மல்லுவுட்டைக் கலக்கிக்கிட்டு இருக்கிற சமீபத்திய ட்ரெண்ட் புலிமுருகன். ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் இந்தப் படத்தின் வசூல் மட்டும் நூறு கோடிப்பே... நூறு கோடி! இந்தப் படம் ஹிட் அடிச்சதுக்கு நிறைய காரணம் இருந்தாலும் மல்லுஸ் எல்லாரும் சொல்ற ஒரே ரீசன் மோகன்லாலோட அந்த முறுக்கு மீசைதானாம். மோகன்லால் முறுக்கு மீசை வெச்சு நடிச்ச படம் எல்லாம் தெறி ஹிட் ஆகியிருக்குனு ஸ்பெஷல் ரிசர்ச் பண்ணிச் சொல்லியிருக்காங்க. அப்படியே கோலிவுட் பக்கம் ஒதுங்கி நம்ம ஆளுங்க என்னலாம் பண்ணா படம் ஹிட் அடிக்கும்னு யோசிச்சுப் பார்த்ததில் வந்த தாறுமாறு ரிசல்ட்ஸ் இது!

விஜய்: படத்துல என்ன இருக்கோ இல்லியோ, கண்டிப்பா `நான் பாசத்துக்கு முன்னாடி பனி. டி.எஸ்.பி வாயில சனி'ங்கிற மாதிரி புரட்டாசிகரமான வசனம் கண்டிப்பா இருக்கணும். இது மாதிரி பன்ச் பேசுன இவரோட முக்கால்வாசிப் படங்கள் மொக்கை வாங்கினாலும் ரசிகர்கள் படத்தைப் பற்றிப் பேசிப் பேசியே `நூறு கோடிடாவ்' லிஸ்ட்ல எப்படியாவது சேர்த்து விட்டுடுவாங்க. பன்ச் பேசுறது மட்டும் இல்லாம, லன்ச் டைம்ல சாப்பாட்டுக்குப் பதில் காலரைக் கடிக்கிறது, பக்கத்தில இருக்கிற பொண்ணோட பேன்ட் பாக்கெட்ல கையை விடுறது, இடுப்பைப் பார்க்கிறது, வில்லனுக்காக ரொம்ப காலமா `ஐ யம் வெயிட்டிங்'லயே இருக்கிறது, பில்டிங் பில்டிங்கா பறக்கிறது, புதுசு புதுசா ஒரு கெட்டப் சேஞ்ச் பண்றதுனு ஒண்ணுமே பண்ணாம விட்டாலே போதும். படம் எல்லாம் கண்டிப்பா ஓடும்.

அஜித்: `கேட்டை இழுத்து சாத்துப்பா'னு வாட்ச்மேன்கிட்ட சொல்றதைக்கூட பன்ச் டயலாக்னு இவர் ஃபேன்ஸ் நினைச்சிக்கிட்டு இருக்கிறதால புதுசா பன்ச் டயலாக்னு எதுவும் பேசவே வேணாம். `நான் தமிழ்நாட்டுக்கே தலடா, தங்கச்சிக்காக உழைடா'னு சுமாரா வசனம் பேசி நடிச்சாகூட ரசிகர்கள் உறைஞ்சுபோய் ஊரெல்லாம் போஸ்ட்டர் ஒட்டுவாங்க. என்னதான் தலயோட நடிப்புக்காக படம் ஓடினாலும், அது ஹிட் ஆகிறது என்னமோ அவரோட 360 டிகிரி டான்ஸுக்காகத்தான். முக்கியமான விஷயம் தல, ஸ்கூல் பாயா நடிச்சாகூட வெள்ள முடியோட நடிச்சாதான் ஃபேன்ஸ் ஏத்துப்பாங்க. சால்ட் அண்ட் பெப்பர்டா!

சிம்பு: எல்லோரும் கஷ்டப்பட்டு படத்தை ரிலீஸ் பண்றப்போ, அசராம டிரெய்லர் மூலமாவே மொத்தப் படத்தையும் ரிலீஸ் பண்றதுதான் சிம்பு ஸ்டைல். `விஜய் என் அண்ணன், அஜித்துக்கு நான் ரசிகன்'னு சொல்லியே தல-தளபதி ஃபேன்ஸ் ரெண்டு பேரையும் கரெக்ட் பண்ணி, டீசரையே 100 நாள் ஓட வெச்சிடுவாரு. இவருக்குப் படத்தை ஓட வைக்கிறது எப்படினு சொல்லித்தரவா வேணும். விரல் அசைக்கிறது, தத்துவம் பேசுறது, தாறுமாறு பாட்டுக்கு தாறுமாறா ஆடுறதுனு மாஸா ஏதாவது பண்ணி எப்படியாவது படத்தை ஓட வெச்சிடுவாரு. `தள்ளிப்போகாதே’ பாட்டு மாதிரி படம் தள்ளிப் போகாம சொன்ன தேதியில ஒழுங்கா ரிலீஸ் ஆனாலே கண்டிப்பா ஓடிடும்!

தனுஷ்: தலைவர்கள் பொறந்த நாளுக்கு மொத்தமா கைதிகளை ரிலீஸ் பண்ணுற மாதிரி, மாசம் மாசம் மறக்காம படம் ரிலீஸ் பண்ணுற ஹீரோ நம்ம தனுஷ்தான். வி.ஐ.பி-யில் தாடி வெச்சு ஹிட் ஆனதிலேருந்து `நான் ஒல்லியான பாடி, வளர்ப்பேன்டா தாடி'னு `கொடி'யிலயும் தாடி வெச்சாரு. `கொடி' காத்தோட பறந்துடுச்சு. தாடி ஸ்டைல் செலக்ட் பண்ண கேப்ல கதையையும் செலக்ட் பண்ணிருந்தீங்கனா படம் `நையாண்டி' அளவுக்காவது ஹிட் ஆகியிருக்கும். இவர் நடிக்கிற படத்தில எதாவது பாட்டுப் பாடினாலே அந்தப் படம் எப்படியாவது ஓடிடும். பட் பாட்டு எழுதினாரு... படம் ஓஓஓடிடும்...!

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி அண்ட் கோ: வெள்ளிக்கிழமை வாராவாரம் மாத்தி மாத்தி படம் ரிலீஸ் பண்ணி தமிழ் சினிமாவையே தாங்கிப் பிடிக்கிறது இவங்க ரெண்டு பேரும்தான். வியாழக்கிழமைக்கு அப்புறம் வெள்ளிகிழமை வருதோ வரலையோ, விஜய் சேதுபதி படம் வந்துடும். இவர் `ப்பா'-னு சொன்னாலே அந்தப் படம் ஹிட்டுதான். ஃபாரஸ்ட்ல மாட்டின பியர் கிரில்ஸ் மாதிரி அந்த ஒரு டயலாக் உங்ககிட்ட மாட்டிகிட்டு படாதபாடு படுது ப்ரோ. கலக்கப்போவது யாரு ஷோவை வெள்ளித்திரையில் காட்டிக்கிட்டு காமெடி மேன் வேடத்தில் ஹீரோவா இருக்கிற சிவா ஸ்கிரீன்ல வந்தாலே ஒண்ணும் இல்லாதவனுக்கு கெடச்ச வைஃபை கணக்கா அப்ளாஸ் அள்ளும். சிவாலாம் நடிக்காதப்பவே இவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்களே... அவரெல்லாம் நடிச்சா இந்த பூமி தாங்குமா?

கண்ணாடியைத் திருப்பினா எப்படி ப்ரோ வண்டி ஓடும்னுதானே கேட்கிறீங்க?

- லோ.சியாம் சுந்தர்