சுறுசுறுப்பே இல்லாம சொங்கித்தனமாவே இருக்கிற நம்ம ஊர் கட்சிகளெல்லாம் `மாற்றம் ஒன்றே மாறாதது'னு ஒரு சேஞ்சுக்கு அவங்கவங்க பழைய சின்னங்களையெல்லாம் மாத்திட்டு அப்டியே ஒரு வெர்சன் 2.0வாக ரீஎன்ட்ரி கொடுத்தா நல்லாருக்கும்லனு தோணுச்சு! அதனாலதான் இந்த ஐடியா. யார் யாருக்கு என்ன சின்னம் கொடுக்கலாம்? வாங்க பார்க்கலாம்...

பா.ம.க : ரொம்ப நாளா போணி ஆகாமலே இருக்கிற மாம்பழத்தை மூட்டையாகக் கட்டி கொஞ்சம் ஓரமாக வெச்சிட்டு அப்டேட்டாக இருக்கிற ஆப்பிளை சின்னமாக வெச்சு சிறப்பா களத்துல குதிக்கலாம். `பாதி கடிச்சு வெச்ச ஆப்பிள் போனை வாங்கி அம்புட்டுப்பேரும் ஆதரவு தெரிவிக்கிறீங்க. முழுசாக இருக்கிற இந்த ஆப்பிள் சின்னத்துல உங்க முத்திரையைக் குத்த மாட்டீங்களா?'னு கேட்டு, அப்படியே `ஆப்பிளை வைத்துதான் ஈர்ப்புவிசையைக் கண்டறிந்தான்; இந்த ஆப்பிளை வைத்துதான் உங்கள் ஈர்ப்பு விசையை காண வந்திருக்கிறேன்' என சயின்டிஃபிக்காய் எக்ஸ்ட்ரா பிட்டைப் போட்டு வியாபாரம் செய்து பார்க்கலாம்.

பா.ஜ.க : `தாமரை இலையிலயே தண்ணி ஒட்டினாலும் இந்தத் தமிழ்நாட்டுல மட்டும் தாமரை ஒட்டவே ஒட்டாது போலயே கெரகத்த'னு குத்த வெச்சே வெகுநாளா காத்திருக்கிற பி.ஜே.பிக்கு... கொஞ்சம் இறங்கிவந்து லோக்கலில் இருக்கும் மல்லிகைப்பூ மாதிரியான சின்னத்துக்கு தங்களைத் தயார்படுத்தலாம். அந்த மல்லிகைப்பூவையும் கடைசியில் மக்கள் பிச்சு காதுல சுத்திவிட்டாங்கனா காதுக்கும் நல்லதுதான் என அதை பாஸிடிவ்வாக எடுத்துக்கொண்டு, அங்கிருந்து நகர்ந்து அடுத்த ஏதாவது ஒரு சின்னத்துக்கு ஐடியா பண்ணலாம்.

ம.தி.மு.க : பம்பரம் எல்லாம் பழைய விளையாட்டாப் போச்சு. ஆண்ட்ராய்டு போன்லேயே எல்லாத்தையும் ஆட ஆரம்பிச்சுட்ட இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி ஆங்ரி பேர்டு சிம்பளையே தன் கட்சியின் சின்னமாக்கி, `தொண்டர்களே, கையிலே கவண் வில்; கண்ணிலே பன்றியின் கழுத்து' என ஹை டெசிபலில் கதறி வசனம் பேசி ஓட்டுக் கேட்டால், `ஆங்ரி பேர்டு சின்னத்துக்காக இப்படி ஆங்ரி பேர்டாகவே மாறிட்டாரே!'னு பாராட்டியோ அல்லது பரிதாபப்பட்டோ ஓட்டுகள் விழ கிரேக்கம், ஏதென்ஸ் தாண்டி தமிழ்நாட்டிலும் வாய்ப்பு இருக்கு!

தே.மு.தி.க : கொஞ்சம் ஓவராகவே கொட்டியதால், கொட்டும் முரசு `தொப்பு தொப்பு'னு சத்தம் வருவதால் ஒரு சேஞ்சுக்கு மிருதங்க சின்னத்துக்கு முயற்சி செய்யலாம். `மிருதங்கத்துக்கு வார் பிடிப்பதென்றாலும் எனக்கு மிகவும் பிடிக்கும், சினிமாவிலும் வார்னா ரொம்பப் பிடிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் மக்களே'னு ஒரு டயலாக்கைச் சொன்னால் சும்மா பிச்சிக்கும்! `ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை' கொட்டும் முரசிலே போடுங்கள் மக்களே... எனக்கு கொட்டும் முரசு என்றாலும் மிகவும் பிடிக்கும் என பழக்க தோஷத்திலே சொல்லவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தொண்டர்களினுடைய பொறுப்பு... ஆங்!

கம்யூனிஸ்ட்டுகள் : மற்ற கட்சியில் இருக்கிறது போக மிச்சம் மீதி இருக்கிறவங்கதான் இதில் இருக்கிறாங்கங்கிற நிலைமையை மாற்றணும்னா, புதுசா ஏதாவது செய்துபார்க்கலாம். `தோழர் தோழர்'னு கட்சியில் உள்ள காம்ரேட்டுகள் சொல்வதைவிட சோஷியல் மீடியாவில் தோழர் புராணம் பாடுறவங்கதான் அதிகம். ஃபேஸ்புக் `லைக்' சிம்பலையே சின்னமாக்கி அந்தத் தோழர்களை எல்லாம் பிடிச்சு உள்ளே போட்டுட்டா, மற்ற கட்சிகளை சிதற விடலாம் பாஸு!

காங்கிரஸ் : கை சின்னம்னு வெச்ச ஒரே காரணத்தாலோ என்னவோ அஞ்சு விரல்கள் மாதிரியே ஆளுக்கொரு திசையில பிச்சிக்கிட்டு நிற்கிறாங்க. அதனால கால் சின்னத்தையும் வைக்க முடியாது. சேஞ்சுக்கு முழங்கால் சின்னத்தில் நின்று முட்டுக்கொடுத்துப் பார்க்கலாம். ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருந்த வேட்டி கிழிக்கும் வேலையை விட்டுவிட்டு, வேட்டியைக் கொஞ்சம் முட்டி தெரிய ஏற்றிக்கட்டி, `உங்கள் சின்னம் முழங்கால் சின்னம்' என யாத்திரையாய் சென்று வீடுகள் தோறும் முழங்கினால் தேறலாம். மூட்டுவலிதான் மிச்சம் என்றால் அமிர்தாஞ்சனை தேய்த்துக்கொண்டு அமைதியாக வீட்டிலேயே உட்காரலாம்!

ச.ம.க : சின்னமே இல்லாத இந்தக் கட்சிக்கு கறிவேப்பிலை சின்னம்தான் மிகச்சிறப்பாக இருக்கும். `காதலிகளால் கழட்டிவிடப்பட்ட காளையர்கள் சங்கம்'னு சந்தானம் ஆரம்பிச்ச மாதிரி, கட்சிகளால் கழட்டி விடப்பட்டு கறிவேப்பிலையாக்கப்பட்டதாக (!) சொல்லும் ச.ம.க-வுக்கு இதைவிட வேறு எந்தச் சின்னம் பொருத்தமாக இருக்கப்போகுது? அப்படியே `கறிவேப்பிலையா? இல்லை... கறிவேப் பிலையா?' என்ற சந்தேகம் வராதவாறு சின்னம் ஆரம்பித்தவுடனேயே தொண்டர்களுக்கு சந்தேகத்தை தீர்க்க சிறப்புக்கூட்டங்கள் நடத்த வேண்டிய பொறுப்பும் இருக்கிறது!

- ஜெ.வி.பிரவீன்குமார்