கலாய்
Published:Updated:

யாரு பாஸ் நீங்க?

யாரு பாஸ் நீங்க?
பிரீமியம் ஸ்டோரி
News
யாரு பாஸ் நீங்க?

யாரு பாஸ் நீங்க?

யாரு பாஸ் நீங்க?

ணக்கம் மக்களே! நீங்க வாட்ஸ்அப் உபயோகிக்கிறீங்களா? அப்போ கண்டிப்பா இவங்களோட தாக்கம் உங்களுக்கு இருக்கும்.

ஒரு சாய்பாபா போட்டோவை அனுப்பிட்டு, `இந்தப் போட்டோவை 10 செகண்ட்ல 10 குரூப்க்கு அனுப்பினா, ஒரு மணி நேரத்துல நல்ல செய்தி வரும்'னு ஃபார்வேர்ட் பண்ணுவாங்க. ஆனா, ஒரு மணிநேரம் கழிச்சு நல்ல செய்தி வராம, திரும்ப அதே சனிதான் வருவான். இந்தத் தடவை குழந்தை இயேசு படமோ, ஏழுமலையான் படமோ உங்க மொபைலை எட்டிப் பார்த்திருக்கும். மறுபடியும் முதல்ல இருந்தா?

‘மாண்புமிகு மாணவன்’னு ஆயிரம் பேரை அறிமுகப்படுத்துவார். `இவர் என்ன பண்ணியிருக்கார்னு தெரியுமா?'னு கேட்டு, `ஒரு பேட்டரி சிம்பல் இருக்கு. அதை பத்து குரூப்புக்கு அனுப்புனீங்கன்னா, உங்க மொபைல் பேட்டரி ஃபுல் ஆயிடும்.' என்பார்கள். இதை ஐ.ஐ.டி-யில் படிக்கும் அந்த `மாண்புமிகு மாணவன்' கண்டுபிடித்ததாகச் சொல்வார்கள்.

‘மாரியம்மன் கோவிலுக்குக் கூல் ஊத்தப்போறோம். காசு கொடுங்க’னு சொல்றமாதிரி, ஒரு குழந்தையோட படத்தைப் போட்டு, `இந்தப் புள்ளைக்குக் கேன்சர். இதை ஃபார்வேர்ட் பண்ணாலே, பத்துப் பத்துப் பைசாவா குழந்தையோட கணக்குல சேர்ந்துடும்'னு இருக்கிற ‘இலவச இணைப்பு’ வாசகத்தைப் படிச்ச பிறகுதான் பதற்றம் குறையும். அடேய்... கண்ணாடியைத் திருப்புனா, எப்படிடா ஆட்டோ ஓடும்?

அதே கான்செஃப்ட்ல `மோடி ரீசார்ஜ் பண்ணுவார், அக்கவுன்ட்ல ஆயிரம் ரூபாய் ஏறும்', `உண்மையான தமிழன்னா ஷேர் செய்யவும்!' வரை எக்கச்சக்க பிட்டைப் போடுவாங்க.

அடேய்களா!

- முரளி.சு