கலாய்
Published:Updated:

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

டைம்பாஸ் டரியல் விருதுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
டைம்பாஸ் டரியல் விருதுகள்!

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

முடிந்த 2016-ம் வருடத்தில் உருண்டு புரண்டு பெர்ஃபார்ம் செய்த சிறந்த பெர்ஃபார்மர்களைப் பாராட்டி டைம்பாஸ் சார்பில் விருது வழங்குகிறோம். கரகோஷம் எழுப்பி வாழ்த்தலாமே ப்ரெண்ட்ச்...

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

‘பதஞ்சலி’ நிறுவனத்தின் மூலம் பிசினஸில் பட்டையைக் கிளப்பிய பாபா ராம்தேவுக்கு ‘இவரு பெரிய கப்பல் யாவாரி’ விருது.

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

‘A’ சர்டிஃபிகேட் படங்களாகவே எடுத்துத்தள்ளும் ஜி.வி.பிரகாஷுக்கு ‘நேத்து காலையிலகூட நல்லாத்தானய்யா இருந்தே’ விருது.

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

‘ஃப்ரீடம் -251’ மொபைல் போன் அறிவித்து புஸ்ஸான ரிங்கிங் பெல்ஸ் கம்பெனிக்கு ‘வாம்மா மின்னல்...’ விருது.

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

மத்திய அரசின் எல்லாத் திட்டங்களுக்கும் முட்டுக்கொடுத்த தேச பக்தர்களுக்கு ‘நான் அப்படி என்ன பண்ணிட்டேனு எனக்குப் பாராட்டு விழா’ விருது.

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

கூட்டு சேர்ந்து கோட்டைவிட்ட மக்கள் நலக் கூட்டணியினருக்கு ‘எப்படி இருந்த நாங்க இப்படி ஆகிட்டோம்’ விருது.

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

‘இது நம்ம ஆளு’ படத்தில் கெஸ்ட் ரோலில் தலைகாட்டிய சந்தானத்திற்கு ‘நடிச்சா ஹீரோதான்’ விருது.

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

ரகசியங்களால் சூழப்பட்ட அறை எனப் பெயரெடுத்த அப்போலோ மருத்துவமனைக்கு ‘என்னய்யா நடக்குது அங்க...?’ விருது.

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

சவுண்ட் எஃபெக்ட்டால் அலறவிட்ட சூர்யாவுக்கு ‘அவ்வளவு சத்தமாவா கேக்குது...’ விருது.

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றத்திற்கு  ‘தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றுமில்லை. யுவர் ஹானர்’  விருது. 

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

லண்டன் டாக்டர் பீலே தனக்கு விசிட்டிங் கார்டு கொடுத்ததாகச் சொன்ன வைகோவுக்கு ‘ஓரமா போய் வெளாடுங்க பெருசு’ விருது.

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

ஏ.டி.எம் வாசலில் காத்து நின்ற மக்களுக்கு ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்யா’ விருது.

டைம்பாஸ் டரியல் விருதுகள்!

பூரண மதுவிலக்கு திட்டத்தை மறந்தேபோன அரசியல்வாதிகளுக்கு ‘என்னாச்சி... கிரிக்கெட் வெளாண்டோம்... நீதான அடிச்ச...’ விருது.

- விக்கி