கலாய்
Published:Updated:

புஸ்ஸாகும் புத்தாண்டு சபதங்கள்!

புஸ்ஸாகும் புத்தாண்டு சபதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
புஸ்ஸாகும் புத்தாண்டு சபதங்கள்!

புஸ்ஸாகும் புத்தாண்டு சபதங்கள்!

புஸ்ஸாகும் புத்தாண்டு சபதங்கள்!

புத்தாண்டு பிறக்கும் போது நடுராத்திரியில் உணர்ச்சி வசப்பட்டு ஏகத்துக்கு சபதங்கள் எடுத்துக் கொள்வோம். ஒரே வாரத்துல அது மறந்தே போயிடும். அடுத்த வருஷ ஆரம்பத்துல `திரும்பி மொதல்ல இருந்து ஆரம்பிப்போமா?'ன்னு விளையாடுவோம். இதைப் படிக்கிறப்போ `ஃப்ளாப்' ஆக வாய்ப்பிருக்கும் 6 சபதங்கள்தான் இவை...

1 ) குவாட்டருக்கு நோ : டிசம்பர் 31  மிட்நைட் பிரண்ட்ஸுங்க கூடப் போய் ஒரே ஆட்டம்தான். ஒரு வாரம் ஸ்ட்ராங்கா நிப்பாங்க. அப்புறம் முடியாம, படிப்படியா மதுவிலக்குன்னு அடிச்சு சொல்லுவாங்க. வருஷ நடுவிலேயே, `அளவா குடிப்பேன் தெரியுமா?' மோடுக்கு மாறி இருப்பாங்க!

2 ) மெகா சீரியல் மேனியா : `சீ... என்ன எழவெடுத்த சீரியல்! இது வந்ததுல இருந்து நம்ம புள்ளக்குட்டி, புருஷனை மறந்துட்டோம். இந்த வருஷத்துல இருந்து சீரியல் கட்'னு நம்ம லேடீஸ் சென்டிமென்ட் பேசுவாங்க. ஒரு நாள் தாங்காது. `அந்தப் பொண்ணுக்கு என்னாச்சோ?'ன்னு அலறுவாங்க. `ஒரே ஒரு சீரியலை மட்டும் கடைசி வரைக்கும் பாத்துக்குறேன்'னு சொல்லுவாங்க.. அந்த சீரியல் முடியவே பத்து வருஷம் ஆகும்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன?

3 ) ஹலோ நான் பேசமாட்டேன் : இது யூத்துங்க சபதம். போன்ல கடலை போடுறதைக் குறைச்சிட்டு படிக்கப்போறேன், வேலை பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு திரிவாங்க. `அழகன்' மம்மூட்டி-பானுப்ரியா ரேஞ்சுக்கு நான்ஸ்டாப்பா பேசுவாங்க. கேட்டா, `நான் கூப்பிடல... இன்கம்மிங் கால் தான்!'ன்னு மேட்டரை க்ளோஸ் பண்ணிடுவாங்க.

4 ) ஸ்ட்ரிக்ட் டயட் : `இந்த வருஷம் நொறுக்கு தீனிக்குத் தடா போட்டு ஸ்லிம் ஆகிக் காட்டுறேன்'னு டயட்டுக்கு மாறுவாங்க. `தொப்பையைக் குறைக்க தினமும் வாக்கிங் போறேன்'னு சொல்லுவாங்க. நாலு கிலோமீட்டர் நடப்பாங்க. அப்புறம் ரெண்டு கிலோமீட்டர், ஒரு கிலோமீட்டர்னு மீட்டர் கணக்குக் குறைஞ்சு போய், கடைசியில நோ மைலேஜ். கேட்டா வழக்கம் போல நாளைக்கு... அவ்ளோ தாங்க வருஷம் முடிஞ்சிடும்!

5 ) கடன் அன்பை முறிக்கும் :
`யாருகிட்டேயும் கடன் வாங்க கூடாது'ன்னு சொல்லிக்கிட்டு  அம்பானி கணக்கா வீராப்பா திரிவாங்க. அப்புறம் `நோ மணி, நோ மணி'ன்னு பாடிக்கிட்டு மல்லையா மாதிரி சுளையா கடன் வாங்கிப்ப் பழகிட்டு திருப்பிக் கொடுக்க திணுறுவாங்க.

6 ) ஆங்ரி பேர்ட் :
`என்னோட முன் கோபத்தை நான் குறைச்சுப்பேன்'னு போதி மரத்துக்கு கீழே உட்கார்ந்து வந்த புத்தர் கணக்கா பேசுவாங்க. அப்புறம் விட்ட குறை, தொட்ட குறையா மெல்ல மூக்குக்கு மேல வர்ற கோபம், தலைக்கு ஏறும். கேட்டா `நான் நார்மலாதான் இருக்கேன். உங்க கண்ணுக்கு எல்லாம் தப்பா தெரியுது!'ன்னு சட்டம் பேசுவாங்க.

போதும்யா!

- எம்.விக்னேஷ்