Published:Updated:

சல்ஃபி கானா!

சல்ஃபி கானா!
பிரீமியம் ஸ்டோரி
News
சல்ஃபி கானா!

சல்ஃபி கானா!

மீபத்தில் ‘ஊர்வசி... ஊர்வசி...’ பாடலுக்கு வரிகளை மாற்றிப் பாடியிருக்கிறார் இசைப்புயல். நம்ம பங்குக்கு உல்டா அடித்த ‘ஊர்வசி... ஊர்வசி...’ இது.

சல்ஃபி கானா!

ஊர்வசி ஊர்வசி... டேக் இட் ஈசி ஊர்வசி.
4ஜி வை-ஃபை பக்கத்தில் இருந்தா, நீயும் நானும் டோன்ட் வொர்ரி.

ஊர்வசி ஊர்வசி... டேக் இட் ஈசி ஊர்வசி.
4ஜி வை-ஃபை பக்கத்தில் இருந்தா, நீயும் நானும் டோன்ட் வொர்ரி.

டி.பி மாத்தியும், லைக் வரலைனா... டேக் இட் ஈசி ஊர்வசி.
கடலை போட்டே பேலன்ஸ் காலியா... வாலிபம் ஒரு ஃபேன்டசி.

ஊர்வசி ஊர்வசி... டேக் இட் ஈசி ஊர்வசி.
4ஜி வை-ஃபை பக்கத்தில் இருந்தா, நீயும் நானும் டோன்ட்வொர்ரி.

தாவிடும் மயிலே மயிலே..
இன்பாக்ஸிலே கேட்குது முத்த சத்தம்; அறியுமா உலகே உலகே...
ப்ளாக்கை எடுடி குறைந்தபட்சம்.

அன்ஃப்ரெண்டும் கேஷுவல்தான்...
டேக் இட் ஈசி ஊர்வசி..
பேச்சுலர்... வாழ்க்கையில்...
லவ்வெல்லாம் ஒரு ஃபேன்டசி...

கலாய்க்கும்போது கவுன்ட்டர் வாங்கினா... டேக் இட் ஈசி பாலிசி.
கொளுத்தும் வெயிலில் கரன்ட்டு போனா... டேக் இட் ஈசி ஊர்வசி.
ஃபிகரு முன்னால் பல்பு வாங்கினா... டேக் இட் ஈசி பாலிசி.
ரீ-வேல்யூஷன் போட்டும் பன்னு கருகினா... டேக் இட் ஈசி ஊர்வசி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சல்ஃபி கானா!

டேமேஜரு... திட்டினா
டேக் இட் ஈசி பாலிசி...
ஃபாஸ்ட்புட் வாழ்க்கையில்
நூடுல்ஸ்தான் ஃபேன்டசி...

காலேஜ் போயும் கேர்ள் ஃப்ரெண்ட் இல்லையா... டேக் இட் ஈசி பாலிசி.
ஸ்கைப் காலில் சிக்னல் போனா ... டேக் இட் ஈசி ஊர்வசி.
புரொஃபைல் பிக்சர்க்கே கலவரமானா... மாத்திடு நீ பிரைவசி.
பாட்ஷா படத்தில் பவர்ஸ்டார் நடிச்சா... டேக் இட் ஈசி பாலிசி.

ஃபிகருக்கு ரெக்வெஸ்ட் கொடுக்காமல்
கமென்ட்டில் மட்டும் பேசி என்ன பயன்
கலங்கடிக்கும் டி.பி மாற்றாமல்
செல்ஃபிகள் எடுத்தும் என்ன பயன்?

- விக்கி