Published:Updated:

நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?

நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?
பிரீமியம் ஸ்டோரி
நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?

நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?

நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?

நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?

Published:Updated:
நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?
பிரீமியம் ஸ்டோரி
நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?
நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?

டந்த பத்து வருடங்களில் நாம் தமிழ் சினிமாவில் சந்தித்த கதாபாத்திரங்கள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள்? ஒரு ஜாலி விசிட்!

‘கஜினி’ சஞ்சய் ராமசாமி!

அந்த ரெட்டை மொட்டைகளையும் போட்டுத் தள்ளிவிட்டு டாட்டா சுமோவில் கிளம்பிய சஞ்சய் ராமாசாமி அடுத்து என்ன ஆனார் தெரியுமா? அவருக்கு சில மாதங்களிலேயே பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்பிவிட்டன. கல்பனா போன துக்கம் தாளாது அவ்வப்போது கல்கோனா மிட்டாய்களை வாயில் கடித்துக்கொண்டிருப்பார். பல வருடங்களாக நஷ்டத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த ‘ஏர்வாய்ஸ்’ மொபைல், சமீபத்து ‘ஜியோ’ சிம் வருகையால் தக்காளி ஜூஸ் ஆனது. தான் வைத்திருக்கும் சோப்பு டப்பா கேமராவைக் கொண்டு உளுந்தூர்ப்பேட்டை அருகில் ‘உடனடி பாஸ்போர்ட் போட்டோ ஸ்டுடியோ’ ஆரம்பித்திருக்கிறார். அந்த வருமானமும், பக்கத்துவீட்டு ஓசி வைஃபை பாஸ்வேர்டையும் வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் சஞ்சய் ராமசாமி!

சந்தோஷ் சுப்ரமணியம் சந்தோஷ்!

நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தோஷுக்கும் ஹாஹா...ஹாசினிக்கும் இடையே திருமணம் நடந்த சில நாட்களிலேயே ஹாசினிக்கு ஒரு பிரச்னை வந்தது. திடீரென அவர் குரங்கு சேட்டைகள் எதுவும் பண்ணாமல் தெளிவாய்ப் பேச ஆரம்பித்துவிட்டார். என்னவோ ஏதோ என பயந்துபோன மாமனார் சுப்ரமணியம் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, மருத்துவரோ, ‘அவங்க தலையில் பலத்த அடிபட்டு மெடுலா ஆப்லங்கேட்டா நொறுங்கிப்போச்சு’ எனக் கண்ணாடியைக் கழற்றிக் கையைப் பிசைய... சுப்ரமணியம் அரண்டே போனார். ஒருநாள் சந்தோஷை தெரியாமல் முட்டியிருக்கிறார் ஹாசினி. ‘மறுபடியும் முட்டாவிட்டால் கொம்பு முளைக்கும்’ எனக் கூறிய சந்தோஷ், எகிறி நடுமண்டையிலேயே முட்டியிருக்கிறார். அந்த முரட்டு முட்டுதான் ஹாசினியின் மெடுலா ஆப்லங்கேட்டா நொறுங்கக் காரணம். பின்னர், மருத்துவ சிகிச்சை மூலம் மெடுலா ஆப்லங்கேட்டாவைச் சரிசெய்து, மறுபடியும் ஹாசினியை லூஸாக்கிய பின்புதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டது சுப்ரமணியனின் குடும்பம். இப்போது இரண்டு குழந்தைகளோடு சந்தோஷ் - ஹாசினி ஜோடி சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், போனவாரம் கூட குஸ்தி கோவிந்தனுக்கு பயந்து மாறுவேடத்தில்தான் சுற்றிக்கொண்டிருந்தார் எம்.எஸ்.பாஸ்கர். நேற்று முன்தினம், தெரியாத்தனமாய் நரேந்திரமோடி கெட்டப்பில் அவர் சுற்றிவர ‘இந்தியாவுக்குள் நரேந்திர மோடியா’ என சந்தேகப்பட்டு கேட்ச் பண்ணிவிட்டனர்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ கார்த்திக்!

நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?

‘ஜெஸ்ஸி’ திரைப்படத்தை இயக்கிய கார்த்திக், அடுத்ததாக ‘பஃபல்லோ’ என ஒரு திரைப்படம் இயக்கினார். அது அச்சு அசல் அப்படியே ‘மக்கானோ சோளம்மா’ எனும் கொரிய படத்தின் காப்பி என டைம்பாஸ் ‘சுட்டபடம்’ பகுதியில் எழுதிவிட, நெட்டிசன்கள் கார்த்தியைக் கலாய்த்துக் கதறவிட்டார்கள். அதன் பின்னர், தான் அஜித்துக்கு எழுதி வைத்திருந்த கதையை சடகோபன் ரமேஷை ஹீரோவாய்ப் போட்டு எடுத்தார். அந்தப்படம் எப்போ ரிலீஸ் ஆச்சுனே யாருக்கும் தெரியலை. கார்த்திக் ஜெஸ்ஸியைக் காதலித்தபோது ‘இங்கே ஒரே பிரச்னையா போயிட்டு இருக்கு கார்த்திக். நமக்குள்ள இனி எதுவும் கிடையாது’ என ஜெஸ்ஸி மூச்சுக்கு மூந்நூறு தடவை மூக்கை உறிஞ்சிக்கொண்டே சொல்வார். ஆனால், அது என்ன பிரச்னை என இதுவரையிலும் தெரியவில்லை. அதை எப்படியாவது தெரிந்துகொண்டு அதையே ‘ஜெஸ்ஸி - 2’ என்ற பெயரில் படமாக்கலாம் என்ற முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார் கார்த்திக்.

‘அந்நியன்’ அம்பி!

நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?

சிகிச்சையை முடித்துவிட்டு நந்தினி எனும் நேன்டினியைத் திருமணமும் செய்துகொண்டு ஹனிமூனுக்குக் கிளம்பினார் அம்பி. ‘ஃபேன் சுத்தலைனா விரலைவிட்டு ஆட்டுவேன்’ எனத் திருந்தியது போல் நடித்து மதர் ப்ராமிஸ் செய்துவிட்டு ரயிலில் ஏறினார். அதன் பின்னர், ரயிலில் சரக்கடித்தவரைப் பாலத்தில் இருந்து பல்டி அடிக்கவிட்டது நாம் எல்லோரும் அறிந்ததே. இப்போது அம்பி என்ன பண்ணிட்டு இருக்கார்னா... ‘தப்பு பண்ணினால் தண்டிக்க அந்நியனை அழையுங்கள்’ என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று ஆரம்பித்து, அதில் தினமும் சமுத்திரகனியைவிட அதிகமாய் அட்வைஸ் செய்து வருகிறார். இதனால் நெட்டிசன்களோ, ‘நமக்கு ஒரு என்டர்டெயின்மென்ட் சிக்கிருச்சு’ என மீம்ஸ்களால் வறுத்தெடுத்து அம்பி 65 போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அம்பியோ ‘இந்த லோகத்துல யாருமே சரியில்லை...’ என நாலு குடம் தண்ணியைத் தலை மேல் ஊற்றிக்கொண்டு தண்டனை கொடுக்கக் கிளம்பிவிடுகிறார். போனவாரம்கூட பக்தவத்சலம் பார்க்கில் ப்ரீத்திங் பிராணாயாமா பண்ணிக்கொண்டிருந்தவரை தூங்கிக்கொண்டிருக்கிறார் எனத் தவறாய் நினைத்துப் போட்டுத்தள்ளியிருக்கிறார் அம்பி.

- ப.சூரியராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism