ஒரே நைட்ல ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எதுவுமே செல்லாதுனு சொன்னதும் கூட்டம் கூட்டமா சில்லறை மாத்தக் கிளம்பினவங்களுக்கும், ஏ.டி.எம். போனவங்களுக்கும், அர்த்த ராத்திரியில வந்த அட்சய திரிதியை கணக்கா நகைக்கடைக்குப் போனவங்களுக்கும், 12 மணிக்கு ஒயின் ஷாப் போனவங்களுக்கும், உலகமே அழிஞ்சாலும் எனக்கென்ன கவலைனு வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போனவங்களுக்கும் ஒரே ஒரு விஷயம்தான் சொல்லணும். ‘அச்சம் என்பது மடமையடா, ஐந்நூறு ரூபா வெச்சிருக்கிறவன் மடையனடா'! ஐந்நூறு, ஆயிரம் எல்லாத்தையும் ஒழிச்சிட்டா கறுப்புப் பணமெல்லாம் கஞ்சி போட்டு அயர்ன் பண்ண கதர் வேட்டி கணக்கா கலர் மாறிடும்னு இன்ஜினீயரிங், மெடிசின் படிச்ச பொருளாதார நிபுணர்கள் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கிறதால கறுப்புப் பணத்தை வேற எப்படில்லாம் ஒழிக்கலாம்னு சில ஐடியாஸ். ஐந்நூறு, ஆயிரத்தை ஒழிச்சா கறுப்புப் பணம் வெளியே வருமான்னு தெரியலை பாஸ். இதைப் ஃபாலோ பண்ணா கண்டிப்பா வெளியே வரும்!

மோடி ஒவ்வொரு முறையும் வெளிநாடு போயிட்டு வரும்போதெல்லாம் ஒவ்வொரு ரூபாயா கொண்டு வந்தாலே போதும். வெளிநாட்டுல பதுக்கி வெச்சிருக்கிற பணம் மட்டும் இல்லாம அவங்க உள்நாட்டுப் பணத்தையே இந்நேரம் கொண்டு வந்திருக்கலாம்.

கொலைப் பசியில் இருக்கிற `சிங்கத்தை' வெளிநாட்டுக்கு அனுப்பி அங்கே இருக்கிற பணத்தை எல்லாம் அப்படியே அள்ளிட்டு வரச் சொல்லிடலாம்.

கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர்றது தொடர்பா, கார்த்தி, சரத்குமார், அன்புமணி, கருணாஸ், டி.ஆர் மாதிரி பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் உலக நாடுகள்கிட்ட முறையிடலாம். செய்வீர்களா?

‘சிவாஜி’ படத்தில் ரஜினி நிறைய கறுப்புப் பணத்தை புது சலவை நோட்டா மாத்தி இருப்பார்ல? அந்த மாதிரி நாமளும் ஏன் முயற்சி பண்ணக்கூடாது. அதுல சிவாஜிக்கு அப்புறம் எம்.ஜி.ஆர் வருவாரே அவரை வெச்சு மிச்சம் இருக்கிற கறுப்புப் பணத்தையும் மீட்டா நல்லாருக்கும்ல?

கறுப்புப் பணம் வெச்சிருக்கிறவங்களுக்கு எல்லாம் 2ஜி நெட்டுதான்னு சொன்னா, அவங்களாவே எல்லாத்தையும் திரும்பக் கொடுத்துடுவாங்க.

கமல்கிட்ட சொல்லி `காசை உணர்ந்து கறுப்பைக் கொணர்ந்து’ங்கிற தலைப்புல ஒரு தூய தமிழ் அறிக்கை விடச் சொன்னாலே போதும். அதைப் படிக்கிறதுக்கு முன்னாடியே கறுப்புப் பணம் வெச்சிருக்கிறவங்கள் லாம் அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைச்சுடுவாங்க.

கடைசியா மல்லையாவை நீங்களே வெச்சுக்கங்க, கறுப்புப் பணத்தை எங்ககிட்ட கொடுத்துடுங்க.

- லோ.சியாம் சுந்தர்