பள்ளிக்காலம்தான் வீட்ல இருந்தே போயிடுச்சே, இந்தக் காலேஜ் வாழ்க்கையையாவது கலகலப்பா

கழிக்கணும்னு ஆசைப்படுற பொண்ணு, பல சாகசங்களுக்குப் பிறகு ஒருவழியா ஹாஸ்டலில் சேர்ந்து படிக்க அனுமதி வாங்குவா. வீட்டுல `கண்டிஷன் அப்ளை' கோரிக்கையோட ஹாஸ்டலுக்கு வந்தா, இங்கே இருக்கு ஏராளமான ட்விஸ்டு!

ஏற்கெனவே பழக்கமான தோழி ஒருத்திகூட இல்லாம ஹாஸ்டலில் சேர்ந்த முதல்நாள் கொஞ்சம் சிரமம்தான். புதுசா தங்குற ரூம் கிட்டத்தட்ட பேய் பங்களா மாதிரியும், பழக்கமில்லாத அந்த ரூம்மேட் பேயாகவும் தெரிவது எனக்குத்தானோ?

எல்லா சாலைகளும் ரோமுக்குப் போகலாம். ஆனா, ஹாஸ்டலில் எல்லா ரூம் ஃபேனும் சூப்பரா சுத்தும்னு சொல்ல முடியாது. விரல் விட்டு சுத்தி விடும்போதெல்லாம், வீட்ல மின் சிக்கனத்துக்காக வீணா ஓடுற ஃபேனை அம்மா ஆப் பண்ணும்போது, வீம்புக்கு ஆன் செய்து வம்பிழுக்கிறது நினைவுக்கு வரும்.

மனிதனின் அத்தியாவசியத் தேவை பாத்ரூம். இங்க பாத்துடவே கூடாத அளவுக்கு இருப்பது கொடுமை. பஸ் ஸ்டாண்ட் கழிவறை உசிதம்னு தோணும். முடியாது மக்களே... முடியாது!

குளியலுக்காகப் போடப்பட்டிருக்கும் வரிசை, ஊர்களில் குடிநீர் பிடிக்க போட்டிருக்கிற வரிசையை நினைவு படுத்தும். அந்தக் குளியல் கும்பமேளா கூட்டத்தை எதிர்கொண்டு உள்ளே நுழைஞ்சா, பாதியில தண்ணி நின்னுபோயி நம்மளைப் படுத்தும். வீட்டுல சாவகாசமா எழுந்து குளிச்சிட்டுக் கெளம்புன பழக்கமெல்லாம் கண்ணை வியர்க்க வைக்கும். அவ்வ்வ்.

அடிச்சுப்பிடிச்சுக் கெளம்பி, மெஸ்ஸுக்குப் போனா, தோஷம் வந்த மாதிரி தோசையும், சனியன் பிடிச்சமாதிரி சட்னியும், பருப்புக்குப் பஞ்சம் வந்த மாதிரி சாம்பாரும் இருக்கு. தோசைன்னா புளிக்கணும்தான். அதுக்காக புளிப்பா மட்டுமே இருந்தா எப்படி?

தோழிகள் செய்ற சமையல் எல்லாம் கும்பி பாகம். சுடுதண்ணி வெக்கத் தெரியாதவ செய்யுற உப்புமாவை சாப்பிடுறதுக்கு அந்தச் சுத்தாத ஃபேன்ல ஏறி உட்கார்ந்திரலாம் போல இருக்கு!

காங்கிரஸ்லயும் ஹாஸ்டல்லயும் கணக்கில்லாத கோஷ்டிகள் பாஸ். லேடி டானா வளைய வர்ற புள்ளைகூட, கரப்பான் பூச்சிக்கும் பல்லிக்கும் கதறித் துடிக்கிறதைக் காண கண் கோடி வேண்டும். ஆனா, அதையும் சளைக்காம சாகடிச்சு டிஸ்போஸ் பண்ண ஒருத்தி இருப்பா... லேடி பியர்ல் க்ரில்ஸ்!

பக்கத்து ஸ்டேட் பொண்ணுங்களை வெச்சு மொழி கத்துக்க ஆசைப்படுவோம். ஆனா, அந்தப் புள்ளைக விழி பிதுங்கி சீக்கிரமே தமிழ்ப் புலவரா மாறி நமக்குக் கம்பராமாயணம் க்ளாஸ் எடுக்குங்க!

`போனால் போகட்டும் போடா'னு பாறை மாதிரி இருக்கிற மெத்தையில், தூங்கலாம்னா, அப்போதான் அறைத்தோழி அவ ஆள்கூட கடலை வறுக்க ஆரம்பிப்பா. தட் சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா மொமன்ட்!

சொல்ல மறந்துட்டேன்... பிஸ்கெட் பாக்கெட் வெச்சுப் பிறந்தநாள் கொண்டாடுறதை இங்கேதான் பார்க்குறேன். அதிலும் 12 மணிக்குக் கூச்சமே படாம, மிஞ்சிய பிஸ்கெட்டை பிளாக் பாரஸ்ட் கேக் ஃபீலிங்ல ஷேர் பண்ணிட்டு இருக்காங்க. ஃபன்னி கேர்ள்ஸ்!

பல அக்கப்போர் இருந்தாலும், மகிழ்ச்சியோட மகிமையைத் ததும்பத் ததும்பக் கொடுக்கிற ஹாஸ்டலுக்கு வந்தனம் மக்கா!

- வெ.வித்யா காயத்ரி