கலாய்
Published:Updated:

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ் யமான  பதில்கள்...

இந்த வருடத்தின் கடைசி நாள் அன்று காலண்டரில் தேதி கிழிக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்?


மது : வருஷம் இப்படி ஓடுதே, பிள்ளைக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு இவங்களுக்கு தோணலையானு நினைப்பேன்.

ஜெய் மணி : நானெல்லாம் யாராவது கிழிச்சு வெச்சிருந்தாதான் காலண்டர்ல தேதியே பார்ப்பேன்.

விக்கிரமாதித்யன் : இதோட இருபத்தாறு வருஷத்தைக் கிழிச்சாச்சு... காலண்டர் வைக்கிற இடமும் மாறல... கிழிச்ச நானும் மாறல.

விஷால் : இதோட இந்த வருஷம், 365 நாள் காலண்டர் பேப்பர் கிழிச்சுருக்கேன்னு பெருமைப்படுவேன். #FeelingProud #HardWork

முருகன் : இதுவரையும் புடுங்கினது பூராமே தேவையில்லாத ஆணிதான்னு தோணும்.

விஜயா விவேக் : வேற என்னத்த... நாளையிலேர்ந்து புது காலண்டர்ல கிழிக்கப் போறோம்னுதான்.

சரவணன் : மறுபடியும் முதல்ல இருந்தா... ஷ்ஷப்பா.

பதில் சொல்லுங்க பாஸ்!

விவசாயம் அழியாமல் பாதுகாக்க என்ன பண்ணலாம்?

இம்ரான் : விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும்.

கிருஷ்ண ரத்னம் : விவசாயிகளுக்கு மாதந்தோறும் நிரந்தர வருமானம் தர வேண்டும். அதற்கு அவா்களை விவசாயத் துறை மூலம் மத்திய அரசு ஊழியா்களாக்கலாம்.

ராஜ் விகாஷ் :
அனைத்திலும் சீனப் பொருட்கள் இறக்குமதியைத் தடுத்தாலே போதும். இல்லையென்றால் அரிசியில்கூட Made in china முத்திரை வரும்.

முத்துராஜ் : தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாயிக்கு வழங்கினாலே போதும்.

சஞ்சீவ் : சென்னைக்கு மிகமிக அருகில்னு கூவிக் கூவி விளம்பரம் செய்யும் ரியல் எஸ்டேட்காரர்களை அடக்கி வைக்கணும் பாஸ்.

தனசேகர் :
இதுக்குதான் கங்கையையும் காவிரியையும் இணைக்கச் சொல்றோம்.

கவிதா : விவசாயிகள் கடன் வாங்குற நிலைமை வராம பார்த்துக்கிட்டாலே போதுங்க எசமான்.

பதில் சொல்லுங்க பாஸ்!

இந்த வருடத்தில் நீங்கள் ஆவலோடு பார்த்து பல்பு வாங்கிய படம் எது? ஏன்?

மது : 150 கி.மீ வேகத்துல போற ட்ரெயின் மேல நின்னு தனுஷ் டான்ஸ் ஆடுனதைக்கூட ஒத்துக்குவேன் ப்ரோ... ஆனா ‘தொடரி’, ‘டைட்டானிக்’கு இணையான காதல் காவியம்னு பிரபுசாலமன் சொன்னாரு பாருங்க, அதை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன்.

தீரன் கவி : எதைச் சொல்ல... எத்தனையைச் சொல்ல... அவ்வ்.

முத்துராஜ் : இந்த வருஷம் வெளிவந்ததெல்லாம் படம் இல்லை, பாடம். இனிமே தியேட்டருக்கே போகக்கூடாதுனு கத்துக் கொடுத்துச்சே.

மோகன் :
‘கொடி’- மரண அடி. டீஸர் பார்த்துட்டு செமையா இருக்கும்னு நினைச்சுப் போனா, செஞ்சு அனுப்புறாய்ங்க.

சுதாகர் : ‘ரெமோ’. எதிர்பார்த்துப் போன படம்ங்கிறதால ரொம்பவே ஏமாந்துட்டேன்.

கார்த்தி : நயன்தாராலாம் நடிச்சிருக்குனு நம்பிப் போன ‘திருநாள்’. ச்சே... என்ன படம்யா?

வங்கிகளில் நீங்கள் அனுபவித்த மறக்க முடியாத அலைக்கழிப்பு?


வெங்கடேஷ் :
அந்தக் கடை ரொம்ப நாளா பூட்டியே கிடக்கே... வாடகைக்கு விடுவாங்களா?

யோவ் அது ஏ.டி.எம் யா...

மது :
நவம்பர் 8-க்கு அப்புறம் நடந்த எல்லாமே எனக்கு மறக்க முடியாத அனுபவம்தான்.

பரத் ராஜ் : ஒரே ஒரு பேனாவுக்கு நான் பட்ட பாடு இருக்கே...

இம்ரான் :
செக் டிரான்ஸ்ஃபர் பண்றதுக்கு லைன்ல ஒருமணி நேரம் நின்னதுதான். கடைசியாகத்தான் தெரிஞ்சுது, அதுக்கு வேற கேபின்னு. இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமேய்யா.

கௌதமன் :
அதை வேற ஏங்க ஞாபகப்படுத்திட்டு? மனசெல்லாம் ஒரே ரணமா இருக்கு.

பிரவீன் :
ஐந்நூறு ரூபாய் எடுக்கிறதுக்கே ஆபீஸ்ல அரைநாள் லீவுபோட வேண்டியதா இருக்கு. யம்மாடி எம்புட்டுக் கூட்டம்..!

பதில் சொல்லுங்க பாஸ்!

2017-ல் இதெல்லாம் மாறாதா? என நீங்கள் நினைக்கும் விஷயங்கள்?

சண்முக சுந்தரம் : போக்குவரத்துக்கு மேடு பள்ளம் இல்லாத சாலை வேணும்.

வினோ திரு : சீரியல் வில்லிகள் திருந்தணும். பொண்ணுங்க பாவம் பாஸ்.

ஷியாம் : விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையேயான சண்டை.

மனோ : விஜய் அண்ணா கெட்டப் மாத்தாம ஒரே மாதிரி நடிக்கிறது மாறாதா?

மாரிஸ் கண்ணன் :
குனிதல், காலில் விழுதல் மாதிரியான ரத்தத்தின் ரத்தங்களோட செயல்பாடு மாறாதா?

பழனிகுமார் :
இதுவரையும் நான் சிங்கிள். இனிமேலாச்சும் அது மாறுமானு தெரியலையே!