Published:Updated:

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

``ஜல்லிக்கட்டு மைதானத்தில் காளையை அடக்கிக் கொண்டிருந்த வினித், கடைசியில்தான் அதைக் கவனித்தான்...''

- இந்த ஒரு வரியை டெவலப் செய்து, டைம் பாஸ் வாசகர்கள் சொன்ன குட்டிக்கதைகள் இதோ...

கதை விடுறாங்க!

கார்த்திக் கிருஷ்ணா : காளையை அடக்க ஓடும் சமயம் கீழே எறும்புகளைக் கவனித்தான். அதை மிதிக்கக் கூடாது என ரொம்பக் கவனமாக செயல்பட்டான். ஏன்னா நாங்கள்லாம் ஈ, எறும்புக்குக்கூட கெடுதல் நினைக்க மாட்டோம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ராஜா : கடைசியில்தான் கவனித்தான். அது காளை இல்லை பசு மாடு என்று! அவ்வ்வ்வ்.

வினோத் : அது தன் காதலி வீட்டுக்காளை என்று! அப்புறம் காளையை அடக்கி வருங்கால மாமனார் கையால் தங்கச்செயின் வாங்கினான்.

ஹரீஷ் : காளையோட உடம்புல 'சின்னம்மா வாழ்க!' என்று எழுதி இருந்தது. அடப்பாவிகளா! காளையையும் விட்டுவைக்கலயா என நினைத்தபடி ஏறு தழுவ ஆரம்பித்தான்.

கனிமொழி : காளையின் திமிலில் கட்டப்பட்டிருந்தது செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பணப்பை. உடனே காளையில் இருந்து தனது பிடியைத் தளர்த்திவிட்டு ஒதுங்கிவிட்டான்.

அருண்குமார் :
`டேக் ஓகே' என சத்தம் கேட்டது. ஒருவழியாக இயக்குநர் ஷாட்டை ஓகே செய்துவிட்டார் என்ற சந்தோசத்துடன் கிரீன்மேட் போட்டிருந்த காளை பொம்மையிலிருந்து கீழே இறங்கினான்.

சரவணன் : காளைக்கு இரண்டு வால் இருந்தது. சடாரென தூக்கத்திலிருந்து கண் விழித்தான். `கனவுன்னாலும் ஒரு லாஜிக் வேண்டாமா!' என மைண்ட் வாய்ஸ் கேட்டது.