கலாய்
Published:Updated:

லாஜிக் இல்லா மேஜிக்!

லாஜிக் இல்லா மேஜிக்!
பிரீமியம் ஸ்டோரி
News
லாஜிக் இல்லா மேஜிக்!

லாஜிக் இல்லா மேஜிக்!

லாஜிக் இல்லா மேஜிக்!

`லாஜிக்கே இல்லியேடா!'னு பல படங்களைப் பார்க்கும்போது நினைச்சிருப்போம். அந்த `லாஜிக் எங்கேடா?' நினைப்பையெல்லாம் கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணிப் பார்ப்போமா?

முதல் இடம் `சின்னத்தம்பி'யேதான். ஆழி தெரியும், தூளி தெரியும். ஆனா, தாலி தெரியாதாம்! தவிர, `கல்யாணம் எதுக்கு?'னு கேட்பாங்களாம். நம்ம பிரபு `சாப்பாடு போடுறதுக்கு'னு அப்பாவியாய் வசனம் பேசுவாராம். எலேய்..!

`தொடரி' சரோஜா கேரக்டருக்கு வருவோம். ஓடுற டிரெயின்ல ஏறி, ஹீரோ - ஹீரோயின் கொடுக்குற அந்த நெக் மூவ்மெண்ட் ஷாட்டும், ஓடுற டிரெயினுக்கு மேலேயே ஓடி, ஆடுற காட்சிகளும் கண்ணுக்குள்ளேயே நிற்குதே பாஸ்! இதெல்லாம் சட்டப்படி குற்றம்யா!

விஜய்ணா நடிப்புல `பத்ரி' படம் வந்துச்சே ஞாபகம் இருக்கா? அண்ணனுக்குக் கை உடைஞ்சதும், தம்பி பாக்ஸிங் ஆட வருவார். பயிற்சியின் போது லாரியைக் கையில ஏத்திக்குவார். ஹைலைட்டா, டிரெயினையே ஓவர்டேக் பண்ணி ஓடிக்கிட்டு இருப்பார்! ஏம்பா, அண்ணன், தம்பி சகோதரத்துவத்தை வளர்க்க உங்களுக்கு வேற காட்சிகளே கிடைக்கலையா?

இப்போ `பையா' படத்துக்கு வாங்க... கார்த்தி படம் முழுக்க தமன்னாவைக் கூட்டிக்கிட்டு சுத்திக்கிட்டு இருப்பார். படம் முடியிறதுக்கு அரைமணி நேரம் முன்னாடிதான் பெங்களூர்ல இருக்கிற ஜெகன் வீட்டுக்குப் போவாங்க. ஆனா, கார்த்தி ஃபிரெண்ட்ஸ் எல்லோரும், கார்த்தி போனில் அழுத அடுத்த 10 நிமிடத்துல பெங்களூர் நுழைவு வாயிலை ரீச் பண்ணி, கார்த்தி காரைக் கேட்ச் பண்ணி, ஆறுதலா நாலு வார்த்தை பேசுவாங்க. என்னம்மா இது?

லாஜிக் இல்லா மேஜிக்!

`வீரம்' படத்துல அஜித்தோட தலைமுடி நரைச்சதுக்குக் காரணம் `டீக்கடைக்காரர்'தான்னு காமெடிக்கு சீன் வெச்சாங்க சரி. அதை தம்பிகளும் நம்பினாங்க. அதுவும் சரி... ஆனா, `ஏன் தலை நரைச்சிருக்கு?'னு நாசர் கேட்கலை. தமன்னா கேட்கலை. இன்னபிற உற்றார் உறவினர்கள் ஒருத்தரும் கேட்கலை! அவங்களுக்கெல்லாம் டைரக்டரே சொல்லியிருப்பாரோ? ஊர்ல என் தங்கச்சிகிட்ட இருந்து டி.வி ரிமோட்டை வாங்குறதுக்குள்ள நான் படுற பாடு எனக்குத் தெரியும். ஆனா, படத்துல `தல'யை வில்லன்கள் கடப்பாறை, கோடாரியையெல்லாம் விட்டு வீசுறாங்க. ம்ஹூம்... நின்னு விளையாடுறாப்புல! இதெல்லாம் போங்கு பாஸ்! 

சினா கானாவின் `ரெமோ'வில் இருக்கே அம்மாம்பெரிய ஓட்டை! பொண்ணுங்க மேக்கப் போடுறதுக்கே ஒரு பொழுது ஆகும்போது, பொண்ணுங்க மாதிரி மேக்கப் போட எவ்ளோ நேரம் ஆகும்? `கத்தரிக்கவும், கலக்கவும், தடவவும்' மாதிரி சட்டு சட்டுனு ரெஜினா மோத்வானியா மாறிவந்து நிற்கிறார் சிவா. வில்லன்கிட்ட `மான் கராத்தே' போட்டுட்டு, ரெண்டே நிமிடத்துல எஸ்.கே.வா வந்து நிற்கிறதெல்லாம், உங்களால மட்டும்தான் முடியும். மாறுவேஷத்துக்கான மரியாதையே போச்சப்பா உங்களால!

இன்னும் எவ்வளவோ இருக்கு. பொழுதுபோகலைனா, யோசிச்சுக்கிட்டே இருங்க. பலபேர் சிக்குவாங்க!

- ஜெ.நிவேதா