கலாய்
Published:Updated:

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

‘`தான் ஒரு வருடமாகக் கடலை போட்டுக்கொண்டிருந்தது ஃபேக் ஐடி எனத் தெரிந்ததும், ஃபேஸ்புக்கைத் திறந்த விவேக்...’’ - இந்த ஒரு வரியை டெவலப் செய்து, டைம் பாஸ் வாசகர்கள் சொன்ன குட்டிக்கதைகள் இதோ...

டேவிட் பில்லா : தன்னை ஏமாற்றிய ஃபேக் ஐடியை, தனது நண்பனுக்கு மெஸேஜ் மூலம் அனுப்பிவிட்டு, ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனத் தனது சுவரில் கிறுக்கிவிட்டு எழுந்து நடந்தான்.

பாஷா : தான் காதலித்து வந்த பெண், கழட்டிவிட்டதால் மனம் வெதும்பியிருந்தான். இதனால், தான் ஒரு வருடமாகக் கடலை போட்டுக்கொண்டிருந்தது ஃபேக் ஐடி எனத் தெரிந்ததும், ஃபேஸ்புக்கைத் திறந்த விவேக் மீண்டும் கடலை போடத் தொடங்கினான்.

சிவநேசன் : பெண் பெயரில் ஐடி ஆரம்பித்து தான் பலரை ஏமாற்றியதுபோல, தன்னையும் ஒரு ஆள் ஏமாற்றிவிட்டான் என்பதை அறிந்து, ‘வல்லவனுக்கு வல்லவன் பூமியில் உண்டு’ என சமாதானப்படுத்திக் கொண்டான்.

சண்முகசுந்தரம் : தானும் ஒரு ஃபேக் ஐடி ஆரம்பித்து, இத்தனை நாள் கடலை போட்ட அந்த ஃபேக் ஐடிக்கு ரெக்வெஸ்ட் கொடுத்தான் விவேக்.

சுரேஷ் : கடலை போட்டுவந்தது ஃபேக் ஐடி எனத் தெரிந்ததும், இன்னொரு பெண் ஐடியிடம் பேசத் தொடங்கினான். திரிஷா இல்லனா நயன்தாரா பாஸ்!

மனோ : விரக்தியின் உச்சிக்கே சென்ற விவேக்குக்கு, `இவன்தான் இந்த வேலையை பண்ணிருப்பானோ?' என பார்க்கும் எல்லோர் மீதும் சந்தேகம் வந்தது. கொஞ்ச நாளில் ஃபேஸ்புக் பக்கம் செல்வதையே நிறுத்திக்கொண்டான்.

சண்முகசுந்தரம் :
“போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்” என்று ஸ்டேட்டஸ் போட்டு, அந்த ஃபேக் ஐடியின் பெயரை டேக் செய்தான். விவேக் மாதிரியே கடலை போட்டுவந்த பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

வைஷ்ணவி சக்திவேல் : ஏமாற்றத்தை உணர்ந்த அவன், ‘இப்படித்தானே மத்தவங்களுக்கும் ஏமாற்றமா இருந்திருக்கும்’ என யோசித்தான். அதன்பின், தான் வைத்திருந்த ஃபேக் ஐடி அத்தனையையும் டீ-ஆக்டிவேட் செய்தான்.