பெயர் : மு.க.அழகிரி

பிறப்பு : 30 ஜனவரி, 1950

வயது : 66

இருப்பிடம் : மதுரை

அழகிரி என்பவர் முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க-வின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளரும், தி.மு.க-வின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

சாதனைகள் :

‘தி.மு.க-வின் தியாகக்கடலே, அகில உலகத்தின் அஞ்சாநெஞ்சனே, தூங்காநகரத்தின் தூர்வாரியே, மதுரையின் மண்வெட்டியே, கட்சியின் கடப்பாரையே...’ போன்ற வாசகங்களே இவர் புகழ் சொல்லும். ‘அழகிரி என்றால் அன்பு கலந்த பயம் என்று அர்த்தம்’ என ‘அஞ்சா நெஞ்சரின் 63’ புத்தகத்தில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் முதல் எழுத்தும் ‘அ’, இவரது பெயரின் முதல் எழுத்தும் ‘அ’. அகில இந்திய எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மரூர்.தர்மலிங்கம் ஒருகாலத்தில் ‘இந்தியப் பிரதமர் அழகிரி, தமிழக முதல்வர் ஸ்டாலின்!’ என்ற கொள்கையோடு வாழ்ந்து வந்தவர். உலக அளவில் பிரபலமான வாஸ்து நிபுணர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் மகரிஷி டாக்டர். ஜெயக்குமார் என்பவர்கூட ‘தி.மு.க-வின் தலைமையை அழகிரிதான் கைப்பற்றுவார்’ எனக் கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க தோல்விடையும் என்பதை முன்கூட்டியே கணித்து கெத்து காட்டிய தீர்க்கதரிசி இவர். அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்தநாள் முடிந்து அடுத்த நாளே அடுத்த பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி போஸ்டர் ஒட்ட ஆரம்பித்துவிடுவார்கள். மதுரையின் நெருக்கடியான வீதிகளுக்குள் இன்னமும் எப்படி ஆடு மாடுகள் ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை இதனால் அறியலாம்.

வேதனைகள் :

கரும்புத் தோப்புக்குள் கான்க்ரீட் சாலை அமைத்து, குடிசைக்குள் நுழைந்து இடியாப்பம் சாப்பிட்டு, கால்பந்து ஆடி, கம்பு சுற்றி என ‘நமக்கு நாமே’ பயணத்தின்போது நல்லபெயர் வாங்க கஷ்டப்பட்டுக் களமாடிக்கொண்டிருந்தார் ஸ்டாலின். ஆனால், `நமக்கு நாமே பயணம் ஒரு காமெடி டைம்’ என ஒரே வார்த்தையில் ஆட்டையைக் களைத்து ஸ்டாலினை ஆத்திரப்படுத்தினார் அண்ணன் அழகிரி. எப்படி சசிகலாவின் குரலைத் தமிழக மக்கள் இதுவரை கேட்டதில்லையோ... அதேபோன்று அழகிரியின் குரலை நாடாளுமன்றத்திலும் யாரும் கேட்டதில்லை.

குழப்பங்கள் :

ஒருமுறை லண்டன் சென்றிருந்தபோது, ‘இன்னும் இரண்டு மாதங்களில் நல்ல செய்தி சொல்வேன்’ எனச் சொல்லியிருந்தார். சொல்லி இருபது மாசம் ஆச்சு. அந்த நல்ல செய்தி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இவரது மகன் தயாநிதி தயாரித்த ‘மங்காத்தா’, ‘தகராறு’, ‘தூங்காநகரம்’ போன்ற படங்களும் இந்த உலகுக்கு எதையோ சொல்ல வருகின்றன...

மேலும் படிக்க :

அஞ்சா நெஞ்சரின் 63
அண்ணன் சொல்லைத் தட்டாதே
போஸ்டர் வாசகங்கள் 1000
கண்டபடி கடுப்பேத்துவது எப்படி?
நல்ல செய்தி சொல்வோம்.
நல்லதே நினைப்போம்!

மேலும் பார்க்க :

தூங்காநகரம்
அண்ணன் என்னடா
தம்பி என்னடா...
ஆட்டைக்கு ரெடியா
இதயம் இனிக்கும்...

- ப.சூரியராஜ்