இந்தியச் சுற்றுலாத்துறையைப் பிரபலப்படுத்த இன்கிரெடிபிள் இண்டியா விளம்பரத்துல சரியாகத் தேர்வு செஞ்சு, பிரதமர் மோடியையே நடிக்க வெச்சிட்டாங்க. அப்படியே நம்ம ஊர் அரசியல்வாதிகளையும் விளம்பரத்துல நடிக்கவெச்சா என்னென்ன விளம்பரத்துல யார் யார் நடிக்கலாம்?

அன்புமணி ராமதாஸ்: கையெழுத்துப் போடவே காலமெல்லாம் காத்திருக்கும் அவரை வைத்துப் பேனா விளம்பரம் எடுக்கலாம். ‘மை ஊற்றுங்கள் மங்களமாய் எழுதுங்கள்’ என்ற வாசகத்துடன் #pen4u என கீழே ஹேஷ்டேக் போட்டுவிட்டால் அவ்வளவுதான், சேல்ஸ் சும்மா பிச்சுக்கும்!

ஜி.கே.வாசன்: பாரம்பரியமானது என்பதாலும், வேட்டிக்கு ரொம்பவே பேர்போன அதிரி புதிரி சாதனைகளைப் பெற்றிருப்பதாலும், சந்தேகமே இல்லாமல் இவரை வைத்து தாராளமாக வேட்டி விளம்பரம் பண்ணலாம். ‘வேட்டி கட்டுங்க வெண்மையா இருங்க’ என்கிற பன்ச்சுடன் இருந்தால் வியாபாரம் கிழிகிழியென கிழிச்சுக்கும்.

வைகோ: ஏன் எதுக்குனு கேட்கக் கூடாது, இப்போதைக்கு இவரைக் கத்தரிக்கோல் விளம்பரத்திலே நடிக்க வைத்தால் கனகச்சிதமாக இருக்கும். “எவ்வளவு ஸ்ட்ராங்கான பீஸாக இருந்தாலும் பீஸ் பீஸா ஆக்கும் இது” என அவர் வசனம்கூட பேச வேண்டியதில்லை. ஸ்கிரீனில் வந்து நின்னாலே போதும். மைமாகவே பண்ணிவிட்டுத் துண்டை உதறி தோளில் போட்டு பேக் ஷாட்டில் நடந்தால் கன்னாபின்னா கல்லா ஃபுல்லு!

ஸ்டாலின்: சைக்கிள் விளம்பரம் சரியான தேர்வாக இருக்கும். விளம்பரத்துக்காக ரொம்ப மெனக்கெடத் தேவையில்லை. நமக்கு நாமே என ஊர் சுற்றிய வீடியோவையே கட் அண்ட் எடிட் பண்ணினால் சுடச்சுட விளம்பரம் ரெடி!

விஜயகாந்த்: ஆங், வேற என்ன? ஃபர்னிச்சர் விளம்பரங்கள்தான். சேர், கட்டில், பீரோ, மெத்தை என மொத்த ஐட்டத்துக்கும் இவரை வெச்சே செய்யலாம். இந்தியாவுல எங்க கம்பெனி சாமான்களை உபயோகிக்கிறவங்க இத்தனை பேர், அதுல தமிழ்நாட்டுல மட்டும் இவ்வளவு பேர், அதில் தாம்பரத்தில் உள்ளவங்க மட்டும் இத்தனை பேர்னு பக்கம் பக்கமாகவெல்லாம் பழைய ஃபார்மேட்டில் விளம்பரம் பண்ண வேண்டாம். “நானே தூக்கி அடிச்சாலும் உடையாதுனா பாத்துக்கோங்க மக்களே”னு சின்னதா ஒரு டயலாக் பேசினா போதும். பேசினா மட்டும் போதும்!

என்னது! அப்படியே வேல் முருகன், கார்த்திக்குக்கெல்லாம் சொல்லணுமா? விளம்பரத்துக்கே யாராச்சும் விளம்பரம் பண்ணுவாங்களா?

- ஜெ.வி.பிரவீன்குமார்