Published:Updated:

ஒய் பிளட்... ஸேம் பிளட்!

ஒய் பிளட்... ஸேம் பிளட்!
பிரீமியம் ஸ்டோரி
ஒய் பிளட்... ஸேம் பிளட்!

ஒய் பிளட்... ஸேம் பிளட்!

ஒய் பிளட்... ஸேம் பிளட்!

ஒய் பிளட்... ஸேம் பிளட்!

Published:Updated:
ஒய் பிளட்... ஸேம் பிளட்!
பிரீமியம் ஸ்டோரி
ஒய் பிளட்... ஸேம் பிளட்!
ஒய் பிளட்... ஸேம் பிளட்!

தாகப்பட்டது மக்களே... ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் நல்லா படிச்சாலோ அல்லது நல்ல மார்க் எடுத்தாலோ, ஏதாச்சும் ஒரு சாக்லேட்டோ இல்ல ஒரு புத்தகமோ தந்து நம்மளை ஊக்கப்படுத்துவாங்க. இந்த ஊக்கப்படுத்துற கான்சப்ட்தான், ஆபீஸ்ல இஸ் ஈக்வல் டூ அப்ரைசல். அப்ரைசல்ங்கிற வார்த்தையைக் கண்டுபிடிச்சு, அதை டிக்‌ஷ்னரியில சேர்த்தது வெள்ளக்காரன்கிறதுனாலயோ என்னவோ, நம்ம நாட்டைவிட அவன் இதை கொஞ்சம் பரவாயில்லாம ஃபாலோ பண்றான்.

அடிச்சுப் பிடிச்சு அப்பாடானு ஒரு வேலையில சேர்ந்தா, அங்க தெரியாததைக் கத்துக்கொடுக்குறோம்னு அவங்களே நெனச்சுக்கிட்டு ட்ரெயினிங் ட்ரெயினிங்னு ஒரு ஆறு மாசத்துல இருந்து ஒரு வருஷம் வரைக்கும் லோலோலோனு லொங்கழிப்பாங்க. ஆட்டத்துல பாதிப்பேரைத் தூக்கத்தான் இந்த கண்துடைப்புங்கிறது, கார்ப்பரேட் சமூகத்துக்கு மட்டுமே தெரிந்த, ஊரறிந்த ரகசியம்.

‘ஹைய்யா ட்ரெயினிங் முடிச்சாச்சு... இனி நாமளும் ஒரு எம்ப்ளாயி’னு குதூகலமா ஆபீஸுக்குக் கிளம்பிப் போக ஆரம்பிச்சா, அங்க ஆரம்பிக்குது அடுத்த ஏழரை. பெர்ஃபார்மன்ஸ் அப்ரைசல்... அதாவது, ஒருத்தரோட வேலைத்திறனைக் கருத்தில்கொண்டு, அவரவர் பதவிக்கு ஏற்றார்போல் சம்பளமானது இன்சென்டிவ்ஸ் உடன் சேர்த்து உயர்த்தப்படும். இதுதாங்க கான்செப்ட்டு!

வேலைக்குச் சேர்ந்த ஆறு மாசத்துலயோ, ஒரு வருஷத்துலயோ முதல் அப்ரைசல் தருவாங்க. முதல் முறையா அப்ரைசலுக்குப் போகும்போது, நம்ம பசங்களப் பாக்கணுமே? அட அட... சும்மா ‘மாரி’ படத்துல ஓபனிங் சாங்குக்கு ஆடுற தனுஷ் மாதிரி ‘ஏ ஜிந்தாக் ஏ ஜிந்தாக்’னு போவானுங்க. உள்ள போய் ‘கேஸ் ஷீட்’டைப் பாத்தா, ‘மூணு’ படத்துல பைபோலார் டிஸ்ஆர்டர் வந்த தனுஷ் கணக்கா ஆகிடுவானுங்க. சரி பரவாயில்லை, கம்பெனி இன்னும் நம்மகிட்ட எதிர்பார்க்குது, ‘உண்மை, உழைப்பு, உயர்வு’ வாசகத்துக்கு ஏத்த மாதிரி மொபைலை எல்லாம் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு வேலை செய்வானுங்க. வேற என்ன எதிர்பார்த்தீங்க? 

அடுத்தவாட்டி அப்ரைசலுக்கு முழு நம்பிக்கையோட உள்ளே போனா, வெளிய வரும்போது பேக்ரவுண்ட்ல ‘விடுகதையா இந்த வாழ்க்கை’னு பாட்டு ஓடிக்கிட்டு இருக்கும்.

மூணாவது அப்ரைசல்தாங்க அல்டிமேட். உள்ள போகும்போதே, ‘எங்கே செல்லும் இந்தப் பாதை’னு ஆர்.ஆர் ஓடும். வெளியே வரும்போது என்ன நிலைமைனு சொல்லித்தான் தெரியணுமா?!

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, 9 கிரகங்கள்லயும் உச்சம் பெற்றவனா, ஒருத்தன் எல்லாவாட்டியும் இன்ட்ரோ சாங் ஹீரோ மாதிரியே போயிட்டு, வரும்போது அதே கெத்துல வருவான். ‘யாரது... நம்ம செல்லத்தாயி மகனா’னு  கண்ணச் சுருக்கிப் பார்த்தாதான் தெரியும். அட, எப்பவும் வாட்ஸ்-அப்பை டெஸ்க்டாப்ல ஏத்திவெச்சுக்கிட்டு போட்டுட்டு, கூடவே ஒரு டேப்ல ஃபேஸ்புக், இன்னொரு டேப்ல ட்விட்டர், அடுத்த டேப்ல யூ-டியூப்னு எல்லா விண்டோஸையும் ஓப்பன் பண்ணி வெச்சுக்கிட்டு, ‘மல்டி டாஸ்கிங்’ செஞ்சுகிட்டு இருக்கிறதா காட்டிக்கிற ‘டியூட்’டாதான் இருக்கும்!

‘அடப்பாவிங்களா... என்ன வாழ்க்கைடா இது’னு நம்ம பயலுக ஒரு ஓரமா ‘வானம்’ படம் சிம்பு மாதிரி குத்தவெச்சு உட்கார்ந்திடுவானுங்க!

ஸேம் பிளட்தானே?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- எஸ்.எம்.கோமதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism