`இதெல்லாம் டிசைன்ல இருக்கு பாஸ்'னு ஆளாளுக்கு அள்ளி வீசுறதைப் பார்த்து நாமளும் டிசைன் டிசைனா யோசிச்சுப் பார்த்தா... (இதையும் படிக்கணும்னு உங்க டிசைன்ல இருக்கு.. ஹிஹிஹி)

யார் என்னானு அட்ரஸே தெரியாம இருந்துட்டு திடீர்னு ஒருநாள் எதுக்காவது போன் பண்ணி, `என்ன? போனையே காணோம்... பெரிய ஆள் ஆகிட்டீங்க... மறந்துருவீங்க’னு கேட்கிறது ஒரு `மானங்கெட்ட' டிசைன்!

ஊர் சுத்துறப்போ நம்ம அண்ணன் தம்பிங்க, பொண்ணுங்களை சைட் அடிச்சா கேலி பண்ணிட்டு விட்டுடுற மனசு... அதையே நம்ம லவ்வர் பண்ணினா கொலைக் கேஸா மாத்தி விட்ரும். இது `என் தங்கம் என் உரிமை' டிசைன்.

போனைக் கையிலேயே வெச்சிருப்போம். ஒரு மெசேஜ், கால் எதுவும் வராது. செம்ம போரா இருக்கும். சார்ஜர்ல போட்டுட்டு டி.வி. பார்க்கிற அரைமணி நேரத்துல பத்துப் பதினைஞ்சு கால்களும் மெசேஜ்களும் வந்து குவிஞ்சு கிடக்கும்... எத்தனை தடவை போன் பண்றதுனு திட்டு வேற... `அடேய்... நீங்கள்லாம் எங்க இருந்துடா வர்றீங்க' டிசைன்.

உலகத்துல இருக்கிற எல்லா அழகான ட்ரெஸ்ஸும் கறுப்பு கலர்லதான் இருக்கும். ஆனா `கறுப்பு கலரா... அச்சச்சோ நம்ம குடும்பத்துக்கு ஆகாது’னு ஒரே வார்த்தையில கேட்டைப் போடுறதெல்லாம் `அச்சோ பாவம்' டிசைன்.

கதை புக்ஸ், நாவல் எல்லாம் காலங்காலமா வீட்டுல கிடக்கும். படிக்கவே தோணாது. கரெக்டா நாளை மறுநாள் எக்ஸாம்னா அந்த புக் மேல அப்படி ஒரு பிரியம் வரும் பாருங்க... அதை எப்பாடு பட்டாவது படிச்சு முடிச்சாதான் நிம்மதியா இருக்கும். இது `விடாது கருப்பு' டிசைன்.

நம்ம ஆளுக்காக ஃபேஸ்புக்குல ஒரு போஸ்ட் போட்டுட்டு அதை அவங்க பார்க்கிறாங்களா இல்லையா... என்ன ரியாக்ஷன் தருவாங்கனு நிமிஷத்துக்கு ஒரு தடவை செக் பண்றதுதான் `ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துற' டிசைன்.

ரொம்ப நாள் கழிச்சு ஏதாவது விசேஷ வீட்டுல பார்ப்போம். இது நமக்கு என்ன முறையா இருக்கும்? பேசுவோமா வேணாமானு யோசிச்சிட்டு இருக்கிறப்போ அதுங்களா சுனாமி போல வந்து பேசிச் சிரிச்சுட்டு வளைச்சு வளைச்சு செல்ஃபி... ஸாரி குரூப்பி எடுத்து ஃபேஸ்புக்ல நம்மளை டேக் பண்ணி போஸ்ட் போடுறதெல்லாம் `வேற லெவல்' டிசைன்.

தலையில சீப்பை வெச்சுக்கிட்டே சீப்பைக் காணோம்னு தேடுறது... பைக்ல சாவியை வெச்சிக்கிட்டே பைக் சாவியைத் தேடுறது... மொபைலை சார்ஜர்ல போட்டுட்டு சுவிட்ச் போடாமல் சுத்துறது... இதெல்லாம் `எந்த லோகத்துலதான் நீ வாழ்ந்துட்டிருக்கியோ' டிசைன்!

- ரூபிணி