இந்தத் தமிழ்ச் சமூகத்தில டீ டோட்டலரா இருக்கிறது குத்தமாய்யா?

கும்பலாக தியேட்டர்ல போய் படம் பார்க்க உட்கார்ந்தா, `புகைப்பழக்கம் உடலுக்குத் தீங்கானது'னு போடுற ஸ்லைடு விளம்பரத்தைப் பார்த்து `மச்சி இதெல்லாம் எங்களுக்கு சொல்றாங்க. சின்னப்பையன் உனக்கில்லை' னு சொல்றீங்களே... உங்களுக்கு என்ன இப்போ அவார்டா அறிவிச்சாங்க? அட்வைஸ்தானே சொன்னாங்க!

பத்தாயிரம் செலவு செஞ்சு வீட்டு விசேஷத்துக்கு வந்த ஃப்ரெண்டுகளுக்கு விருந்து வெச்சாலும், `ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்கிக் கொடுக்கலைனா இதெல்லாம் ஒரு ட்ரீட்டா? என்னத்தைப் பெருசா பண்ணிட்ட'னு மனசாட்சியே இல்லாம கேட்குறீங்களே... பத்தாயிரம் ரூபாய்க்கு எத்தனை ஆயிரம்னு தெரியுமா, அட்லீஸ்ட் எத்தனை நூறு ரூபாய்னாவது தெரியுமா?

`நாங்கள்லாம் சரக்கடிச்சுட்டு பேச ஆரம்பிச்சா அவ்வளவுதான். நொந்து நூடுல்ஸ் ஆகி, அந்து அவலாகிடுவீங்க'னு எப்போ பார்த்தாலும் சீன் போடுறீங்களே... மணிக்கணக்கா பேசுறதுக்கெல்லாம், லிட்டர் கணக்கா என்னாத்துக்கு சரக்கு அடிக்கணும்? நாங்கள்லாம் சும்மாவே அப்படித்தானே பேசுவோம். சோடி போட்டுப் பார்ப்போமா சோடி?

`என்னது தண்ணி அடிக்கமாட்டியா? என்னது தம் அடிக்கமாட்டியா? உனக்கு ஏதோ பிரச்னை இருக்கு'னு ஏதோ அப் நார்மலாக இருக்கிறவனைப் பார்க்கிற மாதிரியே யாரைப் பார்த்தாலும் ட்ரீட் பண்ணுறீங்களே... ஒருத்தன் டீ டோட்டலராக இருக்கிறதுக்குப் பேரு அப் நார்மலா... இல்லை அப்படி இல்லாம இருக்கிறவன் அப் நார்மலா ராசாக்களே?

`வாழ்க்கைனா என்ஜாய் பண்ணணும் ப்ரோ, இப்படிக் கும்பல்ல உட்கார்ந்து கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கக் கூடாது'னு பல பேர் உலகமகா தத்துவங்கள்லாம் சொல்வாய்ங்க. ஹிஹி... இதெல்லாம் ஆல்ரெடி கேம் ப்ரோ, தண்ணி அடிக்கிறது மட்டும்தான் என்ஜாயா ப்ரோ? அங்கிட்டு கொஞ்சம் நகருங்க!

அய்யய்யோ, பொசுக்குனு கோபப்பட்டுட்டேனே... சைடு டிஷ் கிடைக்காதே!

- ஜெ.வி.பிரவீன்குமார்