Published:Updated:

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

சிறுவயதில் நண்பர்களுக்குச் செய்து கொடுத்த காமெடியான சத்தியங்கள் என்ன?

கோபிநாத் : அம்மா சத்தியமா நாம யாரும் கல்யாணமே செஞ்சுக்க கூடாதுடா!

கானதீபன் வேலாயுதம் : எக்ஸாமுக்கு நாம நல்லா படிச்சிட்டு நண்பன்கிட்ட, `மாப்ள நானும் சத்தியமா படிக்கவே இல்லடா'னு சொல்லிருப்போம். ஆனா, அடிஷனல் ஷீட் வாங்கி எழுதும்போது நண்பன் பார்ப்பானே ஒரு பார்வை!

லீலா பாலாஜி : `நீயும் நானும் ஒரே வீட்டுக்கு மருமகளா போகணும்'னு சின்ன வயசுல ஃப்ரெண்ட்ஸ் சத்தியம் பண்ணிருப்போம்.

பதில் சொல்லுங்க பாஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெங்கடேஷ் : கிரிக்கெட் விளையாடும்போது நாம அவுட் ஆகிட்டா, ஏமாத்துறதுக்காக பௌலிங் போட்டவன் மேலேயே சத்தியம் பண்ணுவோமே!

அய்யப்பன் : செய்த சத்தியத்தை வெளியே சொன்னா பலிக்காமப் போயிடும். அசுக்கு... புசுக்கு. நான் சொல்ல மாட்டேனே!

சிவகுருநாதன் : பொண்ணுங்ககிட்ட பேசவே கூடாதுனுதான் பாஸ் சத்தியம் பண்ணோம். அதை இப்போவரைக்கும் ஃபாலோ பண்றேன் பாஸ்! உங்க மேல சத்தியம்!

பதில் சொல்லுங்க பாஸ்!

மொபைல்போனை உபயோகிக்கும்போது, உங்களுக்குக் கடுப்பாகும் தருணங்கள் என்னென்ன?

அகஸ்டின் செல்வா : தமிழ்ல டைப் பண்ணும்போது நாம சரியாதான் எழுதுவோம். ஆனா, அதுவா வேற ஏதோ எழுதி, ஸ்கீரீன்ல வரும்போது வர்ற டென்ஷன் இருக்கே! அப்பப்பப்பப்பா!

பானுப்பிரியா : நாம கஷ்டப்பட்டு நெட்பேக் போட்டு சாட் அல்லது டவுன்லோட் பண்ணிக்கிட்டுருக்கும்போது, நொய் நொய்னு யாராச்சும் கால் பண்ணிட்டே இருப்பாங்க. கடுப்பேத்துறாங்க மை லார்ட்.

ராகவன் : கையில இருக்கிற நாக்குப்பூச்சி வெளியே தெரியற அளவுக்கு வெறித்தனமா போஸ்ட் போட டைப் பண்ணிட்டு, கிளிக் பண்ணும்போது, நெட் பேலன்ஸ் முடிஞ்சதுனு மெசேஜ் வரும்.

வெங்கடேஷ் : மிஸ்டுகால் கொடுக்கிறது. ஒருத்தன் மிஸ்டுகால் கொடுத்தா பரவால்லை. அத்தனைப் பேரும் கொடுக்கிறானுங்களே!

கிருஷ்ணகுமார் செல்வராஜ் : யூ-டியூப், ஃபேஸ்புக் எல்லாத்துலேயும் வர்ற விளம்பரம்தான் ரொம்பக் கடுப்பேத்தும். பீட்டாவோட சேர்த்து அதையும் கொஞ்சம் தடை பண்ணிட்டா நல்லாருக்கும்.

கருப்ஸ் : லவ்வர் கால் பண்ணும்போது பேட்டரி லோ-னு காட்டும். அப்போ பார்த்து சார்ஜரை எங்கே தேடினாலும் கிடைக்காது. அப்போ வர்ற கடுப்புக்கு அளவே இல்லை.

பதில் சொல்லுங்க பாஸ்!

உங்களை மாதிரியே இருக்கிற மிச்ச ஆறு பேரை நேர்ல பார்த்தா என்ன பாஸ் பண்ணுவீங்க...?

ராஜேஷ் : நீங்க எல்லோரும் எந்த ஏரியா ஃப்ரெண்ட்ஸ்..? எங்கே பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கீங்கனு கேட்டுடுவேன்.

ராம் மோகன் : `உங்களுக்காச்சும் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கா, இல்லை நீங்களும் ஆல்வேஸ் சிங்கிளா?'னு கேட்பேன்.

பிரவின்குமார் : ஆறு பேரும் முதல்ல இருப்பாங்களா பாஸ்?

ஹரிசங்கர் : பார்த்த உடனே அவங்க எல்லார்கிட்டயும் கடன் கேட்பேன்.

கார்த்திகேயன் : எல்லோரும் சேர்ந்து நின்னு செல்ஃபி எடுத்து #நோ_எடிட் போட்டு ஃபேஸ்புக்ல போஸ்ட் போடுவோம். லைக்ஸ் பிச்சுக்கும்ல!

தியாகு : அவங்ககிட்ட போய் என்னையைக் காண்பிச்சு 'ஆல்ரெடி கேம் ப்ரோ' அப்படினு சொல்லிட்டு வந்துருவேன். பேஸிக்கலி ஐ யம் எ மீம் க்ரியேட்டர்.

பதில் சொல்லுங்க பாஸ்!

சில தியேட்டர்கள்ல கூல் டிரிங்க்ஸைத் தடை பண்ண மாதிரி இன்னும் வேற எதை எல்லாம் தடை பண்ணலாம் ஃப்ரெண்ட்ஸ்...?

அகிலேஷ் : பைக் பார்க்கிங்ல யாரும் இனிமே காசு வாங்கக் கூடாதுன்னு தடை போடணும்.

ஷாலினி : மொக்கைப் படத்தைத் தடை பண்ணினா நல்லா இருக்கும் பாஸ். காசு மொத்தமும் வேஸ்ட் ஆகுது.

விஜயசங்கர் : ஆன்லைன் புக்கிங்குக்குத் தடை போடலாம். ஏன்... பேசாம டிக்கெட்டுக்கு காசு வாங்குறதையே தடை பண்ணலாம்.

ஆண்டனி : பக்கத்துல உட்கார்ந்து கதை சொல்லிக்கிட்டே இருப்பாங்கள்ல. அதைத் தடை பண்ணணும். நாட்டைவிட்டே தடை பண்ணணும்.

அருண்ராஜ் : கார்னர் சீட்ல ஜோடியா உட்கார்ந்து ரத்தம் வர்ற அளவுக்கு ஷோல்டரைத் தடவுறவங்களைத் தடை பண்ணணும் பாஸ். ரொம்ப இம்சை பண்றாங்க.

தயாரிப்பாளர் கோபி : செல்போனைக் கொண்டு போக தடை போடணும் பாஸ் முதல் வேலையா.

யோகேஷ் : ரொம்ப மொக்கையா இருந்தா ரெண்டாவது நாள் அந்தப் படத்தையே தடை பண்ணிட்டா செமையா இருக்கும். 

பதில் சொல்லுங்க பாஸ்!

நம் ஊர் அரசியல்வாதிகள், இளைஞர்களைக் கவர இனி என்ன செய்யணும்...?

பாண்டி : பெருசாலாம் ஒண்ணும் வேணாம், இனிமேலாவது நல்லது பண்ணாலே போதும் பாஸ்.

சரவணன் : இன்ஜினீயரிங் படிச்சவங்களுக்குக் கண்டிப்பா வேலைனு சொல்லிட்டா, அவங்கதான் அடுத்த முதல்வர்.

கீதா : புதுசா எதுவும் செய்ய வேணாம் பாஸ், ஏற்கெனவே அவங்க சொன்னதைச் செஞ்சாலே போதும்.

பாலா : ஃபேஸ்புக்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சு புரட்சிகரமான கருத்துகளைப் பேசினாதான் இனி இளைஞர்களைக் கவர முடியும்னு நினைக்கேன்.

பிரபு : எனக்கு ஒரு போஸ்ட்டிங் போட்டுக் கொடுத்து என்னையும் அரசியல்வாதியா ஆக்கணும்னு கேட்பேன்.