`கல்யாணம் பண்ணிப்பாரு', `வீட்டைக் கட்டிப்பாரு', `சிம்புவ வெச்சுப் படம் எடுத்துப் பாரு'ன்னு நம்ம பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. ரொம்பக் கஷ்டமான விஷயமப்பா. ஒரு பயலைக் கல்யாணத்துக்கு மன ரீதியா தயார் பண்ற வித்தை இருக்கே... சிக்மண்ட் ஃப்ராய்டு தோத்திடுவாரு! போங்க.

பொண்ணு பார்க்கிற வரைக்கும் பயலுக நினைப்பு எப்படி இருக்கும்னா, ஊர்லேயே... இந்த தாலுக்காவிலேயே... ஏன் இந்த மாவட்டத்துலேயே நான்தான் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் ரேஞ்சுல ஷோல்டரை ரெண்டு இஞ்ச் மேல தூக்கி வெச்சிக்கிட்டு திரிவாய்ங்க. நமக்கெல்லாம் பொண்ணு கொடுக்க ஆயிரம் பேர் இருக்காங்க மச்சி அப்படினு நினைப்புல இருப்பாங்க. பொண்ணு பார்க்கறாங்கனு சொன்னதும் உடனே ஷங்கர் படத்தை வாங்கப்போற வினியோகஸ்தர்கள் மாதிரி பொண்ணு கொடுக்க நான், நீ ன்னு கூட்டம் குவியும்னு பசங்க ஒரு கணக்குப் போட்டா ஆர்ட் ஃபிலிம் மாதிரி போணியே ஆக மாட்டாங்க. இதுதான் ஸ்டார்ட்டிங். அதுக்கே லைட்டா இருளடிக்கும்.

அட... இந்த வலிக்கு முன்னால காதல் தோல்விகூடப் பெரிசு இல்லைங்க. அதுலேயாச்சும் ஒரு பொண்ணுகூட மட்டும்தான் பஞ்சாயத்து. இதுல ஒட்டுமொத்தச் சமூகத்துக்கூடவே மல்லுக்கட்ட வேண்டியிருக்கும். ‘அப்பறம் தம்பி சாஃப்ட்வேருங்களா’ம்பாங்க. `இல்லைங்க'னு சொன்னா, `படிக்கிற காலத்துல ஒழுங்காப் படிச்சு இன்ஜினீயராகி நல்லா சம்பாதிச்சிருந்தா இந்நேரம் கொழந்த குட்டினு செட்டில் ஆகியிருக்கலாம்'னு ஒரு நீண்ட ஆறுதல் உரைக்குத் தயாராவாங்க. நேரடி மோதலைத் தவிர்த்துட்டு இடத்தைக் காலி பண்ணிடணும். ஏன்னா, ஒவ்வொரு ஊருக்கும் சம்பந்தமாகிற இடத்தைக் கலைச்சுவிடுறதுக்குனே பதினோரு பேர் கொண்ட ஒரு திருமணத் தடுப்புக் குழு தீவிரமா இயங்கிட்டு இருப்பாங்க.

என்னையெல்லாம் பார்த்த உடனே பிடிக்கும்னு பவர் ஸ்டார் வசனம் பேசுன வாயி ‘பார்த்த விழி பார்த்தபடி...’னு ‘குணா’ கமல் மாறி மாறிடும். ‘இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்’னு இருந்த போர்ட் கடைசியா ‘விற்கப்படும்’னு வந்து நிற்கும் பாருங்க. அது போல இப்படிப் பொண்ணு வேணும். அப்படிப் பொண்ணு வேணும்னு கேட்ட பசங்க கட்டக்கடைசியா பொண்ணு வேணும்கிறதோட வந்து நிப்பாங்க. பாவம் சார் கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கிற பசங்க!

இன்னொரு ரகம் இருக்கு. ‘என்ன சம்பளம் வாங்கறீங்க தம்பி’னு ஆரம்பிப்பாங்க. `நாப்பதாயிரம்'னு நெஞ்சு புடைக்கச் சொல்வோம். ‘இதென்னங்க இவ்ளோ கம்மியா இருக்கு. நம்ம மச்சாண்டாரு பையன் நேத்து இந்நேரம்தான் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் ரெண்டு லட்சம் வாங்குறான். உங்க சம்பளம் ரொம்ப கம்மியா இருக்கே...’ னு பீதியைக் கிளப்புவாங்க. அதென்ன கடல்ல கப்பல் தள்ளுற வேலைனு யோசிச்சு நமக்கு நாக்குத் தள்ளிரும்.

அடுத்து தினமும் போட்டோக்கள் வரும்... போகும். ஆனால், எதுவும் நடக்காது. ஒவ்வொரு போட்டோவுக்கும் நம்ம கான்ஃபிடென்ஸ் ஒரு சதவிகிதம் குறைஞ்சிகிட்டே வரும். கடுப்பாகிப் புலம்பல் ஸ்டேஜுக்கு வந்திருப்போம். வீட்டுக்கு போன் பண்ணி, `அந்த வாடிப்பட்டில இருந்து வந்த ஜாதகம் என்னாச்சு', `வேடசந்தூர் பொண்ணு என்னாச்சு'னு நாமளே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிடுவோம். `அதெல்லாம் நேரம் வந்தா எல்லாம் தன்னால நடக்கும்யா... நீ ஏன் கிடந்து அலையிற'னு எரியற கொள்ளியில எக்ஸ்ட்ராவா நாலைஞ்சு டிராப் பெட்ரோலைத் தெளிச்சுவிடுவாங்க பெத்தவங்க.

- சிவகுமார் கனகராஜ்