கலாய்
Published:Updated:

கேஷ்லெஸ் 'இந்தியன்' வாழ்க்கை!

கேஷ்லெஸ் 'இந்தியன்' வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
கேஷ்லெஸ் 'இந்தியன்' வாழ்க்கை!

கேஷ்லெஸ் 'இந்தியன்' வாழ்க்கை!

கேஷ்லெஸ் 'இந்தியன்' வாழ்க்கை!

`கேஷ்லெஸ் இந்தியா'வுல `டைம்பாஸ்' பண்ண படத்துக்குப் போறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இதோ பாருங்க!

காலையில எந்திரிச்சி இன்னைக்கு என்னதான் பண்ணலாம்னு யோசிச்சு, `படத்துக்குப் போகலாம்'னு முடிவெடுத்து, டிக்கெட் புக் பண்ண நெட்டை ஓபன் பண்ணா... பாழாப்போன `ஐயோ' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) லோடு ஆகுறதுக்குள்ள சுடுதண்ணி காய்ஞ்சுடும்!

சரி, குளிச்சுக் கெளம்பி, `என்ன படம் ஓடுது?'னு நேரடியாவே பார்க்கக் கெளம்புவோம். அப்போதான் ஒருத்தர், `இப்பெல்லாம் எங்கப்பா சினிமா போஸ்டர் ஒட்டுறாங்க. சின்னம்மா போஸ்டர்தான்!'னு ஃபீல் பண்ணுவார். சரிதான்னு நேரடியாவே தியேட்டருக்குத்தான் போகணும்!

சினிமாவுக்குப் போறதுனா சும்மாவா? காத்து அடிச்சா பரவாயில்ல! குளிர் அடிச்சா பரவாயில்ல! மழை பெய்ஞ்சாலும் பரவாயில்ல! எதுக்கும் அலட்டிக்காம, குல்லாவுல இருந்து, ராணுவத்துல யூஸ் பண்ற பூட்ஸ் வரைக்கும் போட்டுப்போம்!

டிக்கெட் கவுன்டர் ஓபன் பண்ண ஒன்பது நிமிடம் இருக்கேனு டீ, பஜ்ஜி சாப்பிடலாம் கேன்டீன்ல கை நீட்டுவோம். கையில டீயும், வடையும் கெடைச்ச பிறகுதான் ஞாபகத்துக்கு வரும். நம்மகிட்ட இருக்கிறது ஒரே ஒரு பிங்க் கலர் நோட்டாச்சே!!! பிறகு? நீங்க பாட்டுக்கு `கோ கேஷ்லெஸ்'னு காசை நீட்டுனா, ஃபேஸ்லேயே அடி விழும். `இந்தாங்க உங்க டீயும், வடையும்'னு கொடுத்துட்டு, திரும்பிப் பார்க்காம தியேட்டருக்குள்ள புகுந்துடணும்!

கேஷ்லெஸ் 'இந்தியன்' வாழ்க்கை!

டிக்கெட் கவுன்டர்ல பிங்க் கலர் நோட்டை நீட்டுங்களேன். முகம் சுண்டாம, வெயிட் பண்ணச் சொல் லிட்டு, ஊரே டிக்கெட் வாங்குன பிறகு கிடைக்குற சில்லறையில இருந்து நூறு நூறா எண்ண ஆரம்பிப்பார். `கொஞ்சம் சீக்கிரமா கொடுய்யா... பாதி படம் முடிஞ்சிருச்சு!'னு பதறிக்கிட்டு கெடப்பீங்க!

இதோட முடிஞ்சதா... வாங்குன சில்லறையை சின்ன பர்ஸுக்குள்ள கஷ்டப்பட்டு திணிச்சுட்டு, கஷ்டப்பட்டு சீட் நம்பரைத் தேடி நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கிட்டே உட்கார்ந்தா...

``ஜன கன மன அதிநாயக ஜெயகே

பாரத பாக்ய விதாதா...'' பாடுறதுக்கு நிறுத்திட்டாங்க. தேசபக்தியைக் காட்டணுமாம்!

கண்ணாடியைத் திருப்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?

- க.மணிவண்ணன்