகர்கள் பட்டாப் பட்டியும், பெர்முடா டவுசரும் அணிந்துகொண்டு பாடும் பாட்டுக்குப்பாட்டு போட்டி...

நிகழ்ச்சிகள் அனைத்தையும் காணத்தவறாதீர்கள்...

-ப.சூரியராஜ்