ஃபேஸ்புக்கில் 100 லைக் வாங்குறதுதான் இன்னைக்கு தேதியில பல பசங்களுக்கு லட்சியமா இருக்கு. அதையும் தாண்டி நிறைய லைக் வந்துச்சுன்னா, சதம் அடிச்ச கோஹ்லியை விட அலப்பறை கொடுப்பாங்க. இதுக்காக என்னென்ன டகால்டி வேலையெல்லாம் பண்றோம்னு கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணிப் பார்த்தேன்!

ஆண்-பெண், ஃபேக் ஐ.டி-ஒரிஜினல் ஐ.டி எந்தப் பாரபட்சமும் இல்லாம பார்க்கிற எல்லோரையும் ஷேர் ஆட்டோவில் ஏத்துற மாதிரி ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துத் தள்ளுவாங்க. ஃபேஸ்புக்கே அலறி ‘இதற்கு மேல் நீங்கள் ரிக்வெஸ்ட் கொடுக்க முடியாது’னு காறித் துப்புறவரைக்கும் நிறுத்தவே மாட்டாங்க.

போட்டோவை விரல் தேய எடிட் பண்ணுவாங்க. மெகா சைஸ் அமீபாவும், பாக்டீரியாவும் முகத்து மேல படுத்திருக்கும். போட்டோவைச் சுற்றி நெருப்புக் கொழுந்துவிட்டு எரியும். ‘இது இவன்தானா?’னு யோசிக்கிற அளவுக்கு முகம் ரண கொடூரமா இருக்கும். ‘இப்படிலாம் எடிட் பண்ணிப் போட்டாதான், அதிக லைக் வருது’னு சொல்வாங்க. உன் எடிட்டிங்ல தீயை வைக்க!

அடுத்தது ‘டேக்’தான். பயபுள்ள ஒரு போட்டோவைப் போட்டு ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிற அத்தனைப் பேரையும் டேக் பண்ணிருவான். லைக்குக்காகத்தான் டேக் பண்ணிருக்கான்னு தெரிஞ்சு, நாமளும் பதில் மரியாதைக்கு ஒரு லைக்கைப் போடுவோம். ஆனா, மத்தவங்க அந்த போட்டோவுக்கு லைக் போடும்போது நமக்கும் நோட்டிஃபிகேஷன் வந்துடுமா... ‘டேக் பட்டன்ல கையை வெச்சா மொத டெட்பாடி நீதான்’னு மைண்ட் வாய்ஸ் கேட்கும்!

அடுத்த உன்னதமான விஷயம் ‘ஆட்டோ-லைகர்’தான். கவுண்டமணி தன்னோட படத்துக்குத் தானே மாலை போட்டுக்கிட்ட மாதிரி, அவங்க போட்டோவுக்கு அவங்களே லைக் போட்டுக்குவாங்க. இதனால அடுத்தவங்களுக்கு எந்தப் பிரச்னையும் தொல்லையும் இல்லைதான். ஆனா, தம்பி இதுக்கு பேரு என்ன தெரியுமா?

வெட்கத்தை விட்டு அடுத்து என்ன பண்ணுவாங்கன்னா... ஃபேஸ்புக்ல தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லாரோட இன்பாக்ஸ்லையும் கதவைத் தட்டி ‘ஹாய் ப்ரோ! போஸ்ட் ஒண்ணு போட்ருக்கேன் பார்த்தீங்களா? ஒரு லைக் போடுங்க ஜி’னு நிற்பாங்க.

தம்பி நீங்க நல்லா வருவீங்க!

- முரளி.சு