ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

?சூர்யாவின் சிங்கத்துக்கும், விஜய்யின் புலிக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை ‘நச்’னு சொல்லுங்க பாஸ்..!
மதன்: சிங்கம் பார்த்தா காதுக்கு ஆபத்து. புலி பார்த்தா உசிருக்கே ஆபத்து.
சஞ்சீவ்: சிங்கம் மூணாவது பாகத்துக்குத்தான் நாக்கு தள்ளுது. புலி முதல் அடியே மரண அடி.
ஜம்புலிங்கம்: படம் பார்க்கிறவங்களுக்குக் காதுல ரத்தம் வந்தா அது சிங்கம். கண்ணுல இரத்தக் கண்ணீரே வந்தா அது புலி.
துரைமுருகன்: ரெண்டுமே சிரிப்பும் காட்டும். வெறுப்பும் ஏத்தும்.
தியாகு: புலி - கிலி. சிங்கம் - பங்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

?எந்தெந்த விஷயங்களைப் பார்க்கும்போது, உங்களுக்குக் குழந்தைப்பருவம் நினைவுக்கு வருகிறது?
லூயிஸ் செல்வராஜ்: ஆரஞ்சு மிட்டாய், இடிந்து போன டென்ட் கொட்டாய், ஆடு மேய்த்தது, பள்ளிகளில் தமிழ்ப் பாட்டு கேட்கும்போது, ஸ்கூல் யூனிஃபார்ம்ல பசங்களை தியேட்டர்ல பார்க்கும்போது, சம்மர் ஹாலிடேஸ் விளையாட்டுகளைப் பார்க்கும்போது, இன்னும் நிறைய... அது ஒரு அழகிய நிலாக்காலம்.
ராமச்சந்திரன்: எந்தக் கடையிலேயாவது இலந்தைப்பழத்தைப் பார்த்தா சின்ன வயசுல ஃப்ரெண்டுகிட்ட பிடுங்கித் தின்ன ஞாபகம்தான் வரும்!
வால்டர் ராபின்சன்: யாராவது சின்னப் பசங்களை மளிகைக் கடையில் பார்க்கும்போது குழந்தைப் பருவம் பிராண்டும். (இவனும் நம்மளை மாதிரி மீதிக் காசுக்கு மிட்டாய் வாங்கிருவானோ?)
சிதம்பரம்: நம்ம ஊர் சைக்கிள் கடையைப் பார்க்கிறப்போ, வாடகைக்கு சைக்கிள் எடுத்து, அதை வெச்சுப் போட்டியில் கலந்துகிட்டு, சாக்கடையில் விழுந்தது.

?வைகோ தனது அரசியல் அனுபவத்தைப் புத்தகமாக எழுதினால், அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்?
சண்முக சுந்தரம்: நடைப் பயணங்கள் முடிவதில்லை.
விஜய்குமார்: கலிங்கப்பட்டியும் கிரேக்கமும். (அவிழ்க்கப்பட்ட முண்டாசின் கதை)
தமிழ்: கூட்டணியும் கடந்து போகும்.
ஸ்ரீகாந்த்: படித்தவுடன் கிழித்துவிடவும்.
முத்துராஜ்: எப்படி இருந்த நான்...!
?சமீபத்தில் ‘`புள்ளப்பூச்சிக் கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன்’’ங்கிற மாதிரி, நீங்க ஃபீல் பண்ண விஷயம் எது, ஏன்?
கௌதமன்: பல வருசமா நாமளும் தனியார் நிறுவனத்தில வேலை பார்த்து நமக்குனு ஒரு பதவி, விசிட்டிங் கார்டுனு இல்லாதப்போ, ஏப்ரல் 2016-ல் கம்பெனியில் சேர்ந்த ஊர்க்காரப் பயபுள்ள, அண்ணா இது என் கார்டுனு கொடுத்துட்டுப் போறான். இது பரவாயில்லை. பதிலுக்கு நம்மகிட்ட கார்டுனு கேட்கிறப்போ வந்தது பாருங்க ஒரு கடுப்பு.
மன்சூர்: என் நண்பன் ஒருத்தன் 540 லைக்ஸ் வாங்கிட்டு ஓவராத் துள்ளினான். அப்போ தோணுச்சு.
சிலேட் பென்சில்: இந்தியா நியூசிலாந்து மேட்ச்ல அமித் மிஸ்ரா ஐந்து விக்கெட்கள் வீழ்த்தியதைப் பார்த்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ரியாக்ஷன்தான்.

?இடைத்தேர்தலில் தமிழக பா.ஜ.க. அமோக வெற்றிபெற என்ன செய்யலாம்?
முஹமது சம்சுதீன்: மிஸ்டு கால் மூலம் பல லட்சம் தொண்டர்களைக் கொண்ட பா.ஜ.க. மிஸ்டு கால் மூலம் வாக்கு அளிக்கும் முறை வந்தால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
முருகன் வீரப்பன்: கர்நாடக நீதிபதி குமாரசாமியிடம் வாக்கு எண்ணிக்கைப் பொறுப்பை ஒப்படைக்கலாம்.
செங்கோல் ஜேசுராஜ்: ஒன்பது கிரகங்களிலும் உச்சம் பெற்ற கட்சிகள் ஓட்டு வாங்காமலேயே ஜெயிச்சதா அறிவிச்சிடலாம்.
அட்டகத்தி தினேஷ்: ஒவ்வொரு குடும்பத்திலும் தலா இருவர் ஒரு முறை வெளிநாடு பயணம் செய்யலாம் வித் மோடினு ஆஃபர் கொடுத்து ஓரளவுக்கு வாக்குகளை அள்ளிடலாம்.
முத்துராஜ்: நாங்க வேணும்னா ஊரை விட்டு ஓடிடட்டுமா?