தமிழ் சினிமாவில் சில விஷயங்களை நினைச்சுப் பார்க்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். இதெல்லாம் பிளான் பண்ணி பண்றாங்களா, இல்லை தானா நடக்குதானு ஒரே குழப்பமா இருக்கும். வேணும்னா... நீங்களே படிச்சுப் பாருங்க. படிச்சுட்டு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க!

அஜித்தும் த்ரிஷாவும் முதலில் சேர்ந்து நடிச்ச படம் `ஜி'. படத்தில் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் ஹெவியா லவ் பண்ணிட்டு இருப்பாங்க. இரு இதயம் ஒரு இதயம் ஆகப்போகும் நேரம் எந்தக் காட்டெருமைக் கண்ணு படுமோ... அநியாயமா ஜெயிலுக்குப் போயிடுவார் அஜித். கிட்டதட்ட ஏழு வருடம் கழிச்சு, ஏழு வார தாடியோடு வெளியே வருவார் அஜித். கடைசியிலாவது அஜித் நம்ம த்ரிஷாவைக் கரம் பிடிச்சாரானு காட்ட மாட்டாங்க. வீட்டுல கரண்ட் போச்சுனு விளக்கு பற்ற வைப்பாங்க த்ரிஷா. அப்போ அவங்க பொடனிக்குப் பின்னால் வந்து நிற்பார் அஜித். அவ்ளோதான் படம் முடிஞ்சிடும்.

இதுக்குப் பிறகு இவங்க சேர்ந்து நடிச்ச படத்திலாவது ஒண்ணு சேருவாங்கனு பார்த்தா அதுவும் கிடையாது. `கிரீடம்' படத்துல த்ரிஷாவின் அப்பாவே அஜித்தை `வேண்டாம்'னு சொல்லிடுவார். `மங்காத்தா' படத்தில் த்ரிஷாவின் அப்பாவைக் காரில் இருந்து தள்ளி விட்டு, அஜித்தே காதலைக் க்ளோஸ் பண்ணிடுவார். `என்னை அறிந்தால்' படத்தில் ஒத்தமுடி விக்டர் வந்து இருவரையும் சேரவிடாமல் த்ரிஷாவைக் கொன்னுடுவார். ஆக, `ஜி' படத்திற்குப் பிறகு இவங்க நடிச்ச எந்தப் படத்திலேயும் சேரவே இல்லை. இதற்கெல்லாம் காரணம் `ஜி' படத்தில் சைக்கிள் மணியை அடிச்சு காதல் வளர்த்துட்டு `டிங் டாங் கோவில் மணி...'னு பாட்டு பாடியதால் வந்த சாமிக்குத்தம்தான்!

அதேபோல, விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிலர் பின்னாளில் அவருக்கே தங்கையாக நடிப்பார்கள். `நேருக்கு நேர்' படத்தில் விஜய்யின் அண்ணன் மகளாக நடித்திருப்பார் ஜெனிஃபர். அவரே பின்னாளில் `கில்லி' படத்தில் விஜய்க்குத் தங்கையாக நடித்தார். ஆசக்... பூம்சக்... `காதலுக்கு மரியாதை' படத்தில் `ஆனந்தக் குயிலின் பாட்டு...' பாடலுக்கு வெள்ளை கவுன் அணிந்து ஆடிக்கொண்டிருப்பார் சரண்யா மோகன். அவரே `வேலாயுதம்' படத்தில் விஜய்யின் ரத்தத்தின் ரத்தமாக, இனிய உடன்பிறப்பாக நடித்தார். `குருவி' படத்தில் குட்டித் தங்கையாக நடித்த நிவேதா தாமஸுக்கு, `ஜில்லா' படத்தில் திருமணமாகிவிடும். `ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் ஃபிளாஷ்பேக்கில் விஜய்யின் தங்கையாக நடித்த குழந்தையிடம்தான் `கத்தி' படத்தில் இட்லி கம்யூனிசம் சொல்வார். கிறுகிறுனு வருதில்ல!

- ப.சூரியராஜ்