நீரின்றி அமையாது உலகம் என்பது போல, வாட்ஸ்அப் இன்றி அமையாது ஸ்மார்ட்ஃபோன். ஒவ்வொரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்லயும் மூணு முக்கியமான குரூப்கள் இருக்கும். ஒண்ணு,சாதிசனமெல்லாம் ஒண்ணு கூடுற `ஃபேமிலி குரூப்'. ரெண்டாவது, கலகலனு கலாய்ச்சு தொங்கவிடுற `ஃப்ரெண்ட்ஸ் குரூப்'. மூணாவது, `ஆபீஸ் குரூப்'

இந்த மூணு குரூப்கள்லயும், பாகுபாடே இல்லாம ஒரே மாதிரி மொக்கை மெம்பர்ஸ்தான் இருப்பாங்க. அவங்களோட அதிஅற்புதமான குணநலன்களைத்தான் தொகுத்திருக்கேன்.

1. குரூப் ஆரம்பிச்ச காலத்துல இருந்து எவன் எக்கேடு கெட்டா எனக்கென்னனு நாள் தவறாம `குட்மார்னிங்', `குட்நைட்' அனுப்புற நல்லுள்ளம்.

2. குரூப் நேமை எக்ஸாம், செமஸ்டர், அப்ரைஸல், ஆனிவர்சரினு சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி மாத்தி அதுக்கு ஏற்ற ஐகான்ஸ் வைக்கிற கெக்கபிக்க கிரியேட்டர்ஸ். இதுல ஃபன் என்னனு பார்த்தா, குரூப் சிச்சுவேஷனுக்கும் இவங்க வைக்கிற ஐகானுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது.

3. இவங்கதான் குரூப்போட தலையா இருப்பாங்க. `எங்கடா இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு... ஒரு மீட்டிங்கை போடுவோம் மாப்ள'னு ப்ளான் போடுறவங்க. ஆனா முக்கால்வாசி ப்ளான் முட்டுச்சந்து மாதிரி பாதியிலேயே முடிஞ்சுபோயிடும். ஆனாலும் நம்ம பசங்க அசறாம அடுத்த ப்ளானைப் போடுவாங்க.

4. இவங்களை எல்லாம் எங்க இருந்து பிடிச்சிட்டு வர்றாங்கன்னே தெரியாது. எதைச் சொன்னாலும், `தம்ஸ் அப்' எமோடிகான் இல்லைன்னா சூப்பர் எமோடிகான்... இது ரெண்டுல எதையோ ஒண்ணைத்தான் மாத்தி மாத்தி அனுப்புவாங்க. ஆனா, ஆத்தா மகமாயி சத்தியமா பயபுள்ளைக்கு குரூப்ல என்ன நடக்குதுனே தெரியாது.

5. ஒருத்தன் மூச்சு முட்ட ப்ளானைப் போட்டு மூச்சுத் திணறத் திணற அதை ஒவ்வொருத்தனுக்கா வெளக்கி முடிச்சு, `ஆல் கம் அட் ஒன் ஓ க்ளாக்'னு குரூப் நேமை எல்லாம் மாத்தி அலர்ட் பண்ணினா, கெளம்புறதுக்கு மொதநாள் நடுசாமத்துல ஏதோ சாமி வந்து அவனுக்கு அருள்வாக்கு சொன்னமாதிரி, `மச்சி ஸாரிடா வரமுடியல, அம்மா விடல, ஆட்டுக்குட்டி விடல'னு சொல்லி கழண்டுக்குவான் பாருங்க...

6. இவனுங்க இருக்குறதுலயே டேஞ்சரஸ். என்ன பேசினாலும் எவ்வளவு பெரிய ஃபார்வர்டு அனுப்பினாலும், `m', `k', `s' னு ஒரு எழுத்து ரிப்ளைதான் அனுப்புவானுங்க. ஆனா இந்த அநியாயம் எல்லாம் குரூப் சாட்லதான் பண்ணுவான். அந்தப் பக்கம் அவனோட பெர்சனல் சாட்-ஐப் போய் பார்த்தா, மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருப்பானுங்க. சொன்னோம்ல... இவனுங்க டேஞ்சரஸ்னு!

7. அடுத்ததா இருக்குறவங்க ஷார்ட் ஃபார்ம் பாய்ஸ். எதைச் சொன்னாலும் `lol', `rofl' என்றே அனுப்புவாங்க. ஆனா, அம்புட்டு எல்லாம் அவனுங்க சிரிச்சிருக்க மாட்டானுங்கங்கிறதும் குரூப்ல எல்லாருக்கும் தெரியும்.

8. இவனுங்களுக்கு எல்லாம் மனசுல ரவிவர்மானு நெனப்பு. முழுக்க முழுக்க எமோடிக்கான்ஸை மட்டுமே நம்பி உயிர்வாழுற ஜீவராசிகள். ஆனா, உண்மை என்னனா வார்த்தையைத் டைப் பண்ணுறதுக்கு சோம்பேறித்தனம். அம்புட்டுத்தேன் மேட்டரு.

9. இவருதான் குரூப்போட பிஆர்ஓ. வெளி உலகத்துல என்ன நடக்குது, நாட்டு நடப்பு, நினைவு தினத்துல இருந்து `மோடி கி மணி' ஆப் வரைக்கும், எல்லா நியூஸ், போட்டோஸ், வீடியோக்களை வகைதொகையில்லாம ஷேர் பண்ணுற தாராளவான்கள்.

10. சைலன்ட் கில்லர்ஸ் இவங்க. பயபுள்ள குரூப் சாட்ல இருக்கானா செத்தானானுகூடத் தெரியாது. என்ன அனுப்பினாலும் யாரு செத்தாலும் ஒரு வார்த்தைகூட ரிப்ளை பண்ண மாட்டான். சரி குரூப்பை விட்டாச்சும் `லெஃப்ட்'னு போய்டுவான்னு பார்த்தா, அதுவும் கிடையாது. நடக்குற எல்லாத்தையும் பார்த்துட்டு, தெரிஞ்சிட்டு இருப்பான். யார்கிட்ட சொல்றதுக்கு அந்த ஸ்லீப்பர் செல் டியூட்டி பார்க்குறானோ தெரியாது.

11. `ரோஷக்கார நண்பா' இவனுங்க. குரூப்ல ஏதாச்சும் சண்டைனாலோ, இல்ல அன்னைக்கு குரூப்புக்கு வந்து சேரும் மொக்கை மெசேஜோட கவுன்ட்டு ஓவரா போனாலோ, பொசுக்குனு குரூப்பை விட்டுப் போயிடுவானுங்க. சரி போறானுங்களே, `விட்டுத் தொலைவோம்'னு ஒருநாளும் இருந்ததில்லை. போறவனைப் பிடிச்சு திரும்பவும் குரூப்புக்குள்ள இழுத்துப் போட்டுடுவாங்க சில நல்லவனுங்க.

12. குரூப்ல இருக்குறவங்களை வெறுப்பேத்து றதுக்குன்னே, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்துக்கு, ஹோட்டலுக்குப் போயி செல்ஃபியா எடுத்து குரூப்ல போஸ்ட் பண்ற பகட்டுப் பார்ட்டிகளை, என்ன சொல்லி நோக மனமே?!

13. குரூப்ல சண்ட போடுறதுக்குன்னே ஒருத்தன், `என்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட?'னு விலக்கிவிடுறதுக்குன்னே இன்னொருத்தன்னு... ஒரு ஜோடி இருக்கும். இதுல சண்டை போடுறவனுக்குக் கூட ஒரு மரியாதை இருக்கும். ஆனா விலக்கிவிட வர்றவனை யாரும் மதிச்சதா சரித்திரமே இல்லை.

14. குரூப் அட்மினை கேலி செய்றதுக்கே ஒருத்தன் இருப்பான். போட்டோஸை எடுத்து ஏதாச்சும் ஏடாகூடமா மெர்ஜ் பண்ணி இல்லாத அலப்பறைகளை இறக்கிக்கிட்டே இருக்குறது இவனோட ஃபேவரைட் டைம்பாஸ்.

இவங்களாலதான் எல்லோரும் 24X7 அந்தப் பச்சை பலூனைக் கட்டிக்கிட்டு அழுறோம்.

ஹேப்பி வாட்ஸ்அப்பிங்!

- எஸ்.எம்.கோமதி